ஆகஸ்டு மாதம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு எந்த வருத்தங்களையும் தராமல்
வசந்த நிலையையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும் மாதமாக இருக்கும்.
அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள்
இருக்கலாம். சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால்
நன்மைகளும் இருக்கும். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ அழைப்பிற்கான
கடிதங்கள் வரும். இதுவரை இழுத்தடித்த வேலை கிடைக்கும். தாயார் வழியில்
நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு
தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது.
