ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
கன்னி:
அக்டோபர் மாதம் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் தனது நண்பரான சூரியனுடன் இணைந்து உச்ச நிலையிலும், குருவின் பார்வையிலும் இருக்கிறார். மாதம் முழுவதும் புதனின் உச்ச நிலை நீடிப்பதால் கன்னி நன்மை பெறும். அக்டோபர் கன்னிக்கு நன்மைகளை தருகின்ற மாதம். இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். ராசிநாதனின் வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருப்பவருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு.
சுக்கிரன் மூன்றில் கேதுவுடன்
இணைந்திருப்பதால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள்
விஷயத்தில் லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள்
கருத்து வேறுபாடுகள் வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது
என்பதால் முக்கியமான விஷயங்களில் தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது
நல்லது. சூரியன் நீசமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள்.
அப்பாவின் ஆதரவு கிடைப்பது கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக
வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள்
வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20 -ம்தேதி பகல் 2.01 முதல் 23-ம் தேதி அதிகாலை 1.38 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பதும் நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment