கேள்வி :
எனது பேத்தி எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சையில் நல்ல மார்க் வாங்கி இப்பொழுது பிளஸ் 2 பரீட்சை எழுதப்
போகிறாள். அவள் பிளஸ் 2-வில் நல்ல மார்க் எடுக்கும் பட்சத்தில் அவளை
மெடிக்கல்காலேஜ் அல்லது என்ஜினீயரிங் காலேஜ் படிக்க வைக்கலாமா என்பதை
தெரிவிக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
குரு,
சனி
|
சூரி
|
||
ராசி
|
பு,சுக்
ராகு
|
||
சந்
|
|||
லக்
|
செவ்
|
பதில் :
(தனுசுலக்னம், மகரராசி, ஐந்தில் குரு, சனி. ஏழில் சூரி. எட்டில் புத, சுக்,
ராகு. பதினொன்றில் செவ்)
பேத்தியின் ஜாதகத்தில் ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் அமர்ந்து
அம்சத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் மருத்துவம், என்ஜினீயரிங் இரண்டுமே
பொருத்தமானது தான். லக்னாதிபதி குருபகவான் லக்னத்தையும், ராசிக்கு பத்தாம்
வீட்டையும் பார்ப்பதால் மருத்துவத்துறைக்கு பேத்தி செல்வார்.
பி. மணிகண்டன், சூரமங்கலம்.
கேள்வி :
மனைவியுடன் மூன்று ஆண்டுகளாகப்
பிரிந்து வாழ்கிறேன். சேர்ந்து வாழ முடியுமா? அல்லது விவாகரத்து ஏற்படுமா?
வெளிநாட்டு வேலை தற்போது கிடைக்குமா? என் மகள் என்னுடன் சேர்ந்து வாழ
வாய்ப்பு உண்டா?
செவ்
|
சூரி,
சுக்
|
||
சந்
|
ராசி
|
லக்,பு
குரு
|
|
சனி,
ராகு
|
|||
சந்
|
லக்
|
||
ராசி
|
புத
|
||
சூரி
|
|||
செவ்
|
சனி
|
சுக்,
கேது
|
பதில் :
(கணவனுக்கு கடகலக்னம், கும்பராசி லக்னத்தில் புதன், குரு. இரண்டில் சனி, ராகு.
பதினொன்றில் செவ். பனிரெண்டில் சூரி, சுக். மனைவிக்கு ரிஷபலக்னம், மீனராசி,
மூன்றில் புத. நான்கில் சூரி. ஐந்தில் சுக், கேது. ஏழில் சனி. எட்டில் செவ்.)
மகளுக்கு விருச்சிக ராசியாகி ஏழரைச்சனி நடப்பதாலும் உங்கள் ஜாதகப்படி
எட்டுக்குடைய சனிதசை நடப்பதாலும் பெற்றோர் பிரிந்து இருக்கிறீர்கள். மனைவிக்கு
ஏழில் சனி எட்டில் செவ்வாய் என்றாகி நீசலக்னாதிபதி சுக்கிரனின் தசை 2017 வரை
நடப்பதால் 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு குடும்பம் ஒன்று சேரும்.
விவாகரத்திற்கு வாய்ப்பு இல்லை. வெளிநாடு வேலை தற்போது கிடைக்கும். மகளுடன்
சேர்ந்து வாழுவீர்கள்.
ஏ. ரமேஷ், சேலம்.
கேள்வி :
ஜோதிட மாநாடுகளில் பெரிய ஜோதிடர்கள் எல்லாம் அவரவர் கருத்தை மட்டுமே சொல்லி அமர்வார்கள். ஆனால் தாங்கள் ஒருவர்தான் மேடையில் நேருக்குநேர்
கேள்வி பதில் வாயிலாக ஜாதக சந்தேகங்களை தீர்த்து வைத்து என் போன்ற
ஜோதிடர்களையும் வியக்க வைத்தவர் அய்யா.... தம்பிக்கு 33 வயதாகியும்
திருமணம் அமையவில்லை. பரிகாரம் செய்தும் பலன் இல்லை. மேஷ லக்னத்திற்கு
ஏழில் சனி அமர்ந்து ஏழுக்குடைய சுக்கிரன் ஐந்தில் அமர்ந்து குருபகவான்
எட்டில் மறைந்ததால் இந்த நிலையா? திருமணம் நடைபெற என்ன பரிகாரம்? அடுத்து
வரும் புதன் தசை எப்படி இருக்கும் என்று நல்வாக்கு சொல்லச் சொல்லி
தங்களின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன்.
லக்
|
சந்,சூ
ரா,செ
புத
|
||
ராசி
|
|||
சுக்
|
|||
குரு
|
சனி
|
பதில் :
(மேஷலக்னம் மிதுனராசி மூன்றில் ராகு செவ் புத சூரி ஐந்தில் சுக் ஏழில் சனி
எட்டில் குரு)
வாழ்க்கையில் முக்கியமான வேலை திருமணம் குழந்தை போன்ற பலன்களைக் கணிக்கும்போது
லக்னப்படி பார்ப்பதுபோல ராசிப்படியும் பார்த்தால்தான் பலன் துல்லியமாகச் சொல்ல
முடியும். உங்கள் தம்பிக்கு லக்னத்திற்கு ஏழில் சனி உச்சமாகி ராசிக்கு ஏழையும்
இரண்டையும் பார்த்ததோடு மட்டுமல்லாமல் ராசிக்கு ஏழை செவ்வாயும் பார்த்து
தாரதோஷமும் ஐந்திற்குடைய சூரியன் மூன்றில் ராகுவுடன் மறைந்து புத்திரகாரகன்
குரு எட்டில் மறைந்து புத்திரதோஷமும் ஏற்பட்டதால் இதுவரை திருமணம் ஆகவில்லை.
நடைபெறும் சனிதசை சுக்கிரபுக்தியில் இந்த வருடக் கடைசி அல்லது அடுத்தவருட
ஆரம்பத்தில் நிச்சயம் மணமாகி விடும். செவ்வாய்க்குரிய முறையான பரிகாரங்களைச்
செய்யவும். புதன்தசை குருவின் சாரத்தில் இருப்பதாலும் மூன்றில் இருப்பதாலும்
கெடுபலன்களைச் செய்யாது.
சூரியனுக்கான பரிகாரங்கள்.
எல். நல்லபெருமாள், நாகர்கோவில்.
கேள்வி :
ஜோதிடச் சக்கரவர்த்திக்கு வணக்கம். நாற்பது வயதாகும் எனக்கு முப்பத்தி
இரண்டு வயதில் இருந்து எட்டு வருடமாக மருத்துவச் செலவு மிக மிக அதிகமாக
உள்ளது. மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறேன். செய்யும் வேலையிலும்
திருப்தி இல்லை. எதனால் இப்படி உள்ளது? ஏதாவது பரிகாரம் உண்டா? எந்தக்
கடவுளை நான் வணங்க வேண்டும்?
குரு
|
சந்
|
||
ராசி
|
சனி,சூ
புத,சுக்
|
||
லக்,
செவ்
|
|||
ராகு
|
பதில் :
(சிம்மலக்னம் மிதுனராசி லக்னத்தில் செவ் மூன்றில் ராகு பத்தில் குரு
பனிரெண்டில் சனி சூரி புத சுக்)
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் லக்னத்தை விட ஆறுக்கதிபதியும் ஆறாமிடமும்
வலுப்பெறக் கூடாது. உங்களுக்கு சிம்ம லக்னமாகி லக்னாதிபதி சூரியன் பனிரெண்டில்
மறைந்து ஆறுக்குடைய சனியின் சாரம் வாங்கி சனியுடன் இணைந்து பலவீனமான நிலையில்
ஆறுக்குடைய சனிபகவான் தனது ஆறாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்தி தனது
சுயசாரத்தில் அமர்ந்து வலுவாகி சனிதசையும் நடப்பதால் உடல்நலக் கோளாறுகளைத்
தந்தார். ஆறாமிடம் அடிமை ஸ்தானம் என்பதால் வேலையிலும் திருப்தி இல்லை. 2017 ம்
ஆண்டு நவம்பர் முதல் ஆரோக்கியம் சீர்படத் துவங்கும். சிம்ம லக்னத்தில்
பிறந்ததால் ஆதி முதல்வனான ஈசனைத்தான் வணங்க வேண்டும். லக்னாதிபதி சூரியனை
வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் சூரிய ஹோரையில்
ஒரு சிகப்பு நிறமுள்ள நடுத்தர வயதுள்ள சுமங்கலிக்கு திறந்த வெளியில் சூரியனை
மேகம் மறைக்காமல் இருக்கையில் பத்து கிலோ கோதுமையை தானம் செய்யுங்கள்.
ஜென்மநட்சத்திரம் அன்று கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார் கோவிலில் வழிபட்டு
இரண்டரை மணிநேரம் கோவிலுக்குள் இருங்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை பகலில் சென்னை
ரெட்ஹில்ஸ் அருகே உள்ள ஞாயிறு கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவிலில் வழிபட்டு
நாற்பத்தியெட்டு நிமிடம் உள்ளே இருங்கள்.
இன்னொரு ஞாயிற்றுக்கிழமை சென்னை போரூர் அருகே உள்ள கொளப்பாக்கம் சூரியன்
கோவிலில் பகலில் வழிபட்டு இருபத்திநான்கு நிமிடம் உள்ளே இருங்கள்.
ஞாயிற்றுக்கிழமை தோறும் சூரிய உதயத்திற்கு முன் விழித்து திறந்த வெளியில்
சூரியனின் முதல் கதிர்களை உடலில் வாங்கி ”ஓம் ஆதித்யாய நமஹ” என்பதை ஒன்பதின்
மடங்கில் உச்சரிக்கவும்.
எம். ராஜேஷ், திருச்செங்கோடு.
கேள்வி :
என் குருநாதருக்கு வணக்கம். இருபத்தியொரு வயதில் அரசுப்பணியில்
சேர்ந்தேன். முப்பத்தி நான்கு வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதோ
ஒரு காரணத்தால் தடைபட்டுக் கொண்டே வருகிறது. இது எதனால்? என்ன பரிகாரம்?
அரசுப் பணிக்குப் போகத் தகுதியுள்ள நல்ல குணமுள்ள பெண் அமைவாளா?
பதில் :
கும்பலக்னம் கன்னிராசியாகி லக்னத்திற்கு எட்டில் சனி ராசிக்கு எட்டில்
செவ்வாய் இருப்பதால் இதுவரை திருமணம் ஆகவில்லை. 2018 ல் சனிதசை புதன்
புக்தியில் தந்தையாக வேண்டும் என்பதால் இந்தவருடக் கடைசி அல்லது அடுத்த வருட
ஆரம்பத்தில் திருமணமாகி விடும். அரசுப்பணி பெண் அமைவாள்.
தனிமரமாக நிற்கிறேன். என்ன தொழில் செய்யலாம்?
எஸ்.வே
லா
யுதம், சிவகாசி.
கேள்வி :
தங்களின் மாலைமலர் ரெகுலர் வாசகர்களின் நானும் ஒருவன். 62 வயதாகியும்
இதுவரை குடும்பநலனுக்காக திருமணம் செய்து கொள்ளவில்லை. 42
வயதுள்ள பெண்ணை மணம் செய்து கொடுக்க பெண்வீட்டார் சம்மதம்
தெரிவிக்கிறார்கள். மணந்து கொள்ளலாமா? நானும், தம்பியும் சேர்ந்து நடத்தி
வந்த நகைக்கடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு ஆறு மாதங்களாக தனியாக
நகைக்கடை
நடத்தி வருகிறேன். வியாபாரம் சரியில்லை. வேறு தொழில் செய்யலாமா? பயர்
ஒர்க்ஸ், தீப்பெட்டி, காலெண்டர் இவைகளுக்கு கமிஷன் ஏஜெண்டாக
வெளியூர்களுக்கு செல்லலாமா? என்னுடைய பெயரில் உள்ள சொத்தை அடமானம் வைத்து
கடன் வாங்கி நகைக்
கடையை ஆரம்பித்தேன். அதனால் கடன் சுமை அதிகமாக உள்ளது. கடன் எப்போது
அடைபடும்?
கையில் பணம் இல்லாததால் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள் எல்லோரும் கைவிட்டு
விட்டார்கள். தனி மரமாக நிற்கிறேன். எந்தத்
தொழில் செய்தால் முன்னேற்றம் அடைய முடியும்?
புத
|
சூரி,
சுக்
|
குரு
|
|
ராசி
|
|||
லக்
|
|||
செவ்,
ராகு
|
சந்
|
சனி
|
பதில் :
(மகரலக்னம், விருச்சிக ராசி. மூன்றில் புத. நான்கில் சூரி, சுக். ஆறில் குரு.
பத்தில் சனி. பனிரெண்டில் செவ், ராகு.)
ஏழுக்கதிபதி சந்திரன் நீசமாகி ஏழாமிடத்தை சனி, செவ்வாய் பார்த்து ராசிக்கு
இரண்டில் செவ்வாய், ராகு அமர்ந்து கடுமையான தாரதோஷமும் புத்திர ஸ்தானாதிபதி
சுக்கிரன் அந்த பாவத்திற்கு விரயத்தில் அமர்ந்து சனிபார்வை பெற்ற நிலையில்
புத்திரகாரகன் குருபகவானும் ஆறில் மறைந்து சர்ப்பக்கிரக சம்பந்தம் பெற்று
ராசிக்கு ஐந்தில் நீசன் அமர்ந்து ராசிக்கு ஐந்துக்குடையவன் ராசிக்கு எட்டில்
மறைந்து கடுமையான புத்திரதோஷமும் உண்டான ஜாதகம்.
மகர லக்னத்திற்கு வலுப்பெற்ற சூரிய, சந்திர தசைகள் வரக்கூடாது என்று அடிக்கடி
எழுதுகிறேன். சனியும், சூரியனும் ஜென்மவிரோதிகள் என்பதால் அஷ்டமாதிபதி சூரியன்
உச்சம் பெற்ற உங்கள் ஜாதகத்தில் சூரியதசை ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே உங்களை
ரோட்டுக்குக் கொண்டு வந்து விட்டது.
குதிரை கீழே தள்ளியதோடு குழியையும் பறித்த கதையாக உங்களின் விருச்சிக ராசிக்கு
ஏழரைச்சனியும் நடப்பதால் தம்பியிடம் இருந்து பிரிந்ததற்கும் சகோதர,
சகோதரிகளின் கைவிடலுக்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். தவறு
உங்களுடையதாகத்தான் இருக்கும். எனது ரெகுலர் வாசகர் என்று குறிப்பிடும்
நீங்கள் ஜோதிடநம்பிக்கை இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் ஒரு முக்கியமான
முடிவு எடுக்கும்போது அருகில் உள்ள நல்லஜோதிடரை ஆலோசனை கேட்டிருக்கலாம்.
அஷ்டமாதிபதி தசையில் சொத்தை அடமானம் வைத்து சிக்கலில் மாட்டிக்கொண்டு
எல்லாவற்றையும் செய்து முடித்து கழுத்தளவு புதைசேற்றில் நின்று கொண்டு
எனக்குக் கடிதம் அனுப்புவதைப் பார்க்கும்போது உங்களின் கர்ம வினையை மன்னிக்கச்
சொல்லி பரம்பொருளிடம் வேண்டுவதைத் தவிர வேறு வழியும் இல்லை. இதுபோன்ற கடுமையான
தசாபுக்தியும் ஏழரைச்சனியும் சேரும்போது பரிகாரங்களும் செய்ய இயலாது. பலனும்
இருக்காது.
ஏழரைச்சனியும் எட்டுக்குடைய சூரியனின் புக்தியும் இன்னும் நான்கு
வருடங்களுக்கு நீடிக்கும் என்பதால் நீங்கள் கேட்ட வெளியூர் ஏஜெண்ட் அல்லது
வெளியூர் வேலைக்கு செல்லுங்கள். சொந்தத்தொழில் இப்போது உங்களுக்கு கை
கொடுக்காது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் வீடு கொடுத்த செவ்வாய் பனிரெண்டில்
மறைவதால் இந்த தசைகளில் அனைத்து விரயமும் ஏற்படும். கவனமாக இருங்கள்.
சூரியனுடன் சுக்கிரன் இணைந்திருப்பதால் வாழ்வின் கடைசிக் காலத்தில் ஒரு
பாதுகாப்பிற்காக அந்த பெண்ணை நீங்கள் தாராளமாக மணந்து கொள்ளலாம்.
No comments :
Post a Comment