Tuesday, March 1, 2022

மிதுனம்:2022 மார்ச் மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் ஒன்பதாமிடத்தில் அதிநட்பு நிலையில் குருவுடன் இணைந்து சுபத்துவமாக இருந்தாலும், யோகாதிபதி சனியும் சுக்கிரனும் எட்டில் மறைந்து செவ்வாயுடன் இருப்பது சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் எதுவும் எல்லை மீறாது. மார்ச் மாதம் உங்களுக்கு மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும்.

உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ சனி தருவார். எட்டில் சனி, செவ்வாய் இணைவது சுற்றியிருப்பவர்கள் உங்களை வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். எதற்கும் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். நிதானமாக இருங்கள். ஆயினும் பாபர்கள் இருவரும் சுக்கிரனால் சுபத்துவப் படுத்தப் படுவதால் தொல்லைகள் இருக்காது. மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாமிடத்திற்கு மாறுவதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

மாதம் முழுவதும் புதன் நல்ல நிலையிலேயே இருக்கிறார். அஷ்டமச் சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை விரைவில் மாறும். மிதுனத்திற்கு அடுத்த மாதம் முதல் மிக நல்ல பலன்கள் உண்டு.  மூன்றாமதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைவதால் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு கிடைக்காமல் போகும். இருந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் தனி ஒருவராகவே சாதித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும் என்பதால் மார்ச் மாதம் பெரிய சோதனைகளைக் கொடுக்காத மாதம்தான். 

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 26-ம் தேதி இரவு 8.28 மணி முதல் 28-ம்தேதி இரவு 11.54 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.  

No comments :

Post a Comment