Wednesday, October 10, 2018

பெண்ணிற்கு இரண்டாம் திருமணம் உண்டா?- குருஜியின் விளக்கம் astro jothidakkalai arasu adhithya guruji

கே. ராதா, ஆழ்வார் திருநகர்.

கேள்வி :

நான்கு வருடங்களுக்கு முன் என் அக்கா மகளுக்கு திருமணம் நடந்தது. நான்கு, ஐந்து மாதங்களில் பிரச்சினையாகி விட்டது. எனக்குத் தெரிந்த வகையில் பையன் குடும்பம் நல்ல குடும்பம். பையனும் சாது. ஆனால் என் அக்காவும், அவளது மூத்த பெண்ணும் கல்யாணப் பெண்ணிற்கு சொல்லிக் கொடுத்து தனிக்குடித்தனம் வரச்செய்து, அதன் பிறகு நடந்த சம்பவங்களுக்குப் பிறகு புருஷன் வீட்டிற்குப் போகாதே என்று தடுத்து விட்டார்கள்.
பையனையும், அவன் அம்மாவையும் மனம் நோகும்படியும் பேசி விட்டார்கள். என் அக்காவின் பெண்ணும் கணவன் வீட்டுக்கு போகவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து அந்தப் பையன் விவாகரத்து வழக்கு போட்டுவிட்டான். என் அக்கா இப்போது விழித்துக் கொண்டு பெண்ணிடம் டைவர்ஸ் கொடுக்காதே, பணம் கேள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாள். தாயும் சகோதரியும் சேர்ந்து அந்தப் பெண்ணை வாழவிடாமல் செய்து விட்டார்கள். சொந்தக்காரர்களும் பேசிப் பார்த்து விட்டோம். அந்தப் பெண் ஒரு தரம் நான் டைவர்ஸ் குடுத்து விடுகிறேன் என்று சொல்கிறாள். இன்னொரு தரம் குடுக்க மாட்டேன் என்கிறாள். பணம் கேட்பேன் என்றும் சொல்லுகிறாள். அவள் வாழ்வையும், அந்தப் பையன் வாழ்வையும் நினைத்து கவலையாக இருக்கிறது. என் சகோதரியால் அவள் பெண்ணும், அந்தப் பையனின் குடும்பமும் நிம்மதி இல்லாமல் இருக்கிறது. என் சகோதரி பெண்ணின் வாழ்வும் கெடக் கூடாது. அந்த பையனும் நன்றாக இருக்க வேண்டும். இந்த பெண்ணிற்கு விவாகரத்து ஆகுமா? இரண்டாவது திருமணம் உண்டா? அந்தப் பையனுக்கும் இரண்டாவது திருமணம் இருக்குமா என்பதை அருள் கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

பதில் :



சு
ரா

ஆண்
27-7-1982 காலை
10-10
கல்கத்தா

சூ
பு

கே

சந் செ
குரு

சனி ல


ரா

சு
செ

பெண்
15-1-1985
 இரவு
9-40
சென்னை

சூ குரு


பு

சனி கே

சந்
(ஆண் 27-7-1982 காலை 10-10 கல்கத்தா, பெண் 15-1-1985 இரவு 9-40 சென்னை)

பல குடும்பங்களில் கண் கெட்ட பிறகுதான் சூரிய நமஸ்காரம் செய்யவே தோன்றுகிறது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான விவாகரத்து வழக்குகளுக்கு பெற்றோர்கள்தான் முக்கிய காரணம் என்பதை முன்பு ஒருமுறை எழுதியிருக்கிறேன். உங்கள் குடும்பத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு தம்பதிகளுக்குள்ளும், சம்பந்திகளுக்குள்ளும் வரும் ஈகோ பிரச்னையால்தான் இது போன்ற சிக்கல்கள் வருகின்றன. நமது கலாச்சாரத்தின்படி இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்தான் என்பதை பலர் உணருவதில்லை. இதுபோன்ற ஈகோவினால் நல்ல குணம் கொண்ட முதல் கணவனை கை விட்டு, இரண்டாவதாக ஒரு அரக்கனிடம் போய் மாட்டி வெளியே சொல்ல முடியாமல் தவித்து, குழந்தைக்கும் தாயாகி, வயதும் போய், முதல் வாழ்க்கையை சிறு பிரச்னையால் இழந்து விட்டோமே என்று வாழ்நாள் முழுவதும் வெதும்பிக் கொண்டிருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். அதில் உங்கள் அக்கா பெண்ணும் சேரப் போகிறாள்.

பெண்ணின் ஜாதகப்படி ராசிக்கு இரண்டில் சனி, எட்டில் ராகு, லக்னத்திற்கு ஏழில் செவ்வாய் என்ற அமைப்பு கடுமையான களத்திர தோஷத்தை குறிக்கிறது. செவ்வாய், சனியால் லக்னம், ராசி இரண்டின் குடும்ப வீடுகளும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. முதல் திருமணத்தை குறிக்கும் ஏழாம் வீடு பலவீனமாகி, இரண்டாவது திருமணத்தைக் குறிக்கும் பதினோராம் பாவகம், அதன் அதிபதி புதனால் பார்க்கப்பட்டு, வேறு பாபிகளின் தொடர்பு இல்லாத நிலையில், பெண்ணிற்கு வரும் அக்டோபர் 24ம்தேதி முதல் புதன்தசையில் சுக்கிரபுக்தி நடக்க இருக்கிறது. இது இரண்டாவது திருமணத்தை குறிக்கின்ற அமைப்பு என்பதாலும், இதே அமைப்பு பையனுக்கும் இருப்பதாலும், இருவருக்கும் விவாகரத்து ஆகும்.

இதுபோன்ற ஜாதக அமைப்பிற்கு 33 வயதில்தான் திருமணம் செய்திருக்க வேண்டும். இல்லையென்றால் இப்படித்தான் முதல் திருமணம் நிலைக்காமல் போகும். நடந்த திருமணத்தில் சில படிப்பினைகள் கிடைத்து விட்டதால், அக்கா பெண் இனி சொந்தமாகவே முடிவெடுப்பாள்.

பையனின் ஜாதகப்படி, ராசிக்கு ஏழாமிடத்தை, செவ்வாய் பார்த்து, லக்னத்திற்கு 7ஆம் இடத்தை சனி பார்ப்பதால் முதல் திருமணம் நிலைக்க விதி இல்லை. இருவருக்கும் ஏழரைச்சனி முடிந்து விட்டதால் இனிமேல் வாழ்க்கையில் கோர்ட், கேஸ் என்று போக மாட்டார்கள். முதல் திருமணம் இருவருக்குமே சில பாடங்களைக் கற்றுக் கொடுத்து விட்டதால் இரண்டாவது திருமணத்தை நிதானத்தோடு அணுகுவார்கள். நடந்த சம்பவங்களால் உங்கள் அக்கா பெண்ணிற்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.

(09.10.2018 மாலை மலரில் வெளிவந்தது)

1 comment :

  1. ஐயா, உங்கள் வீடியோவை தவறாமல் என் அம்மா பார்ப்பார்கள். நானும் உங்களின் தீவிர ரசிகை. என் தம்பிக்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்று கூறுங்கள் ஐயா. சிலர் என் தம்பிக்கு இருதாரம் என்றும் அவன் நடத்தையையால் அக்கா மற்றும் தங்கையை கல்யாணம் பண்ண்ணும் நிலைமைவரும் என்கிறார்கள். நாங்கள் பெண் பார்க்கும் முன்னே இப்படி சொல்கிறாரார்கள். அவன் இன்னமும் நிலையான வேலைக்கு வரவில்லை. தாங்கள் தான் வேலை மற்றும் கல்யாணம் பற்றி உள்ளதை உள்ளபடி சொல்லுங்கள். Dob: அக்டோபர் 20;1991@ 9: 30 pm in Sivakasi

    ReplyDelete