மீனம் :
மீன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் உழைப்பும்
முயற்சியும் இப்போது உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால்
கண்டிப்பாக வெற்றிதான். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள்
என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். சொந்தத் தொழில்
நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக
இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க
வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.











