Wednesday, April 17, 2019

ஊரை விட்டு ஓடப் போகிறேன்..

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

வி. ஆறுமுகம், பாண்டிச்சேரி. 

கேள்வி. 

ஹார்டுவேர் வியாபாரம் செய்து வருகிறேன். பல ஆண்டுகளாக வியாபாரத்திலும் குடும்பத்திலும் இன்னல்களை அனுபவித்து வருகிறேன். வியாபாரம் சரியில்லை. குடும்பத்தில் அமைதியின்மை. எந்த முயற்சி எடுத்தாலும் தடங்கல், தாமதம். முதலீடு இல்லாமல் கடை வாடகை தர முடியவில்லை. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதால் உறவினர் மத்தியில் தலைகுனிவு. மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத நிலை. அறுவைச் சிகிச்சை. 5 லட்சம் கடன் உள்ளது. வட்டி கட்ட முடியவில்லை. அடிமேல் அடி விழுந்து இரவில் உறக்கம் இல்லை. எல்லா நாட்களும் சந்திராஷ்டமம் போல் உள்ளது. சில நேரங்களில் ஊரை விட்டு ஓடி விடலாம் என்று எண்ணுகிறேன். எனக்கு எப்போது விடிவுகாலம்? 

பதில். 

(விருச்சிக லக்னம், கடக ராசி, 5ல் ராகு, 6ல் சனி, 7ல் புத, 8ல் சூரி, சுக், செவ், 9ல் சந், 10ல் குரு, 11ல் கேது, 29-6-1968, மாலை 4-30, பாண்டிச்சேரி) 

ஐந்து லட்ச ரூபாய் கடனுக்காக ஊரைவிட்டு ஓடி விட வேண்டாம். ஐந்தாயிரம் கோடி கடன் வைத்துவிட்டு ஊரைவிட்டு ஓடினால் ஒரு நியாயம் இருக்கிறது. 5 லட்சம் கடனுக்காக ஊரை விட்டு ஓடினால் அந்தக் கடனுக்கும், கடனைக் கொடுத்தவருக்கும் அவமானம். 

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எட்டுக்குடைய புதனின் ஆயில்ய நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனின் தசை நடந்ததால் தொழில் மற்றும் குடும்பத்தில் மிகுந்த சிக்கல்களை சந்தித்திருப்பீர்கள். எட்டாம் அதிபதியின் நட்சத்திரத்தில் அமர்ந்த தசை கடன், நோய், எதிர்ப்புகளை மட்டுமே தரும் எனது கணிப்பின்படி உங்களது குடும்பத்தில் மனைவிக்கோ அல்லது குழந்தைகளுக்கோ விருச்சிகம், மேஷம் ஆகிய ராசிகள் இருக்க வேண்டும். 

கடந்த ஆறு ஆண்டு காலத்திற்கு மேல் விருச்சிகம், மேஷம் ஆகிய ராசியில் பிறந்தவர்களை குடும்ப உறுப்பினர்களாக கொண்ட குடும்பத் தலைவர்கள் கடுமையான கடன் தொல்லையிலும், தொழில் சரிவிலும் இருக்கிறார்கள். இந்த நிலைமை கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாறியிருக்கிறது. கவலைப்படாதீர்கள். நம்பிக்கையை விட்டு விடாதீர்கள். 

தற்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் செவ்வாய் தசையில், பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் புக்தி வரும் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பிக்கிறது. தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் குருவின் புக்தி முதல் உங்களுடைய தொழில் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படும். அடுத்த ஏப்ரல் முதல் தொழிலில் சம்பாதித்து கடனை நிச்சயமாக அடைக்க முடியும். குடும்பத்திலும் எவருக்கும் மருத்துவச் செலவுகள் இருக்காது. 

“காலுக்கு செருப்பு இல்லையே என்று ஏங்கினேன், காலை இல்லாதவனை பார்க்கும் வரை” என்பது ஒரு சீனப் பழமொழி. நம்மை விடவும் கஷ்டப்படுகிறவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணரும்போது, நமக்கு நடப்பதெல்லாம் சாதாரணம் என்பது புரியும் சுபத்துவம் பெற்ற லக்னாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதால் இந்த வருடம் தீபாவளி முதல் அனைத்தும் உங்களுக்கு சீராகும். 

ஒரு முறை அருகில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று வாருங்கள். உங்களைச்சுற்றி உங்களுடைய தொழில் இடங்கள், வாகனம், வீடு, படுக்கையறை, உங்களுடைய உடைகள் ஆகியவற்றில் பச்சை நிறம் அதிகமாக இருக்கும். அதனை மாற்றுங்கள். சிகப்பு நிறத்தை அதிகமாக உபயோகியுங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகிலிருக்கும் பழமையான முருகன் கோவிலுக்கு சென்று கடன் தீர வேண்டும் என்று முறையிட்டு வழிபடுங்கள். நான்கு வாரங்களில் மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். அடுத்த வருடம் இதேநாளில் நிம்மதியாக இருப்பீர்கள். தொழிலும் நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.

(16.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment