ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
மேஷநாதன்
செவ்வாய் மாதம் முழுவதும் அதிநட்பு வீட்டில் இருக்கும் நிலையில், அவருக்கு வீடு கொடுத்த சூரியன் அங்கேயே ஆட்சி
பெறுவது நல்லவைகளை நடத்தித் தரும் என்பதால் ஆவணி மாதம் மேஷத்திற்கு சந்தோஷம் தரும்
நிகழ்வுகள் மட்டுமே நடக்கும். அடுத்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும்
உங்களுக்கு சிறப்பான நன்மைகளைத் தரும் என்பதால் இனிமேல் மேஷத்திற்கு ஏறுமுகம்தான்.
சூரியன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை, தொழில்,
வியாபாரம் போன்றவைகளில் இருந்த சிக்கல்கள்
முடிவுக்கு வரும். சூரிய வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும்.