துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் வலுவான அமைப்பில் மாதம் முழுவதும் நட்பு வீடுகளில் இருப்பதால், உங்களில் சிலருக்கு இருந்து வரும் நிச்சயமற்ற வேலை அமைப்புகளும், லாபங்களைத் தராத தொழில் அமைப்புகளும் மாறி நல்ல விதமான பணவரவும் லாபங்களும் இனிமேல் கிடைக்கத் துவங்கும்.. சிலருக்கு ஜூலை மாதத்தில் தொழில்ரீதியான பயணங்கள் அதிகமாக இருக்கும். வெளிமாநிலங்களுக்குச் செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் எதுவும் வராது. வீட்டிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதி இருக்கும்.
ஜூலை மாதம் துலாத்தினருக்கு தொழில், குடும்ப விஷயங்களில் நல்லவைகள் நடக்கும். மாத ஆரம்பத்திலேயே யோக அமைப்புக்கள் உண்டாவதால் இதுவரை உங்களை முடக்கிப் போட்டுக் கொண்டு இருந்த எதிர்ப்புகள் விலகும். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். உடல்நலக் குறைவாக இருந்தவர்கள் நலம் கிடைக்கப் பெறுவார்கள். தென்னாடுடைய சிவனாகிய ஈசனின் பூரண அருளுடன் பிறந்த நீங்கள் எல்லா சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இப்போது முழுமையாகக் கிடைப்பதால் எடுத்த காரியம் வெற்றி பெறும். நம்பிக்கையை கை விடாதீர்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும். சிலருக்கு அதிகமான ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். குருவின் பத்தாமிட பார்வையால் வீட்டில் பொன், பொருள், சேர்க்கை உண்டாகும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை நல்ல விதமாக செலவு செய்வது புத்திசாலித்தனம். வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
1,5,6,8,17,18,24,25,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம்தேதி அதிகாலை 1.09 மணி முதல் 29-ம்தேதி காலை 6.55 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய விஷயங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். யாரிடமும் கோபப்பட்டு பேசுவதும் இந்த நாட்களில் கூடாது.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment