கன்னி:
கன்னிக்கு இது மேன்மையான மாதம்தான். ஜூலை மாதத்தில் உங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மைகள் மட்டுமே இருக்கும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில் மேன்மை, தன லாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் உண்டு. மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு செயலையும் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். சிலருக்கு மாத முற்பகுதியில் நல்ல பலன்கள் இருக்கும். பிற்பகுதியில் சிறிது அலைச்சல்கள், காரியத் தடங்கல்கள் இருந்தாலும் மாதம் முடிந்த பிறகு அனைத்தும் நல்லவிதமாக முடிவுக்கு வரும்.
வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். ராசிநாதன் புதன் நல்லநிலையில் இருப்பதால் ஜூலை மாதம் எவ்வித கெடுதல்களையும் செய்யாது. தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் பெருகும். கடந்த காலங்களில் இருந்த சிக்கல்கள் இனிமேல் இருக்காது.
மாணவர்களுக்கு இது நல்ல ஜாலியான மாதம். படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். சிலர் நல்ல வீட்டில் குடி போவீர்கள். பணவரவு இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் நன்மைகளை அடைவீர்கள் திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றங்கள் உண்டு. வாழ்க்கைத்துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவீர்கள். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். பெண்களால் லாபம் உண்டு. சகோதரிகள் உதவுவார்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நல்லபடியாக முடியும். அனாவசிய செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கடன் பிரச்சனைகள் தொந்தரவுகள் தராது.
1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி மதியம் 3.42 மணி முதல் 27-ம்தேதி அதிகாலை 1.09 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment