மேஷம்:
மேஷநாதன் செவ்வாய் நீசமாக இருந்தாலும் யோகாதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதும்
அஷ்டமச்சனி விலகப் போவதும் உங்களுக்கு நல்லவைகளை நடத்தித் தரும் ஒரு அமைப்பு
என்பதால் இந்தமாதம் முழுவதும் உங்களுக்கு மன சந்தோஷத்தைத் தரும் நிகழ்வுகளே
நடக்கும் என்பது உறுதி. மேலும் ராசியின் எதிரிகள் புதனும் சுக்கிரனும் இப்போது
வலுவிழப்பதும் ஒரு சிறப்பான நிலை என்பதால் ஆவணி மாதம் உங்களுக்கு ஆனந்த
மாதம்தான்.
