Friday, January 22, 2021

மிதுனம்: 2021 பிப்ரவரி மாத ராசி பலன்கள்

 ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

மிதுனம்:

இரண்டு சுபக்கிரகங்களான சுக்கிரனும், குருவும் ஒன்று சேர்ந்து எட்டாமிட சனியை சுபத்துவப் படுத்துவதால் நீங்கள் தெளிவான மனதுடனும், முடிவெடுக்கும் திறனுடனும் இருக்கும் மாதம் இது. அதேநேரத்தில் சனி எட்டில் அமர்ந்து இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களில் சிலரின் வருமானங்கள் குறைந்து நிதிநிலைமை பாதிக்கப்பட்டாலும் தனகாரகனான குருவின் பார்வையும்  இரண்டாமிடத்திற்கு இருப்பதால் குறைகள் எதுவும் இருக்காது.

அஷ்டமச்சனி நடப்பதால் உங்களில் சிலருக்கு அதிர்ஷ்டத் தடைகளும், வர வேண்டிய தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச் சங்கடங்களும் இருக்கும். ராசிநாதன் வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால் எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. பணியில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரும் காலம் இது.

புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அதிகப் பணம் முதலீடு செய்து தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. ஆறு, பனிரண்டில்  ராகு-கேதுக்கள் சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.

2,4,5,8,9,10,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம்தேதி இரவு 8.30 முதல் 12-ம்தேதி அதிகாலை 2.10 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் அனைத்தையும் தவிர்ப்பது நல்லது. சந்திரன் எட்டில் இருக்கும் நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் இந்த நாட்களில் எவரிடமும் வாக்குவாதம் தவிர்ப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment