Tuesday, February 2, 2016

மீனம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

மீனம்:

இதுவரை குடும்பத்தில் சிக்கல்களை தந்து வேலை, தொழில் அமைப்புகளில் பண வரவுகளை தடுத்து வந்த ராகு பகவான் நல்ல அமைப்பிற்கு மாறிய முதல் மாதம் என்பதால் மீன ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை இருந்து வந்த சமாளிக்க முடியாத பிரச்சினைகள் அனைத்தும் தலைகீழாக மாறி உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்க ஆரம்பிக்கும் வாரமாக இது இருக்கும்.

யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கணவன், மனைவி உறவு சுமாராக இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். உடல் நலத்தில் அக்கறை தேவை. தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக காவல் துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும்.

விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.

2,3,7,8,9,10,12,13,14,18,19 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 27-ந்தேதி அதிகாலை 5 மணி முதல் 29-ந்தேதி மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் புதிய முயற்சிகளோ, முதலீடுகளோ எதுவும் வேண்டாம்.

No comments :

Post a Comment