தனபாக்கியாதிபதியான செவ்வாய் பகவான் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து ஒன்பதாமிடம் வலுப்பெறுவதும் ஜீவன ஸ்தானாதிபதியான குருபகவான் தனது பத்தாம் வீட்டையே பார்ப்பதும்
சிறந்த தர்மகர்மாதிபதி யோகம் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு நன்மைகளுக்கான திருப்பு முனைகள் ஆரம்பிக்கும் மாதமாக மார்ச்மாதம் இருக்கும். செவ்வாய் பகவான்
இந்தவருடம் முழுவதும் லாபம் தரும் அமைப்பில் இருப்பதால் தொழில் விஷயங்களில் கவலைகள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே இருக்கும் என்பது உறுதி.
யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது.
சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். தந்தைவழியில் நன்மைகளும், பிள்ளைகள்வழியில் நல்லசெய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. அரசு,
தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். காவல்துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள்
நடக்கும்.
விவசாயிகள், மக்கள்பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். கலைஞர்களுக்கு
இது நல்ல மாதமாக அமையும். சிறுகலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். இதுவரை
நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. நாளை நீங்கள் நன்றாக இருக்கப் போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும்.
1,2,3,7,8,9,11,12,13,18 ஆகிய நாட்களில் பணம் வரும். 25-ம்தேதி பகல் 11.30 மணி முதல் 28-ம்தேதி அதிகாலை 1 மணி வரை சதந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட
தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும்.
No comments :
Post a Comment