Showing posts with label 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள். Show all posts
Showing posts with label 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள். Show all posts

Saturday, November 28, 2020

மீனம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மீனம்:

ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் நீச்ச பங்க நிலையில் இருப்பதால் இது மீனத்தினருக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம்தான். கூடவே அங்கே லாபாதிபதி சனியும் பலமாக இருப்பதால் டிசம்பர் உங்களுக்கு கெடுதல்களை செய்யாது. உங்களில் சிலருக்கு தற்போது வேலை, தொழில், அமைப்புகளில் இருக்கும் தேக்கமும் முன்னேற்றமில்லாத சூழ்நிலையும் இனி மாறி விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இருக்கும். தடங்கலாகி வந்த சில விஷயங்கள் எண்ணம் போல் நிறைவேறும். வீட்டில் சுபகாரியம் உண்டு.

கும்பம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

கும்பம்:

யோகாதிபதி சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் கும்ப ராசியினருக்கு  நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் பனிரெண்டில்  சனி, குரு இணைவதால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். கும்பத்தினரின் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இளைஞர்கள் எதிர்காலத்திற்குரிய விஷயங்களை செய்யாமல் வயதுக்குரிய காதல் போன்ற விஷயங்களில் சக்தியை இழப்பீர்கள். எதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள்.

மகரம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மகரம்:

இந்த மாதம் ஒரு குறிப்பிட்ட பலனாக ஐந்தில் இருக்கும் ராகு குருவின் பார்வை பெறுவதால் உங்களுக்கு சூதாட்டம் பங்குச்சந்தை போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். மகர ராசியினர் இந்த மாதம் கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். பங்குச் சந்தை வேண்டவே வேண்டாம். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரவிருப்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

தனுசு: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

தனுசு:

சனியின் ஆதிக்கம் எண்பது சதவிகிதம் விலகி விட்டதால் இனிமேல் இளைய பருவ தனுசுவினர் வாழ்க்கையில் நல்ல விதமாக செட்டில் ஆகப் போகிறீர்கள். அவரவர்களின் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றபடி சனியின் கொடுமைகள் விலகிக் கொண்டிருக்கிறது. இனிமேல் புது மனிதன் ஆகப் போகிறீர்கள். கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் முழுமையாக தீரப் போகிறது. தனுசு ராசி இளைஞர்கள் அதிகமான கெடுபலன்களை சந்தித்து விட்டீர்கள். இளம் வயதினர் தன்னம்பிக்கை இழக்கும் அளவிற்கு சோதனைகள் இருந்து வந்தன. துன்பங்களை அனுபவித்த அனைவரும் அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறீர்கள்.

விருச்சிகம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களின் மனோபலம் அதிகரிக்கும் மாதம் இது. எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இப்போது பிறக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் பெறுவீர்கள். குடும்பாதிபதி குரு நீச்ச பங்க நிலையில் சனியுடன் இருப்பதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் நல்லவை நடக்கும். இளைய பருவத்தினர் காதல் கொள்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். கடன் பிரச்னைகள் தொல்லை தராது. இளைய பருவத்தினருக்கு எதிர்காலத்தை பற்றிய பயங்கள் விலகும்.

துலாம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

துலாம்:

ராசிநாதன்  சுக்கிரன் ராசியில் இருக்கும் நிலையில் டிசம்பர் மாதம் பிறக்கிறது. அதைவிட மேலாக தனாதிபதி செவ்வாய் மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ஆறில் நல்ல நிலையில் இருக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் தீரும் மாதம் இது. குறிப்பிட்ட பலனாக கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.

கன்னி: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

கன்னி:

டிசம்பர் முதல் கன்னி ராசிக்காரர்களின் குடும்பத்தில் அனைத்து நல்ல விஷயங்களும் நடக்கும். குறிப்பாக இனிமேல் கணவன்-மனைவி அன்யோன்னியமும், சந்தோஷமும் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு சந்தோஷச் செய்திகள் உண்டு. குருபகவான் ஐந்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் எண்ணியது எண்ணம் போல் நடக்கின்ற மாதம் இது. ஐந்தாமிடக் குருவால் கடந்த வருடங்களில் சாதிக்க முடியாமல் போனவைகள் எல்லாவற்றையும் இனி நிறைவேற்றிக் கொள்வீர்கள். குருவின் இணைவால்  சனிபகவான் சுபத்துவம் அடைவதால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் சிறப்பான ஒரு நிலையை அடையப் போகிறீர்கள்.

சிம்மம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

சிம்மம்:

மாத ஆரம்பத்தில் யோகாதிபதிகள் சூரியனும், செவ்வாயும் வலுவான அமைப்பில் இருப்பதால் இது சிம்மத்திற்கு யோகமான மாதம்தான். உங்களில் சிலருக்கு இந்த மாதம் பொருளாதார மேன்மையும் இருக்கும். யோகாதிபதி குரு நீசபங்க அமைப்பில் இருப்பதால் தேவைப்படும் நேரத்தில் உதவிகள் கிடைக்கும். உங்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் உதவக்கூடிய தகுதியுடனும், மனதுடனும் இருப்பார்கள். வேலை இடங்களில் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். பணப் பற்றாக்குறை வராது என்பதால் வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து விடுவீர்கள்.

கடகம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

கடகம்:

டிசம்பர் மாதம் சனி,குரு இருவரும் ராசியைப் பார்க்கும் நிலையில் ஏழாமிடத்தில் இருக்கிறார்கள். இது கடகத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். ஏழாமிட சனியால் பாதிக்கப்பட்ட இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். யோகாதிபதி குருவின் நீச்ச பங்க வலுவால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் கடகத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. ஏழில் உள்ள சனி சுபத்துவம் அடைவது மிகப்பெரிய நிம்மதியை உங்களுக்குத் தரும்.

மிதுனம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மிதுனம்:

ராசிநாதன் புதன் சூரியனுடன் இணைந்திருப்பதால் மிதுனத்திற்கு இது நல்ல மாதமே. ஆயினும் மாத ஆரம்பத்தில் அவர் ஆறாமிடத்தில் இருப்பதால் கிடைக்கின்ற நன்மைகள் எதையும் அனுபவிக்க இயலாத தடைகள் இருக்கும். ஏதேனும் தவறாக நடந்துவிடுமோ என்கின்ற மனக்கலக்கம் இப்போது உங்களுக்கு இருக்கும். கடும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றிகள் வரும். வேலை, தொழில் இடங்களில் கவனமாகவும், நிதானமாகவும் இருப்பீர்கள். மாத பிற்பகுதியில் எதிலும் நல்ல பலன்களும், முற்பகுதியில் அதிக முயற்சியும் தேவைப்படும்.

ரிஷபம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

ரிஷபம்:

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது ரிஷபத்திற்குப் பொருந்தும். சில வாரங்களாகவே ரிஷபத்தினர் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். கடந்த மாதம் நடந்த குருப்பெயர்ச்சி முதல் அது இன்னும் நீடிக்கும். குருவின் நீசபங்க வலுவால் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும்.

மேஷம்: 2020 டிசம்பர் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

டிசம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய், பனிரெண்டில் இருக்கிறார். அதன்பிறகு அவர் ராசிக்கு மாறுவது மிகவும் யோகமான ஒரு அமைப்பு. இந்த நிலையால் கடந்த சில வாரங்களாக மேஷத்திற்கு இருந்து வந்த கெடுபலன்கள் இனி இருக்காது. அதேநேரத்தில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். மாத பிற்பகுதியில் யோகாதிபதி சூரியன் குருவின் வீட்டிற்கு மாறுவது நல்ல அமைப்பு என்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு மேஷத்திற்கு எதிலும் வெற்றி கிடைக்கும்.