Thursday, February 28, 2019

மேஷம்- 2019 மார்ச் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

மேஷம் 

மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சியாக இருக்கின்ற யோக மாதம் இது. மேஷ ராசிக்காரர்கள் பலருக்கு முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். குறிப்பாக இளைஞர்களுக்கு இருக்கின்ற நிலையில் இருந்து மாறுகின்ற நல்ல அமைப்பும். நினைத்தது நடக்கின்ற நிலையும் இருக்கிறது. கேட்டது கிடைக்கும் என்பதால் மேஷத்தினர் எதிலும் தயங்காமல் முயற்சியை செய்ய வேண்டிய மாதம் இது. உங்களின் அனைத்துத் திறமைகளையும் மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். 

தொழில்துறையில் தேக்கநிலை மாறும். எதிர்ப்புகள் எல்லாவற்றையும் சுலபமாக சமாளிப்பீர்கள். கணவன்-மனைவி உறவில் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு ஏற்படும். இதுவரை மற்றவரை புரிந்து கொள்ளாதவர்கள். அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். என்ன பிரச்னை ஏற்பட்டாலும் அடிப்படை தேவைகள் நிறைவேறி விடும். அரசியல்வாதிகளுக்கு இது நல்லநேரம். மேலிடத்தின் பார்வையில் உங்களின் உழைப்பு தென்பட்டு பதவிகள் கிடைக்கும். 

என்னதான் இருந்தாலும் மேஷத்தினர் கோபக்காரர் என்பதால் ராசியில் இருக்கும் செவ்வாய் துடுக்குத்தனமான பேச்சைத் தருவார். எனவே வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. சனி, கேது ஒன்பதாம் வீட்டில் இணைவது பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தி விரயங்களைத் தரும் என்பதால் பாக்கெட்டில் இருந்து காசு எடுக்குமுன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள் சிலருக்கு வீடுகட்டுதல், இடம் வாங்குதல் புதுவாகனம் அமைதல், போன்ற சுபகாரிய செலவுகளும் உண்டு. கண்டிப்பாக செலவு செய்தே ஆகவேண்டிய விஷயங்களில் மட்டும் கவனத்தை செலுத்தி விரயங்களைத் தவிருங்கள். மாத பிற்பகுதியில் சுக்கிரன் பதினொன்றாம் இடத்திற்கு மாறுவதால் பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். 

1,3,7,8,10,11,17,18,20,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம்தேதி அதிகாலை 1.08 முதல் 27-ம்தேதி காலை 8.19 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ இந்த நாட்களில் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்றுக்கு இரண்டாக யோசிப்பது நல்லது.

No comments :

Post a Comment