Tuesday, November 2, 2021

கன்னி: 2021 நவம்பர் மாத ராசி பலன்கள்

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

கன்னி:

மாத ஆரம்பத்தில் யோகாதிபதிகள் சனியும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் இது கன்னிக்கு யோகமான மாதம்தான். உங்களில் சிலருக்கு இந்த மாதம் பொருளாதார மேன்மையும் இருக்கும். விரையாதிபதி சூரியன் நீசபங்க அமைப்பில் இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உங்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் உதவக்கூடிய தகுதியுடனும், மனதுடனும் இருப்பார்கள். வேலை இடங்களில் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள்.

அரசு ஊழியர்கள், தனியார்துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொதுவாழ்க்கையில் இருப்போர், மக்கள் பிரதிநிதிகள் போன்றவருக்கு பணவரவும், அந்தஸ்து, கௌரவமும் கிடைக்கும். நிலுவையில் இருந்த சொத்துப் பிரச்னை சாதகமாக தீரும். தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் ஜாலியான அனுபவங்கள் இருக்கும். படிப்பைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்வீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சமுதாயத்தில் அனைத்து தரப்பு கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை இருக்கும்.

குடும்பத்துப் பிரச்னைகளில் பொறுத்துப் போவதன் மூலம் பிரச்னை இருக்காது என்பதால் பொறுமை காட்டுங்கள். நவம்பர் முதல் குரு ஆறில் மறைவதால் குறுக்குவழி சிந்தனைகள் வேண்டாம். அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு கடல் தாண்டிப் போகும் பயணங்கள் இருக்கும். டிராவல்ஸ் தொழில் நடத்துபவர்கள், டிரைவர் போன்ற இயக்கும் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நன்மைகளைத் தரும். சிலருக்கு ஆன்மிக எண்ணங்களும் எதிர்கால முன்னேற்றத்திற்கான திட்டங்கள் மனதில் வருவதும் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் உண்டு. அதிர்ஷ்டம் கை கொடுக்கும். இதுவரை நிறைவேறாமல் இருக்கும் நியாயமான, நேர்மையான விஷயங்கள் நிறைவேறும். வேலை செய்யும் இடங்களில் தொந்தரவுகள் இருக்காது. வியாபாரம் முன்னேறும்  தொழில் சிறக்கும். திருமணம் ஆகாதவருக்கு உறுதி ஆகும். சிலருக்கு புத்திரபாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் இருக்கும்.

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 16-ம்தேதி இரவு 8.14 முதல் 19-ம் தேதி காலை 8.13 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது. 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும். 

No comments :

Post a Comment