ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மீனம்:
நவம்பர் முதல் மீன ராசிக்காரர்களின் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். குறிப்பாக கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. ராசிநாதன் குருபகவான் இனிமேல் நீச்ச நிலை விலகப் போவதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. நீச்ச குருவால் கடந்த சில மாதங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். சனிபகவான் யோகம் தரும் இடத்தில் இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சிறப்பான ஒரு நிலையை மீனத்தினர் அடையப் போகிறீர்கள்.
நவம்பர் மாதம்
முழுவதும் எட்டில் செவ்வாய் அமர்வதால் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து
எவரையும் பேசிவிட வேண்டாம். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. வெகு நாட்களுக்கு
பிறகு இப்போது பொருளாதார நிலைமை மேம்படும். கையில் பணம் இல்லாமல் இருந்த நிலை
மாறும். செலவிற்கு அடுத்தவர் கையை நம்பியிருந்த நிலைமை மாறி சொந்தமாக
சம்பாதிப்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டு விஷயங்கள்
லாபம் தரும். சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். சுக்கிரன் வலுப்
பெறுவதால் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்டநாட்களாக
சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும். பொன், பொருள்
சேர்க்கை ஏதேனும் உண்டு. கலைஞர்களுக்கு இது நல்லகாலமாக அமையும். சிறு கலைஞர்கள் பிரபலமாவற்குரிய
வாய்ப்புகள் இருக்கின்றன. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது
நல்லது.
கிரகநிலைகள் சாதகமாக
இருப்பதால் மீன ராசிக்காரர்கள் உற்சாகத்துடனும், செயல்
திறனுடனும் காணப்படுவீர்கள். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய
ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே.
காவல்துறையினருக்கு திருப்பங்கள் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை
காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும்.
விவசாயிகள்,
வியாபாரிகள்
போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம்
போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். தந்தையைப் பற்றியோ
தந்தைவழி உறவினர்கள் பற்றியோ கவலைகள் வரும். வயதான தந்தையை கொண்டவர்கள் அவருடைய
ஆரோக்கியத்தில் அக்கறை வைக்க வேண்டும்.
1,2,3,7,10,11,16,17 ஆகிய
நாட்களில் பணம் வரும். 3-ம்தேதி இரவு 8.53 முதல் 5-ம் தேதி இரவு 9.04 வரை
சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை
தவிர்ப்பது நல்லது. ஆயினும் சந்திரன் சுப நிலையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும்
நடக்காது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment