கீழே கடுமையான பாபத்துவ அமைப்பில் சுக்கிரன் இருக்கும்போது, வயதுக்கேற்ற வகையில் என்ன பலன்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக ஒரு பதினைந்து வயது சிறுவனின் ஜாதகத்தை கொடுத்திருக்கிறேன்.
இந்தச் சிறுவன் 13-9-2004 மாலை 5-15 க்கு சென்னையில் பிறந்திருக்கிறார். கும்ப லக்னம், சிம்மராசி அமைப்பைக் கொண்ட இந்தச் சிறுவன், சுக்கிரனின் பூரம் நட்சத்திரத்தில், சுக்கிர தசை ஏறத்தாழ 19 வருடங்கள் மீதி இருக்கும் நிலையில் பிறந்திருக்கிறார். அதாவது, இந்த சிறுவனின் 19 வயதுவரை இவரை சுக்கிரன் தன் ஆளுகைக்குள் வைத்திருப்பார்
|
ராகு, |
|
|
ல/ |
13-9-2004 5-15 மாலை சென்னை |
சுக், சனி, |
|
|
சந், சூரி, செவ்,புத, |
||
|
|
கே, |
குரு |
ஜோதிடத்தில்
உடுமகா தசை எனப்படும் தசா, புக்தி அமைப்பு
மிக முக்கியமானது. ஒரு கிரகம் எத்தகைய நன்மையை
அல்லது தீமையை செய்வதாக இருந்தாலும் அதனுடைய தசை, புக்தியில் மட்டுமே அதைச் செய்ய
முடியும்.
ஒரு கிரகம்
யோகம் தரும் நிலையில் இருந்தாலும், அதனுடைய தசை சரியான பருவத்தில்
வரவில்லை என்றால் அதனால் யோகத்தை தர இயலாது. அதுபோலவே துன்பத்தைத் தரக்கூடிய கிரகங்களின் தசை மனிதர்களுக்கு
வரவில்லை எனில் துன்பங்கள் இருக்காது.
மகரிஷி
பராசரர் இந்திய ஜோதிடத்திற்கு அளித்த மிகப்பெரிய சூட்சும நிலைக் கணக்கான இந்த மகா தசை அமைப்பு மொத்தம் 120 வருடங்கள் கொண்டதாக இருந்தாலும், மனித வாழ்க்கையின் மிக முக்கிய கட்டங்களான 60 வருடங்கள்
வரை, எவர் ஒருவருக்கு யோகமான நல்ல
கிரகங்களின் தசைகள் தொடர்ச்சியாக வருகிறதோ அவர் அதிர்ஷ்டசாலி என போற்றப்படுகிறார்.
ஜோதிடத்தை மூடநம்பிக்கை என்று குறை சொல்பவர்கள் கூட,
ஒரு மனிதனின் ஆயுளை 120 ஆகப் பிரித்து அவனுடைய
வாழ்க்கையில் எப்போது, என்ன சம்பவங்கள் நடக்கும் என்பதை அறிய மகரிஷி பராசரர்
கொடுத்திருக்கும் இந்தக் காலக்கணக்கின் நுட்பங்களைத் தெரிய வந்தால் மிகவும்
ஆச்சரியப்பட்டுப் போவார்கள்.
பூமியைச் சுற்றியுள்ள சூரியன் மற்றும் கிரகங்களின்
இயக்கத்தால் மனித வாழ்க்கை கட்டுப்படுத்தப்படுகிறது அல்லது இயக்கப்படுகிறது என்பதை
அறிந்த மகரிஷி பராசரர், அவைகள் எந்தக் காலகட்டத்தில், எப்படிப்பட்ட நிலையில்
மனிதர்களைப் பாதிக்கின்றன என்பதையும் மிகத் துல்லியமாகவே நமக்கு வகுத்துத்
தந்திருக்கிறார்.
தசா,புக்தி வருடங்களில் இருக்கும் மிகப்பெரிய
விஞ்ஞானக் கணக்கு என்னவெனில், நூற்றி இருபது வருடங்களாக பிரிக்கப்பட்டுள்ள ஒரு
மனிதனின் ஆயுள்காலத்தில், கேது தசை தொடங்கி, புதன் தசை வரை ஒன்பது கிரகங்களுக்கும்,
சமமற்ற ஒன்பது பங்குகளாக இந்த நூற்று இருபது வருடங்களும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
அதாவது கேதுவிற்கு 7, சுக்கிரன் 20, சூரியன் 6, சந்திரன் 10, செவ்வாய் 7, ராகு 18, குரு 16, சனி 19, புதன் 17 ஆகிய நூற்றி இருபது வருடங்கள் கிரகங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன
ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய வானவியல் கணக்கு
என்பதையும், அது சில கணித சமன்பாடுகளின் மூலம் மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் காலவியல்
விஞ்ஞானம் என்பதையும் அடிக்கடி எழுதி வருகிறேன்.
ஜோதிடத்தில் எந்த ஒரு கணிதமும் குருட்டாம் போக்குத்தனமானது
அல்ல. அனைத்தும் பகுத்தறிவாளர்கள் சொல்லி வரும் நவீன விஞ்ஞானத்தின் கணக்குகளை விட
மேம்பட்டதாகவே இருக்கின்றன. இன்னும் சொல்லப் போனால் விஞ்ஞானத்திற்கே சில அடிப்படை விஷயங்களைத் தந்ததும், ஒரு நிலையில்
ஜோதிடக் கணக்குகள் தான்.
அதில் ஒன்றாக, இந்த தசா, புக்தி அமைப்புகள்
பிரிக்கப்பட்ட விதத்தையும் சொல்லலாம். ஒன்பது கிரகங்களுக்கும் 120 வருடங்கள் பிரித்து அளிக்கப்பட விதம்
அந்த கிரகங்களின் சுற்றுப்பாதை, ஈர்ப்புவிசை, சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்றுப்
பிரதிபலிக்கும் திறன், பூமியோடு அது கொண்டிருக்கும் தொடர்பு ஆகியவற்றைக்
குறித்ததாக இருக்கலாம்.
அனைத்து கணக்குகளையும் கண்டுபிடிக்க முடிந்த நம்மால்,
இந்த தசா,புக்தி வருடங்கள் எப்படி பிரிக்கப்பட்டன என்பதை மட்டும்
இன்னும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இவற்றை அமைத்த மகரிஷி பராசரர் தவிர வேறு
எவரும் இதனை அறிய மாட்டார்கள். என்னைப் பொருத்தவரையில் கிரகங்களின் ஈர்ப்பு விசையையும்,
இன்னொன்றையும் சார்ந்தே தசா,புக்தி வருடக் கணக்குகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவே
கருதுகிறேன்.
தசா,புக்தி வருடங்கள் அமைக்கப்பட்டிருப்பதிலும் ஒரு
நுட்பம் ஒளிந்திருக்கிறது. பூமியை மையமாகக் கொண்டு கிரகங்களை இரண்டு பிரிவாக
பிரித்தால், பூமியின் வலதுபுறம் புதன், சுக்கிரன், சூரியன், சந்திரன் ஆகிய
கிரகங்களும், பூமியின் இடதுபுறம் அதாவது பூமிக்கு அப்பால், பூமியைத் தாண்டி
செவ்வாய், குரு, சனி, ஆகிய கிரகங்களும் அமையும்.
இவற்றில் நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களின் இருள் தன்மையின்
தாக்கம், மற்றும் தீவிரம், முறையே
கேதுவின் இருள் எல்லை புதனுக்கும், சுக்கிரனுக்கும் நடுவிலும், ராகுவின் வீரியம் செவ்வாய்க்கும்,
குருவிற்கும் மத்தியிலும் அமையும். அதாவது இந்த தூரத்தைத் தாண்டி ராகு,
கேதுக்களின் இருள்தன்மை செல்ல முடியாது. இந்த இடமே அவற்றின் எல்லை. இதனையே ராகு,கேதுக்களின் சுற்றுப்பாதை என்று கொள்ளலாம்.
இந்த ராகு-கேதுக்களின் நிலையையும் கணக்கில் கொண்டால்,
பூமி தவிர்த்து அமையும் கிரகங்களின் வரிசை
கீழே நான் குறிப்பிடுவது போல் அமையும்.
பூமியின் வலதுபுறம் புதன், கேது, சுக்கிரன், அதனையடுத்து
நம்முடைய பூமி, பிறகு நம்முடைய துணைக்கோளாகிய சந்திரன் (ஜோதிடத்தில் சில நிலைகளில்
சூரியன் என்பதை நம்முடைய பூமியாக மாற்றி உணர்ந்து கொண்டோமானால் சில சூட்சுமங்கள்
புரியும் என்று நான் ஏற்கனவே எழுதியிருப்பதன் அடிப்படையில் இங்கு சூரியன் என்பதை
பூமி என மாற்றிக் கொள்ள வேண்டும்.) ஆக மொத்தம் இந்த ஐந்து கிரகங்களின் தசாபுக்தி
வருடங்களாகிய 17, 7, 20, 6, 10 ஆகியவற்றைக் கூட்டினால் மொத்தம் 60 வருடங்கள் வரும்.
பூமிக்கு இடதுபுறம் அமைந்திருக்கும் கிரகங்களான செவ்வாய்,
ராகு, குரு, சனி ஆகிய நான்கு கிரகங்களின் ஆளுமை வருடங்களான 7, 18, 16, 19 ஆகியவற்றை கூட்டினால் 60 வருடங்கள் வரும். ஆக ஜோதிடத்தில் எந்த ஒரு விஷயமும்
குருட்டாம் போக்குத்தனமாக, மேம்போக்காக, உண்மைகள் இன்றி அமைக்கப்படவில்லை
என்பதற்கு தசா, புக்தி வருடங்களும்
எடுத்துக்காட்டாக அமையும்.
தசா,புக்தி காலத்தை ஒட்டியே மனிதனின்
வாழ்க்கைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஒரு கிரகம் எத்தகைய பாபத்துவ
அல்லது சுபத்துவ நிலையில் இருந்தாலும், அதனுடைய நல்ல, கெட்ட
பலன்களை முழுமையாக அதனுடைய தசையில் மட்டுமே தர முடியும். இரண்டாவது நிலையாக ஓரளவிற்கு மற்ற
கிரகங்களின் தசையில் அதனுடைய புக்தி வரும் போது தரும்.
எந்த ஒரு கிரகமும் தன்னுடைய முழுமையான காரகத்துவம்
மற்றும் ஆதிபத்தியத்தை அதனுடைய தசையில் மட்டுமே
அளிக்கும். எந்த ஒரு நிலையிலும் தசாநாதன்தான்
உயர்வானவன். தசைக்குள் அடங்கிய புக்திநாதன் அல்ல. தசாநாதனுக்கு கட்டுப்பட்டுத்தான் புக்திநாதன் இருக்க முடியுமே தவிர தசையை மீறி ஒரு புக்தி தன்னுடைய பலன்களைத் தந்து
விடாது.
உதாரணமாக ஒரு கும்ப லக்ன ஜாதகருக்கு இரண்டாம்
வீட்டில் பாபத்துவமாக அமர்ந்த
சந்திர தசை வருமாயின்,
தசை வந்தவுடன் 6-க்கு அதிபதி இரண்டாம் இடமான
தனம், வாக்கு,
குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்த காரணத்தினால் குடும்பத்தையும், தனத்தையும், ஜாதகரின்
வாக்கையும் கெடுக்கும் வேலைகளை செய்ய ஆரம்பிப்பார். சந்திர தசை ஆரம்பித்ததும் ஜாதகருக்கு மன
மாற்றங்களும்,
குடும்பத்தில் சில மாற்றங்களும் நடைபெற்று ஜாதகரின் குடும்பத்தை குலைக்கும் அல்லது பிரிக்கும் வேலைகளை சந்திரன்
செய்வார்.
சந்திரன் தேய்பிறை சந்திரனாகி, அமாவாசையை மிக நெருங்கி கொண்டிருக்கும்
வேளையிலும், குரு
பார்வை இல்லாத நிலையிலும், வேறு
வகையில் சந்திரனுக்கு சுபத்துவ அமைப்புகள்
இல்லாத நிலையிலும், நான் சொன்ன இந்த பலன்கள் ஒரு ஜாதகருக்கு உறுதியாக
நடந்தே தீரும்.
ஆனால் இதே சந்திரன்
வளர்பிறை சந்திரனாகி,
பௌர்ணமி நிலையில் அல்லது பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் போதும், போதிய
திறன் உடைய குருவின் பார்வையில் இருக்கும் பொழுதும் அல்லது சுக்கிரனின் தொடர்பில்
இருக்கும் போதும், மேற்கண்ட
குடும்பத்தை குலைக்கும், பிரிக்கும்
வேலைகளை சந்திரன் செய்யாமல் ஆறாமிடத்தில்
சுப பலன்களான எதிரியின் தனம், எதிர்பாராத தனம், நல்ல வேலை, அணுக்கமான
முதலாளி, திருட்டு வழிகளில் பணம் போன்ற பலன்களைச் செய்வார்.
உதாரண சிறுவனின் ஜாதகத்தில்
கும்ப லக்னமாகி, நடைபெறும் தசாநாதன்
சுக்கிரன் ஆறாமிடத்தில் பாபத்துவம் பெற்ற சனிக்கு 13
டிகிரிக்குள் நெருக்கமாகி, முழுக்க
முழுக்க பாப வலு அமைப்பில்
இருக்கிறார்.
ஒரு கிரகத்தின் பாபத்துவம் அல்லது சுபத்துவம் என்பது அதனை மேற்கண்ட நிலைக்கு உள்ளாக்கும்
கிரகங்களின் சுப, பாப வலுவைப் பொருத்தது. சனி, செவ்வாய்,
ராகுவுடன் சேரும் எந்த ஒரு சுப கிரகமும் மேற்கண்ட பாபக் கிரகங்களின் கடுமையான ஒளி இழப்பைப் பொருத்து,
அதிகமான பாபத்துவத்தை அடையும்.
இந்த சிறுவனின் ஜாதகத்தைப் பொருத்தவரையில் சுக்கிரனை கடுமையான பாபத்துவ
அமைப்பில் தள்ளிய சனி, தனது
ஜென்மப் பகைவரான சந்திரனின் வீட்டில் இருக்கிறார். நவாம்சத்தில், இன்னொரு கொடுமையான பாபரான ராகுவின் இணைவில்
இருக்கிறார்.
சனிக்கு வீடு கொடுத்த சந்திரனும், முழுக்க முழுக்க அமாவாசை அமைப்பில் இருள்
சந்திரனாக இருக்கிறார். ஆக
சனியின் கடுமையான பாபத்துவ அமைப்பில் இருந்து நோக்கும்போது, சுக்கிரன் எத்தனைக்கெத்தனை தன்னுடைய ஒளியை இழக்க
முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு ஒளி இழந்த நிலையில் ஆறாமிடத்தில் இருக்கிறார்.
ஆறாமிடம்
சுக்கிரனுக்கு பலவீனமான இடம் அல்ல. சுக்கிரன்
ஆறில் மறைய மாட்டார். ஆகவே
இது சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானம் இல்லை.
ஆனால் சனிக்கு எப்படி சந்திரன் கொடும் எதிரியோ, அதேபோல சுக்கிரனும், சந்திரனுக்கு எதிரியானதால் இங்கே, அதிக பாபத்துவம்
பெற்று, அமாவாசை நிலையில் உள்ள பகைவரின்
வீட்டில் அமர்ந்துள்ள சுக்கிரனும் நல்ல நிலையில் இல்லை.
இந்த ஜாதகத்தின் நுண்ணிய அமைப்புகளை ஏன் இவ்வளவு
விரிவாக சொல்லுகிறேன் என்றால், ஒரு கிரகத்தின்
கடுமையான பாபத்துவம் மற்றும் குறைவான பாபத்துவம், லேசான பாபத்துவம் போன்றவற்றை நீங்கள் புரிந்து
கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
இங்கே லக்னாதிபதியான சனி, சுக்கிரனின் இணைவால் ஓரளவு சுபத்துவம் அடைந்தாலும் அது அவரது சனிதசையில்தான் பலனளிக்கும். ஆனால் நடப்பு தசா நாதனான சுக்கிரன் கடுமையான பாபத்துவத்தில் தன்னுடைய இயற்கை ஒளியை இழந்து, இருள் கிரகங்களின் பூரண ஆக்கிரமிப்பில்
இருக்கிறார்.
எனவே இந்தச் சிறுவனுக்கு
14 வயது முதல் தன்னைவிட இரு மடங்கு அதிக வயதுள்ள
பெண்களின் நட்பும்,
தொடர்பும் கிடைத்து, இளம்வயதிலேயே
சுக்கிரன், இந்தச் சிறுவனை முதிர்ந்த
பெண்களுக்கு பகடைக்காயாக ஆக்கி விட்டார். ( சனி, வயதானவர்களைக் குறிப்பவர்)
சுக்கிரனின் முதல் நிலைக்
காரகத்துவமே காமம் என்பதால் அது என்னவென்று தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே,
இந்தச் சிறுவனுக்கு காமத்தின் பாபநிலையான தகுதியற்ற, முறையற்ற நிலை, மீசை முளைக்கும் பருவத்திலேயே அறிமுகப்படுத்தப் பட்டு விட்டது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
வணக்கம் குருஜி
ReplyDeleteதங்கள் கூறியது போல் எல்லா அரசரையும் குறை கூற முடியாதே. அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஒபாமா
அவர்களுக்கு ஒரே மனைவி. மேலும் அரசன் என்ற கூற்று அவர் சார்ந்த துறையில் அரசனாக என்றும் பொருள் கொள்ளலாம் அல்லவா . ஏ ஆர் ரஹ்மான் இளையராஜா சச்சின் டெண்டுல்கர் ரோஜர் பெடெரெர் சுந்தர் பிச்சை மன்மோகன் சிங் ஜோதிட கலைக்கு அரசரான தங்கள் உட்பட எல்லோரும் அரசர்களே ! அப்படி இருக்க கடக லக்கினத்தின் பாதக ஸ்தானத்தில் லக்கினாதிபதி உட்கார்ந்து இருப்பதும் கடக லக்கினத்தின் பகை கிரகம் கேந்திராதிபத்திய தோஷ அமைப்புடன் எழில் தனித்து அமர்ந்திருப்பது , மற்றும் தங்கள் அடிக்கடி கூறுவது போல் பௌர்ணமி யோகம் அல்லது அதற்கு அருகில் இல்லாமல் இருப்பது என சில குறைகள் உள்ளனவே . இது சிறந்த ஜாதகம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை அனால் கோடியில் ஒருவர் என்று கூறுவது தன் சற்று வியப்பாக உள்ளது. நன்றி.
Very very useful for all people's
ReplyDeleteThanking you