மேஷம்:
ஆனிமாதம் மேஷராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். ஆறுக்குடையவன்
வலுப் பெறுவதால் நீங்கள் செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத்
தந்தாலும் மாத பிற்பகுதியில் வெற்றி பெறும் என்பது உறுதி. ஐந்தில் இருக்கும்
ராகு பணவரவுகளையும், வர வேண்டிய வருமானங்களையும் கட்டுப்படுத்துவார் அல்லது
தடுப்பார் என்பதால் அனாவசிய செலவுகள் செய்யும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை
யோசிப்பது நல்லது.
