Friday, April 19, 2019

சுக்கிரனின் பாப காரகத்துவம்...D-055


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சென்ற வாரக் கட்டுரையில் குறிப்பிட
ப்பட்ட ஆட்டிசம் குழந்தையின் ஜாதகத்தை நுணுக்கமாக கவனித்தால், இங்கே குழந்தையின் லக்னாதிபதியைக் குரு பார்ப்பது லக்னாதிபதியின் உயிர்க்காரகத்துவத்தை மேம்படுத்துமே தவிர ஜடக் காரகத்துவத்தை அல்ல.

இந்த ஜாதகத்தில் லக்னாதிபதி சனி, நீச்ச பங்கம் அடையாத சூரியனின் கடும் பகை வீட்டில் அமர்ந்து, அம்சத்தில் சூரியனோடு இணைந்து, அமாவாசையை நோக்கிப் போய்க் கொண்டுள்ள இருள் சந்திரனோடு இணைந்திருக்கிறார். இது லக்னத்தை கடுமையாகப் பாழ்படுத்தியுள்ள ஒரு அமைப்பு.

அடுத்ததாக, முதன்மை ஒளிக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் எத்தனைக்கெத்தனை வலுவாக இருக்கின்றனவோ அதன்படி ஜாதகரின் வாழ்வு நிலை அமையும் என்பதை அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இங்கே இவர்கள் இருவரும் நன்றாக இல்லை.

 

 

 

 

ல/

   23-10-2008

மதியம் 2-38 மதுரை

கே

ராகு

 சந், சனி

குரு

 

சுக்,

சூரி, செவ்,

புத,

சில நிலைகளில் நான் லக்னாதிபதியை விட, சூரிய, சந்திரர்களின் நிலையைக் கவனிப்பேன். அதற்காக என்னடா இது, ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியே முதன்மையானவர் என்று இவர் சொல்லிவிட்டு, தற்போது சூரிய, சந்திரர்களை முதலில் கவனிப்பேன் என்று சொல்கிறாரே என்று குழம்ப வேண்டாம்.

சுபத்துவ- சூட்சும வலுக் கோட்பாட்டின்படி எந்த ஒரு நிலையிலும் லக்னம், ராசி, லக்னாதிபதி, ராசிநாதன், சூரிய, சந்திர, மற்றும் சுபக் கிரகங்களின் ஒளித்தன்மை ஒரு ஜாதகருக்கு அவசியம் என்பதால், எங்கே, எதை, எப்போது பொருத்திப் பார்ப்பது என்பது அனுபவங்கள் அதிகமாகும்போது நன்கு புரியவரும்.

இதற்காகத்தான் ஒரு ஜாதகத்தில் சூரிய, சந்திரர்கள் தங்களுக்குள் கேந்திரங்களாவோ, ஜாதகத்திலும் கேந்திரங்களாவோ, இவை இரண்டும் அமைந்தோ உள்ள நிலை முதல் தரமானது என்பதை அடிக்கடி குறிப்பிடுகிறேன். அதோடு பௌர்ணமி நிலையில் பிறப்பவர் மிகவும் சிறப்பாகவே இருப்பார், அவருக்கு கஷ்டங்கள் வந்தாலும் மீண்டு வருவார் என்று நான் சொல்வதும் அதன் மிக முக்கிய எதிரெதிர் கேந்திர, சுப ஒளித்தன்மைக்காகத்தான்.

இந்த ஜாதகப்படி முதன்மை ஒளிக் கிரகங்களான சூரிய, சந்திரர்கள் ஒளித்தன்மை இழந்திருக்கும் நிலையில், அதாவது சூரியன் நீச்ச பங்கம் அடையாமல் சந்திரன் இன்னும் நான்கு நாட்களில் அமாவாசையாக உள்ள நிலையில் இவர்கள் இருவருமே கடும் பாபிகளா சனி, செவ்வாயின் இணைவைப் பெற்றிருக்கிறார்கள்.

தனது ஜென்ம விரோதியான சூரியனின் வீட்டில் சனி அமர்ந்து, இன்னொரு பகைவரான சந்திரனின் இனைவோடு லக்னத்தைப் பார்ப்பது குற்றம்.க்குறையை  நீக்குகின்ற குருவின் பார்வை மற்றும் சனியின் திக்பலம், ஜாதகரின் ஆயுள் எனும் உயிர்க் காரகத்துவத்தை மட்டும் தக்க வைக்குமே தவிர, ஜடக் காரகத்துவங்களான ஜாதகரின் அந்தஸ்து, கௌரவம், உலக ரீதியிலான வாழ்க்கையை அல்ல. அதாவது ஜாதகர் உயிருடன் இருப்பார் அவ்வளவுதான்.

அமாவாசையை நெருங்கிக்கொண்டிருக்கும் சந்திரன் எந்த பாவகத்தில் அமருகிறாரோ, அந்த பாவம் வலுவிழக்கும். அதேபோல எந்தக் கிரகத்துடன் அவர் இணைகிறாரோ அதனையும் பலம் இழக்கச் செய்வார். பூரண அமாவாசை சந்திரன் சனிக்கு நிகரான முழு பாபராவார். அதேபோல பூரண பவுர்ணமிச் சந்திரன் குருவிற்கு நிகரான முழுச் சுபராவார்.

அடுத்து சுக்கிரன் நான்காம் அதிபதியாகி, தனது வீட்டைத் தானே பார்க்கும் பொழுது தாயார் எப்படி சிறுவயதில் உயிரிழந்தார் என்பது இன்னும் சிலரது கேள்வி.

பாபத்துவம், சுபத்துவம் இவை இரண்டில் எது ஒன்றையொன்று விஞ்சி நிற்கிறது என்பதைக் கணக்கிடுவதே சுபத்துவ-சூட்சும வலுக் கோட்பாட்டின் உச்ச நிலையாக இருக்கும். இதைத்தான் சென்ற கட்டுரையில் சுபத்துவம், பாபத்துவம் சமப்படுத்தப்படும் புள்ளியில் ஆயுள் நிர்ணயிக்கப்படுகிறது என்று எழுதினேன்.

ஒரு பாவத்தோடு சனி, செவ்வாய், ராகு மூவரும் தொடர்பு கொள்ளும்போது அந்த பாவ பலன் ஜாதகருக்குக் கிடைக்காது என்பதை அடிக்கடி சொல்கிறேன். மூவரும் முழுமையான கெடுநிலையில் தொடர்பு கொள்ளும் நிலையில், அந்த பாவ பலன்கள் நிச்சயமாக ஜாதகருக்கு கிடைக்காது. மூவரில் இருவர் மட்டும்  சம்பந்தப்படும்போது பாவ பலன்கள் அரைகுறையாக அல்லது வேறு வழியில் கிடைக்கும்.

இந்த ஜாதகப்படி சனி, செவ்வாய் இருவரும் நான்காம் பாவத்தோடு தொடர்பு கொள்கிறார்கள். அதாவது சனி பத்தாம் பார்வையாகவும், செவ்வாய் எட்டாம் பார்வையாகவும் நான்காம் பாவகத்தை பார்க்கும் நிலையில், மாதாகாரகனான சந்திரன் கடுமையான இருள்தன்மையோடு சனியோடு இணைந்திருக்கிறார். இங்கே சந்திரன் வளர்பிறை நிலையில் இருந்திருப்பின் தாயாருக்கு மரணமில்லை.

கெடுநிலையில் உள்ள சனி, செவ்வாயின் பார்வைகளால், பாபத்துவம் அடைந்துள்ள நான்காம் பாவகத்தை திக்பலம் இழந்து, பகைவரா செவ்வாயின் வீட்டில் அமர்ந்திருக்கும் சுக்கிரனால் பலப்படுத்த இயலாது. இங்கே குருவின் பார்வை நான்காம் வீட்டிற்கு இருந்திருந்தால் தாயாருக்கு மரணம் இல்லை.

ஒரு கிரகத்திற்கு வீடு கொடுத்தவன் வலுவாக இருக்க வேண்டும் என்பதையும் அடிக்கடி எழுதுகிறேன். இதுவும் மிகவும் நுணுக்கமான ஒன்று. ஒரு கிரகம் நல்ல பலன்களை தர வேண்டுமெனில் அக்கிரகம் உச்சம், ஆட்சி பெற்ற கிரகங்களின் வீடுகளில் அமரவேண்டும். பாபரான சனி, செவ்வாயின் உச்சம், ஆட்சி நிலைகள் இதற்கு மட்டுமே பயன்படும் என்பதை எனது சுருக்கமான முதல் கட்டுரையான பாபக்கிரகங்களின் சூட்சுமவலு கோட்பாடு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஒரு கிரகம் நல்ல பலன்களை செய்வதற்கு அக்கோள் அமர்ந்த வீட்டின் அதிபதி வலிமையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ச்சனின் வீடுகளில் அமர்ந்த சுபத்துவ கிரகத்தின் தசை ஜாதகரை உயரத்திற்குக் கொண்டு செல்லும். கலைஞரின் ஜாதகத்தில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவரது ஜாதகப்படி சனி, செவ்வாய் இரண்டும் உச்சநிலையை அடைந்திருந்தாலும், விருச்சிகம், மகரம், கும்பத்தில் அமர்ந்திருந்த குரு, புதன், கேது தசைகளில்தான் அவரது அரசியல் வாழ்வின் உயர்நிலை அமைந்திருந்தது.

இங்கே மற்ற கிரகங்களின் பாபத்துவத்தின் முன்னால் தன் வீட்டைத் தானே பார்க்கும் அளவிற்கு சுக்கிரனின் பார்வை பலம் இல்லை என்பதே முக்கிய காரணம். அதே நேரத்தில் குழந்தையின் இரண்டரை வயதுவரை தாயார் உயிரோடு இருந்து சுக்கிரனின் பார்வை பலத்தால் மட்டுமே.

எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்பான சுக்கிரன் பாபத்துவத்தில் இருந்து விலகி வெகுதூரம் வந்து விட்டோம் என்பதால் மீண்டும் தலைப்பிற்கு திரும்புவோம்.

ஆட்டிசம் குழந்தையின் ஜாதகம் போலவே இந்தப் பெண்ணின் ஜாதகமும் தற்செயலாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் 17 வயது பெண்ணிற்கு கடக லக்னம், கும்ப ராசியாகி, சந்திரன் பூரண அமாவாசை நிலையில் குருவின் பார்வையில் அமர்ந்திருக்கிறார்.

சுக்

செவ்

சனி,ராகு

குரு

 

சூரி புத, சந் 

13-3-2002 மதியம்  

3-41 ஈரோடு  

ல/

 

 

 

  

  கேது  

 

 

லக்னத்தை சனி, செவ்வாய் இருவரும் பார்க்கிறார்கள். இங்கே செவ்வாயின் பார்வை சிறப்பான ஒன்று. ஒரு லக்னத்தின் ராஜயோகாதிபதியின் பார்வை எல்லா நிலைகளிலும் கெடுதல்களை தடுக்கும் கவசமாக செயல்படும் என்பதை ந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கடக லக்னத்திற்கு ராஜயோகாதிபதி செவ்வாயின் பார்வை, கார ரீதியாக கெடுபலனையும், ஆதிபத்திய ரீதியாக நல்லதையும் செய்யும்.

இந்த பெண் தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். உச்ச சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து கடுமையான பாபத்துவத்தைப் பெற்றிருக்கும் சனியின் தசை 14 வயதில் ஆரம்பித்ததிலிருந்து இவரது மனம் பருவத்திற்கு உரிய விஷயங்களில் செல்ல ஆரம்பித்துவிட்டது. இப்போது பெற்றோருக்கு இவர் கடுமையான தலைவலியாக இருக்கிறார். ஒரே பெண்ணாகிய இவரால் கடந்த மூன்று வருடங்களாக பெற்றோர்கள் தூக்கமில்லாமல் இருக்கிறார்கள். இந்தப்பெண்ணின் மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

சென்ற ஜாதகத்திற்கு நான் எழுதியதைப் போல உச்சனின் வீட்டில் அமர்ந்த கிரகம் நல்ல பலனைச் செய்யும் என்பதன் அடிப்படையில், இந்த சனி, இவருக்கு இப்பருவத்தின் நல்ல விஷயமான கல்லூரிப்படிப்பைத் தந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் சனி அமர்ந்த வீட்டின் காரகத்துவத்தின்படி இந்த வயதில் தேவையற்ற பிஞ்சிலேயே பழுத்த காதலைக் கொடுத்திருக்கிறார். அதிலும் அந்தக் காதல் வெளிப்படையாகத் தெரியும்படி இந்தப்பெண் நடந்துகொள்கிறார். முழுக்க முழுக்க ஆண் நண்பர்களின் நட்பில் மட்டுமே இந்தப் பெண்ணின் கவனம் செல்கிறது. அதற்கு தடையாக பெற்றோரே வந்தாலும் அவர்களை இவர் வெறுக்கிறார்.

உச்ச சுக்கிரனின் வீட்டில் சனி அமர்ந்ததால் இந்த பருவத்திற்கு உரிய படிப்பு இப் பெண்ணிற்கு பாதிக்கப்படாது. பெற்றோரின் துணையுடன் இந்தப் பெண் கல்லூரிப் படிப்பை முடிக்கவே செய்வார். ஆனால் அதற்குள் பெற்றோருக்கும் தன்னுடைய நல்ல பெயருக்கும் அவமானத்தைத் தேடிக் கொள்வார்.

பாபத்துவ சனி தன்னை மட்டுமே பார்க்கின்ற ஒரு இயல்பை ஜாதகருக்கு தருவார். தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் கவலை இல்லை, தன்னுடைய சுகம் மட்டுமே பிரதானம் என்று எண்ணுகின்ற ஒரு இயல்பை கடுமையான சனி கொடுப்பார். சனியின் முக்கிய குணமே சுயநலம் என்பதால், இங்கே சனியின் இயல்பு சுக்கிரனின் காரகத்துவத்தோடு சேர்ந்து நடக்கும்.

சனிதசை இவரை முழுக்க முழுக்க ஒழுக்கக்கேட்டிற்கு இட்டுச் செல்லுமா அல்லது வெறும் பேச்சோடு நிறுத்திக் கொள்வாரா என்பது லக்னாதிபதி மற்றும் ராசியின் பலம், பலவீனத்தை பொருத்தது. இந்த ஜாதகத்தை பொருத்தவரை லக்னாதிபதி சந்திரன், ராசிநாதன் சனி இருவருமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

முக்கியமாக சந்திரன் இருள் நிலையாகி, எட்டில் மறைந்து, குருவின் பார்வையில் இருக்கிறார். பார்க்கின்ற குருவிற்கு பார்வை பலம் குறைவாக இருக்கிறது. எனவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரும் சனி தசை, கேது புக்தி மற்றும் சுக்கிர புக்தி இந்த பெண்ணிற்கு மாறுபாடான கெடுபலன்களைச் செய்யும்.

இப்பெண்ணின் பெற்றோருக்கு இவ்விரண்டு புக்திகளும் மிகுந்த தலைவலியைக் கொடுப்பதாக இருக்கும். அடுத்து வரும் காலங்களில் பெற்றோருக்கு ஏழரைச் சனி, அஷ்டமச் சனி அல்லது 6-8 தசாபுக்திகள் நடந்தால் மிகுந்த மன அழுத்தத்தில் பெண்ணைப் பற்றிய கவலையில் இருப்பார்கள். சனியின் பார்வையைப் பெற்ற கேது, இப்பெண்ணிற்கு காமத்தை முழுமையாக அறிமுகப்படுத்துவார்.

பொதுவாகவே ராகு-கேதுக்கள் பாபத்துவமாக இருக்கும் நிலையில், பருவப் பெண்ணை பெற்றோரை விட்டு தூர நகர்த்தி, பெற்றோரின் கண்காணிப்பை தளர்த்த வைத்து ஒரு பெண்ணை முழுமையாக தவற வைப்பார்கள். து அவர்களுடைய தசா,புக்திகளில் நடக்கும். இதற்கு ராகு-கேதுக்கள் சனி, செவ்வாயின் தொடர்பில் அமர்ந்து, முற்றிலும் சுப அமைப்பில் இல்லாமல் இருக்க வேண்டும்.

இங்கே கேது, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து சனியின் பார்வையைப் பெற்றிருக்கிறார். குரு, சுக்கிர தொடர்புகள் கேதுவிற்கு இல்லை. ஏற்கனவே நான் சொன்னதைப் போல செவ்வாய், கேதுவை பார்ப்பது ஒரு பாதுகாப்பு. எனவே சுக்கிரனின் பாபத்துவ காரகமான இளவயது காமம், இப்பெண்ணிற்கு கேது புக்தியில் அறிமுகப்படுத்தப்படும். அதே வேளையில் பின்னாளில் இதுபோன்று நடந்து கொண்டோமே என்கின்ற ஒரு வகை குற்ற உணர்ச்சியை இவருக்கு கேது தருவார்.

அடுத்த அத்தியாயத்திலும் தொடருவோம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

3 comments :

  1. wonderful explanations. கிரகங்களின் படிநிலைகளை விளக்கும் (with example horoscopes) கட்டுரைகளை இன்னும் எதிர்பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  2. MY SON NAME :ASHWIN DATE :17.09.2000 TIME:10.40AM FUTURE?

    ReplyDelete