கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
ராசிநாதன் சனி பனிரெண்டாமிடத்தில் வலுவாக ஆட்சி நிலையில் இருப்பதால் இது கும்பத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். கூடவே லாப ஸ்தானத்தில் சுக்கிரனும் பலமாக இருப்பதால் நவம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. உங்களில் சிலருக்கு தற்போது வேலை, தொழில், அமைப்புகளில் இருக்கும் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் இனி மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.
சிலருக்கு முதல்
திருமண தொடர்புகளின் மூலம் நிம்மதியற்ற சூழல்கள் இருக்கும். நாற்பது வயதைக்
கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.
சகோதர உறவு சற்று முன்பின்னாகத்தான் இருக்கும். பங்காளிகளை நம்ப வேண்டாம்.
வருமானத்திற்கு குறைவு இருக்காது. பணப்புழக்கம் கையில் இருக்கும். பணம் புரளும்
இடங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் மதிப்பு, மரியாதைகளை
பெறுவார்கள். சுடச்சுடத்தான் தங்கம் பொலிவு பெறும் என்பது போல கடந்த இரண்டு
வருடங்களில் உங்களுக்கு கிடைத்த அனுபவங்களால் இனிமேல் முன்னேற்றமான வாழ்க்கையை
அமைத்துக் கொள்வீர்கள். தாயார் வழியில் நன்மைகளும், சிலருக்கு
வாகன மாற்றங்களும் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும்
நல்ல வருமானம் இருக்கும். அறிமுகமற்றவர்களை எதிலும் நம்பி விடாதீர்கள். புதிய
நண்பர்களால் பிரச்னைகள் வரும். கவனம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment