Tuesday, March 1, 2022

ரிஷபம்: 2022 மார்ச் மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

ரிஷபம்:

மார்ச் மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் இரண்டு பெரும் பாபர்களான செவ்வாய் சனியுடன் இணைந்திருப்பது ரிஷப ராசிக்கு சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். உங்களில் சிலருக்கு பிடிக்காத ஒன்றை சகித்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற நிலைமையும் ஏற்படும். உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை இந்த மாதம் மட்டும்தான். என்ன இருந்தாலும் சுக்கிரன் நட்பு வீட்டில் இருப்பதால் சமரசங்களிலும், நீங்கள் நிறைவுகளை பெறுகின்ற மாதம் இது.

அதேநேரத்தில் ராசிநாதன் சுக்கிரன் நட்புநிலையில் ஒன்பதாம் வீட்டில் நண்பருடன் இருப்பது யோக அமைப்பு. எனவே மாதத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள் இருக்காது. குறிப்பாக கடன் தொல்லைகள் இருக்காது. பணவரவிற்கு காரணமான புதன் குருவுடன் சுபத்துவமாக இருப்பதால் பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். முற்பகுதியிலும், பின்னாலும் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள்.

உச்ச செவ்வாயுடன் சுக்கிரன் இணைந்தே பயணிப்பதால் பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சுக்கிரனின் நட்பு பலம் நல்லவைகளைத் தரும். எதற்கும் அதிகமுயற்சி தேவைப்படும். பத்தாமிடம் வலுவாக இருப்பதால் வேலை, தொழிலுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு  விருப்பமில்லாத அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.

5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி மாலை 5.29 மணி முதல் 26-ம் தேதி இரவு 8.28 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். 

No comments :

Post a Comment