மேஷநாதன் செவ்வாய் மாதம் முழுவதும் எட்டில் மறைந்த நிலையில் இருந்தாலும் அவர் தன்னுடைய இன்னொரு வீட்டில் ஆட்சிபெற்ற நிலையில் இருப்பதால் ராசிநாதன் வலுப்பெற்றால்
தீமைகள் நடக்காது எனும் விதிப்படி மேஷராசிக்கு மார்ச் மாதம் கெடுதல்கள் இல்லாத மாதமாக இருக்கும். அதேநேரத்தில் நீங்கள் இப்போது அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில்
இருப்பதால் சோம்பலுக்கு இடம் கொடாமல் எதிலும் சுறுசுறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.
இதுவரை ஐந்தாமிடத்தில் அதிநட்பு நிலையில் அமர்ந்து நல்ல பலன்களை தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது ராகுவுடன் இணைந்து வலுவிழப்பதால் மேஷராசிக்காரர்கள் வேலை,
தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக வேலை மாற்றம், தொழில் விரிவாக்கம் போன்ற விஷயங்களில் அவரசப்படாமல்
அடுத்தவரை நம்பாமல் நிதானமாக எதையும் சிந்தித்து செய்யுங்கள்.
சிலருக்கு இந்தமாதம் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. எதிர்பாராத பணவரவு இருக்கும்.
தந்தைவழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட்,
மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள். கணவன் மனைவி உறவில் நெருடல்கள் இருக்காது.
4,5,6,8,10,12,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்து 3-ம் தேதி அதிகாலை 4.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம்.
No comments :
Post a Comment