கைப்பேசி : +91 8286 99 8888
ரிஷபம்:
ராசியில் ராகு இருப்பதால் ரிஷப ராசிக்காரர்கள் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற மனநிலையில் இருக்கின்ற மாதம் இது. சிலருக்கு எல்லா நிலைகளிலும் தயக்கங்களும், எதிலும் ஒரு குழப்ப நிலையும் இருக்கும். மாத பிற்பகுதியில் கிரகங்கள் சாதகமான அமைப்பில் மாறுவதால் இந்த மாதத்தின் 15-ம் தேதிக்கு பிறகு முன்னேற்றமான போக்கை எதிர் கொள்வீர்கள். எட்டுக்குடைய குரு நீச்சபங்க நிலையில் இருப்பதால் எதிலும் ஒரு மந்தநிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். அதேநேரத்தில் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரன் வலுவடைவதால் பெண்களால் சந்தோஷங்களும், குறிப்பாக வேற்று மத, இன, மொழி இளம் பெண்களால் சுகங்களும் இருக்கும்.
இந்த மாதம் கடன்
பிரச்னைகள் லேசாக எட்டிப் பார்க்கும். அதேநேரத்தில் கடன் உங்களின்
கட்டுப்பாட்டுக்குள்ளும் இருக்கும். உங்கள் தோளில் கை போட்டபடி டீ சாப்பிடும்
நண்பர் இன்னொரு கையால் உங்களுக்கு ஆகாதவரின் கையை குலுக்குவார். கவனமாக இருங்கள்.
தேவையற்ற செலவு இருக்கும். மறைமுக எதிர்ப்புக்கள் மேலோங்கும். வம்பு வழக்கு
ஏதேனும் வரலாம். கணவன், மனைவிக்கு இடையே
சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வரும். மூன்றாம் மனிதரின் கோள்மூட்டலை நம்பி
ஒருவருக்கொருவர் மனச்சங்கடத்திலும் இருப்பீர்கள்.
செய்யும் வேலையில் லாபங்கள் குறைவாக இருக்கும். சிலருக்கு வரவு எட்டணா, செலவு பத்தணா என்ற அமைப்பும் உண்டு. இன்னும் சிலருக்கோ அலைச்சல்கள்தான்
மிச்சம். காரியம் கை கூடவில்லை என்ற மனத்தாங்கல்களில் இருப்பீர்கள். ராசி குருவின் பார்வையில்
இருப்பதால் அந்தஸ்து கௌரவம் கூடும்படியான செயல்கள் இருக்கும். பொதுஇடத்தில்
மதிப்பும், பாராட்டும்
கிடைக்கப் பெறுவீர்கள். என்னதான் பிரச்னை என்றாலும் சுக்கிரனும் புதனும் வலுவாக இருப்பதால்
அனைத்தும் சூரியனைக் கண்ட பனிபோல மறைந்து எல்லாவற்றையும் தனி ஆளாக நீங்கள் ஒருவரே
சமாளிப்பீர்கள் என்பது உறுதி. பெண்களுக்கு குறைகள்
ஏதும் இல்லை. அம்மா வழி ஆதரவும் ஆசிகளும் உண்டு. பிள்ளைகளால் நல்ல விஷயங்களும், தொலைதூரங்களில் இருக்கும் பிள்ளைகளிடம் இருந்து நல்ல செய்திகளும் கிடைக்கும்.
3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 7-ம்தேதி மாலை 4.14 முதல் 9-ம் தேதி இரவு 8.30
வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும்
இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும்
என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment