Tuesday, November 2, 2021

சிம்மம்: 2021 நவம்பர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் யோகாதிபதி செவ்வாயுடன் இணைந்திருப்பதால் சிம்மத்திற்கு இது நல்ல மாதமே. ஆயினும் மாத ஆரம்பத்தில் சூரியன் நீச்ச நிலையில் இருப்பதால் கிடைக்கின்ற நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இருக்கும். ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற மனக்கலக்கம் இப்போது உங்களுக்கு இருக்கும். கடும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றிகள் வரும். வேலை, தொழில் இடங்களில் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். மாத பிற்பகுதியில் எதிலும் நல்ல பலன்களும், முற்பகுதியில் அதிக முயற்சியும் தேவைப்படும்.

இந்த மாதம் முதல் குருபகவான் ஏழில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். சிம்மத்திற்கு மிகவும் நன்மை தரும் அமைப்பு இது. மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் இருக்கும். வேலைக்கு செல்லும் மனைவியால் நன்மைகள் உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இது நல்ல மாதம். சுக்கிரன் குருவின் வீட்டில் சுபவலுவாக உள்ளதால் திறமையை வைத்துத் தொழில் செய்பவர்கள், புத்திசாலித்தனத்தை முதலீடாக வைத்திருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவருக்கு நன்மைகள்  இருக்கும்.

கூட்டுத் தொழிலில் கசப்புக்கள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது. பங்கு பிரிப்பது, தனிக்குடித்தனம் போவது போன்றவைகள் இப்போது கூடாது. தேவையின்றி எவருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள். சகோதரர்கள், பங்காளி போன்ற உறவினர்களிடம் விரோதம் வரும் மாதம் இது. அலுவலகத்திலும் உங்களுடைய பேச்சால் சில வீண் விரோதங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். கடன்தொல்லை எல்லை மீறாது. வயதானவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகமாகும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். சூரியன் நீசபங்கமாக இருப்பதால் தந்தை வழியில் நன்மைகளும்,பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. நீண்டதூர பிரயாணங்கள் இருக்கும். எதிலும் நம்பிக்கை இழந்தவர்களுக்கு இப்போது நம்பிக்கையூட்டும் சம்பவங்கள் நடக்கும். சுயதொழில் செய்வோர் கொஞ்சம் கஷ்டப்படத்தான் செய்வீரகள். ஆனால் தொழிலில் காலூன்றுவீர்கள்.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ம் தேதி காலை 10.11 முதல் 16-ம் தேதி இரவு 8.14 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.    

No comments :

Post a Comment