Showing posts with label 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். Show all posts
Showing posts with label 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். Show all posts

Thursday, March 25, 2021

கும்பம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

கும்பம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

கும்பத்திற்கு பிறக்க இருக்கின்ற பிலவ தமிழ்ப் புத்தாண்டு விரயங்களைத்  தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும். வருமானம் வந்தாலும் அதை நீங்கள் சேமிக்க முடியாமல் வீணடிப்பீர்கள்.

இந்த புத்தாண்டில் கும்ப ராசிக்காரர்களுக்கு திருமணம், வீடு கட்டுதல், குழந்தைகளுக்கான சுபச் செலவுகள் போன்ற விஷயங்களில் விரையங்கள் இருக்கும். இதுவரை மகன்-மகளுக்கு திருமணம் போன்ற சுப காரியங்கள் நடத்த முடியாதவர்கள் இப்போது நல்லவிதமாக அதனை நடத்தி முடிப்பீர்கள்.

கடந்த ராகு-கேது பெயர்ச்சியின் மூலம் ஐந்தில் இருந்து இதுவரை உங்களுடைய பொருளாதார வளர்ச்சியை தடுத்து கொண்டிருந்த ராகு உங்களின் ராஜ யோகாதிபதியான சுக்கிரனின் நான்காம் இடத்திற்கு மாறியிருப்பது உங்களுக்கு நன்மையை தரும் விஷயமாக  இருக்கும்.

இந்த பெயர்ச்சியின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் தகுந்த வருமானம் இன்றியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியமின்றியும் பொருளாதார பின்னடைவு சந்தித்து கொண்டிருந்த கும்பத்தினர் அவை நீங்கி திருப்தியான வருமானங்களை பெறுவீர்கள். இந்த வருடம் சம்பாதிக்க இருக்கும் வருமானத்தை சேமிக்கத்தான் முடியாதே தவிர தாராளமாக செலவு செய்வதற்கான வருமானம் இருக்கும்.

நான்கு, பத்தில் இருக்கும் சுபத்துவ ராகுகேதுக்களாலும், அதனையடுத்து நவம்பர் மாதம் ராசிக்கு நிலையாக மாற இருக்கும் குருபகவானாலும் உங்களுக்கு வேலை, தொழில் நிலைகளில் இந்த வருட இறுதியில் நல்ல மாற்றங்கள் இருக்கும். 

அதேநேரத்தில் அடுத்த வருடம் உங்களுக்கு ஜென்மச் சனி நிலை ஆரம்பிப்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கண்ணும், கருத்துமாக அனைத்திலும் அக்கறையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

தற்போது உங்களுக்கு நடப்பது விரயச்சனிதான் என்பதால் சனியின் பாதிப்புகள் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்காது. ஆயினும் “அரசனை நம்பி புருஷனை கைவிடும்” கதையாக சில விஷயங்கள் கும்ப ராசிக்கு இப்போது நடக்கும் என்பதால் முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினர் வேலை விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே சனியினால் பாதிப்புகள் இருக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இது பொங்கு சனி என்று சொல்லப்படும் நன்மைகளைத் தரும் அமைப்பாக பலன் தரும் என்பதால் ஐம்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு வேலை தொழில் அமைப்புகளில் நன்மைகள் மட்டுமே நடக்கும். இளைஞர்கள் மட்டும்தான் கவனமாக இருக்க வேண்டும்.

இளையவர்களின் தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை பறிக்க சனி முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

புது வருடத்தின் கடைசி மாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் சனியின் தாக்கம் கும்பத்திற்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்கள் புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது.

முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும்.

பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு  சாதகமற்ற பலன்கள் குறைவாக இருக்கும். ஆயினும் சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும். புதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.

வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.

எதிலும் அகலக்கால் வைக்க வேண்டாம். புதிதாக எதையும் ஆரம்பிக்காதீர்கள். இருப்பதை கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய வருடம் இது. யாரையும் நம்பாதீர்கள். குறிப்பாக தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். இனிமேல் கற்றுக்கொண்டு செய்ய வேண்டிய தொழில் இப்போது கை கொடுக்காது.

பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.

பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.  

எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகி இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க ஆரம்பிப்பீர்கள். வீட்டில் குழந்தையின் கொலுசுச் சப்தம் கேட்கும் காலம் பிறந்து விட்டது.

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய வருடம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள். இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள். காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளையபருவத்தினர் தங்களின் வாழ்க்கைத் துணைவரை இந்தவருடம் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும். காதல் வரும் வருடம் இது. அந்தக் காதலினால் அழுகையும் வரும் வருடம் இது.

ராகு, கேதுக்கள் நல்ல நிலயில் இருப்பதால் சிலர் வெளிநாட்டு தொடர்பால் நன்மை அடைவீர்கள். வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். தந்தைவழி உறவில் மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. வேலையில் பாராட்டப் படுவீர்கள்.

மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம் உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் கும்பத்தினர் என்பதாலும் கும்ப ராசிக்கு சனிபகவானே அதிபதி என்பதாலும் மற்ற ராசிக்காரர்களுக்கு தரும் தொல்லைகளை உங்களுக்கு சனி தர மாட்டார். கையில் இருக்கும் சேமிப்பை சனி கரைய வைக்கும் அவ்வளவுதான்.

சுருக்கமாக சொல்லப்போனால் இந்த பிலவ வருடத்தில் கிடைக்கும் மாற்றங்களைக் கொண்டும், மற்ற அனுபவங்களைக் கொண்டும் உங்கள் எதிர்காலத்தை நீங்கள் முன்னேற்றமானதாக மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் எதிர்வரும் தமிழ்ப் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
 

மகரம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

மகரம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

தனுசு: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

தனுசு:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

விருச்சிகம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

விருச்சிகம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான பிலவ வருடத்தில் விருச்சிக   ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் வருடத்தின் முக்கிய மாதங்களில் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனியும், குருவும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே  வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை விருச்சிக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

துலாம்: 2021- பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

துலாம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற பிலவ தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதேநேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை. கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாகத்தான் பிறக்க இருக்கும்  பிலவ வருடம் இருக்கும்.

கன்னி: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

கன்னி:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சென்ற ஆண்டு கன்னி ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். நல்ல கோட்சார கிரக நிலைகள் இருந்தும் பெரும்பான்மையான கன்னி  ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

சிம்மம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

சிம்மம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற பிலவ தமிழ்ப் புத்தாண்டு, நடுப்பகுதி  மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும் ஆரம்பம் மற்றும் பிற்பகுதி முழுவதும் நல்ல பலன்களை செய்யும் வருடமாக இருக்கும்.

மிதுனம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

மிதுனம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம்  பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்)

ரிஷபம் : 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

ரிஷபம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

(கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

புதிய பிலவ தமிழ்ப் புத்தாண்டு ரிஷபத்தினருக்கு நல்லவைகளையும், பொருளாதார வளர்ச்சியினையும் தருகின்ற வருடமாக இருக்கும்.

கடந்த சில வருடங்களாக எவ்வித நன்மைகளும் நடைபெறாத ரிஷப  ராசிக்காரர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே ராசியில் சுபத்துவ அமைப்பில் ராகுவும், அதன்பிறகு நவம்பர் மாதம் வரை நல்ல நிலையில் ஒன்பதாமிடத்தில் குருவின் நிலையும் அமைகின்றன. எனவே இந்த புது வருடத்தில் ரிஷபத்திற்கு மேன்மையான பலன்கள் நடக்கும்.

பிலவ வருடத்தின் ஆரம்பம் முதலே வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக் கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிலையான வருமானம் வரும் அமைப்பு இந்த வருடம் முதல் ஆரம்பிக்கும்.

இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இருந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் புத்தாண்டு முதல் விலக துவங்கும். வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். பிறக்க இருக்கும் பிலவ வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே ரிஷபத்தினர் பெறுவீர்கள் என்பது உறுதி.

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு  பணவரவு தடைப்படாது வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வரும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.   

வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலி மனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கசப்பான அனுபவங்கள் நீங்கி இனிமேல் வாழ்க்கை சரியான பாதையில் போகத் துவங்கும்.

அதிர்ஷ்டம் இனிமேல் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.

ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

காவல், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,  வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும், மாணவர்களுக்கு பள்ளி 
கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

வேறு இன மொழி மதக்காரர்கள்  நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

தொழிலாளர்களுக்கு இந்த புத்தாண்டு மிகுந்த நன்மையை அளிக்கும். வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். தொழிலதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம்.                                                                                                                                                                                                                     

பொதுவாக ரிஷபராசியினர் செயல்திறன் மிக்கவர்களாக இருப்பீர்கள். அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். ஒரு நிமிடம் நீங்கள் விழிப்புடன் இல்லாவிட்டால் குடும்பத்திலோ, அல்லது தொழில் அமைப்புகளிலோ ஏமாற்றப்படுவீர்கள். பெண்களில் சிலர் மறைமுகமாக கணவரின் தொழிலை நிர்வகிப்பீர்கள்.

சொத்துச்சேர்க்கை, வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குதல் நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இந்தவருடம் செய்ய முடியும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகள் புகழ் பெறுவீர்கள். வரும் தேர்தலில் வெற்றி கிடைக்கும்.

தெய்வத்தின் அருளும், கிரகங்களின் ஆசியும் இந்த வருடம் பரிபூரணமாக உங்களுக்கு கிடைப்பதால் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி பெற்று உங்கள் வாழ்வில் நல்ல ஒரு வருடமாக இது அமையும். உங்கள் எதிர்காலத்தை நிணயிக்கக் கூடிய வருடம் இது.

மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப்பளுவும் நீங்கி உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார். உங்களில் சிலருக்கு பணியிடங்களில் நற்பெயரும், சாதனைகளைச் செய்யக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

மொத்தத்தில் நல்ல விஷயங்களைத் தரும் தமிழ்ப் புது வருடம் இது என்பதால் ரிஷப ராசியினர் எதிலும் துணிந்து இறங்கி வெற்றி காண்பீர்கள் 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

மேஷம்: 2021 - பிலவ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

 

மேஷம்:

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888


(அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும்  சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

மேஷ ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புதுவருடமான பிலவ ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நல்ல பலன்களை தருவதாகவும் இருக்கும்.

புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ் புத்தாண்டான பிலவ வருடத்தில் மேஷ ராசிக்கு உள்ள சிறப்பான அம்சங்கள் என்னவென்று பார்த்தோமேயானால், ராசிக்கு பத்தாமிடத்தில் பாபக்கிரகமான சனி ஆட்சி பெற்ற நிலையில் குறிப்பிட்ட மாதங்கள் சுபத்துவ நிலையிலும் இருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே  வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

பாபக்கிரகங்கள் உபஜெய ஸ்தானங்கள் எனப்படும் மூன்று, ஆறு, பத்து, பதினொன்றில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்கு சனி வலுவாக இருப்பத மேஷ ராசிக்கு நல்லது. இந்த அமைப்பு தொடர்ந்திருக்கும் காலம் வரைக்கும் உங்களுக்கு யோகமான காலம்தான்.

மேஷ ராசிக்காரர்கள் ஒருவகையில் கோபக்காரர்கள் என்றாலும்  எதிலும் நடுநிலை கொண்ட நேர்மையானவர்கள்  என்பதாலும், எந்த ஒரு வேலையையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்வீர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக்கொள்வீர்கள் என்பதாலும் இந்த வருடம் நல்லபடியாக இருப்பீர்கள்.

பொதுவாக மேஷத்தினர் மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.

புது வருடத்தின் ஆரம்பத்தில் சிறிதுகாலம் அதிசார நிலையில் குரு இருந்தாலும், பிற்பகுதியில் வரவிருக்கும் நேர்முகமான குருப்பெயர்ச்சி காலம் உங்களுக்கு மாற்றங்கள் நிறைந்த காலமாக இருக்கும். இந்த மாறுதல்கள் அனைத்தும் ஏற்கனவே இருக்கும் நிலையைவிட உயர்ந்த நிலையைத்தான் தரும்.

பிலவ வருடத்தின் பிற்பகுதியில் உங்களின் எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்கும். தற்போது இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில் வெளியே அனுப்பும். அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்து எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகு நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே புது வருட இறுதியில் எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள்  நடக்கும். கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

இதுவரை பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்த மேஷ ராசிக்காரர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை இந்த வருடத்தில் இருந்து காண்பீர்கள். வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். உங்கள் மனது போலவே எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கும். 

வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

இளையபருவத்தினருக்கு இந்தப் புதுவருடம் யோகத்தைத் தரும் என்பதோடு மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் வருடமாகவும் அமையும். இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.

வியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. 

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

சனி ஆட்சி நிலையில் சுபத்துவமாக இருப்பதால் சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

ரிஷப ராகுவின் இரண்டாமிட சுபத்துவ நிலையினால் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும். 

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.

வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

பெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் கிடைக்கும்.

சனியின் பத்தாமிட நிலையினால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

மொத்தத்தில் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மேஷத்திற்கு கவலைகளைப் போக்கும் ஒரு ஆண்டாக இருக்கும். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.