Showing posts with label 2016 ஜூன் மாத பலன்கள். Show all posts
Showing posts with label 2016 ஜூன் மாத பலன்கள். Show all posts

Friday, June 3, 2016

மீனம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மீனம்:

மாதம் முழுவதும் ஒன்பதுக்குடைய செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் இருப்பதும் பத்துக்குடைய குருபகவான் பத்தாமிடத்தைப் பார்ப்பதும் மீனராசிக்கு நன்மைகளைத் தரக்கூடிய அமைப்புகள் என்றாலும் குரு ராகுவுடனும், செவ்வாய் சனியுடனும் இணைந்து யோக அமைப்புகள் பங்கமாகி விட்டதால் ,தற்போது அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. எவ்வித நல்ல மாற்றங்களும் இன்றி வெளியில் போவதும் வீட்டிற்குத் திரும்புவதுமாக மீனராசிக்காரர்கள் இருக்கிறீர்கள்.

கும்பம்: 2016 ஜூன் மாத பலன்கள்

கும்பம்:

கும்பராசியின் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் தத்தம் வீடுகளில் ஆட்சி பெற்றோ அல்லது இன்னொருவரின் வீட்டில் நட்பு நிலையிலோ வலுவுடன் அமைவதால் ஜூன் மாதம் கும்பராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும்.

மகரம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மரகம்:

எட்டில் இருக்கும் குருபகவானால் குறிப்பிட்ட சில மகரராசிக்காரர்களுக்கு மனத்திற்குப் பிடிக்காத மாற்றங்களும் பொருளாதார விஷயத்தில் ஏற்ற இறக்கங்களும், வருமானம் இல்லாததால் பணத்தட்டுப்பாடும் தற்போது இருக்கின்றது. ராசிநாதன் சனி பதினொன்றில் இருப்பதால் கிடைக்கும் யோக அமைப்பைக் கொண்டு அனைத்தையும் சமாளித்து கொண்டிருக்கிறீர்கள்.

தனுசு: 2016 ஜூன் மாத பலன்கள்

தனுசு:

தனுசுநாதன் குருபகவான் ராகுவுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதோடு அவருக்கு வீடு கொடுத்த சூரியனும் மாதப்பிற்பகுதியில் செவ்வாயின் பார்வையைப் பெற்று ராசியைப் பார்க்கிறார். யோகக்கிரகங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப்பட்டு ராசியையும் பார்ப்பதால் ஜூன் மாதம் எவ்வித தொல்லைகளும் இல்லாத மாதமாக தனுசு ராசிக்காரர்களுக்கு இருக்கும்.

விருச்சிகம்: 2016 ஜூன் மாத பலன்கள்

விருச்சிகம்:

பனிரெண்டு ராசிகளிலும் விருச்சிகராசிக்குப் பலன் எழுதும்போது மட்டும் அதிகமான கவனமும் கூடுதலான கணிப்பும் தேவைப்படும் அளவிற்கு விருச்சிகத்தின் நிலைமை தற்போது இருக்கிறது. என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்களில் 80 சதவிகிதம் பேர் விருச்சிகராசிக்காரர்கள் அல்லது விருச்சிக ராசியினை வீட்டினில் கொண்டவர்கள் என்பதை எழுதிக்கொண்டும் டி.வி. நிகழ்ச்சிகளில் சொல்லிக் கொண்டும் இருக்கிறேன்.

துலாம்: 2016 ஜூன் மாத பலன்கள்

துலாம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருந்தாலும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். அதேநேரத்தில் முப்பெரும் பாபர்களான சூரியனுடன் இணைந்து சனி, செவ்வாயின் பார்வையில் இருப்பதால் கைக்கெட்டியும், வாய்க்கு எட்டாத நிலைமைகள் இந்த மாதம் துலாம் ராசிக்கு இருக்கும்.

கன்னி: 2016 ஜூன் மாத பலன்கள்

கன்னி:

மாதம் முழுவதும் ஒன்பதாமிடத்தில் நட்பு வலுவுடனும், பிற்பகுதியில் ஜீவன ஸ்தானத்தில் ஆட்சி வலுவுடனும் உங்கள் ராசிநாதன் புதன் இருக்கும் நல்ல மாதம் இது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதி சுக்கிரனுடனும் புத பகவான் இணைந்திருப்பதால் கன்னி ராசிக்கு ஜூன் மாதம் கவலைகள் இல்லாத மாதமாக இருக்கும்.

சிம்மம்: 2016 ஜூன் மாத பலன்கள்

சிம்மம்:

சிம்மராசிக்கு பத்தாமிடத்தில் ராசிநாதன் சூரியன் இருப்பதும் அவரையும் ராசியையும் சனிபகவான் பார்ப்பதும் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவனஅமைப்புகளில் ஜூன் மாதம் பின்னடைவுகளைத் தரும் அமைப்பாக இருக்கும். அதேநேரத்தில் எதுவும் கைமீறிப் போகாத அளவுக்கு கட்டுக்குள்ளும் இருக்கும்.

கடகம்: 2016 ஜூன் மாத பலன்கள்,

கடகம்:

கடகராசிக்கு பெரிய கஷ்டங்கள் எதையும் கொடுக்காத மாதம் இது. தனாதிபதி சூரியன் மாதஆரம்பத்தில் லாபஸ்தானத்திலும், பிற்பகுதியில் விரையம் எனப்படும் செலவுஸ்தானத்திலும் ராசியின் யோகாதிபதி செவ்வாய் பார்வையில் இருப்பதால் ஜூன்மாதம் நீங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனுசரித்து போகும் மாதமாக இருக்கும் என்பதால் கடத்திற்கு இந்தமாதம் கெடுதல்கள் எதுவும் இல்லை.

மிதுனம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மிதுனம்:

ராசிநாதன் புதபகவான் மாத முற்பகுதியில் நட்புநிலையில் பனிரெண்டாம் வீட்டிலும், பிற்பகுதி முழுவதும் ராசியிலேயே ஆட்சிநிலையில் இருக்கும் சாதகமான மாதம் இது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மாதத்தின் முதல் பாதியில் சுபச்செலவுகளும், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குதலும் இருக்கும் என்பதோடு இந்தச் செலவுகளை கடன் வாங்காமல் செய்வதற்கான வருமானங்களும் உங்களுக்கு இருக்கும். மாத பிற்பகுதி முழுவதும் இதுவரை நீங்கள் எதிர்பார்க்காத இடத்தில் இருந்து உதவிகள் கிடைத்தலும், குடும்பத்துடன் பிரயாணங்கள் செய்வதும் இருக்கும்.

ரிஷபம்: 2016 ஜூன் மாத பலன்கள்

ரிஷபம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ஆட்சிபெற்ற நிலையிலும், நட்பு நிலையிலும் இருப்பதால் ரிஷபராசிக்காரர்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதமாக ஜூன் மாதம் இருக்கும். அதேநேரத்தில் இருபெரும் பாவக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ஏழாமிடத்தில் இருந்து ராசியை பார்ப்பதால் உங்களில் சிலர் வாழ்க்கைத்துணை நண்பர்கள், பங்குதாரர்கள் போன்ற இடங்களில் ஏமாற்றங்களையும், வேதனைகளையும் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சிலருக்கு எரிச்சலும், கோபமும் வரக்கூடிய சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

மேஷம்: 2016 ஜூன் மாத பலன்கள்

மேஷம்:

மாதம் முழுவதும் மேஷநாதன் செவ்வாய் ஆட்சி பெற்றிருப்பதாலும் மாதத்தின் முற்பகுதியில் யோகாதிபதி செவ்வாய், சூரியன் ராசிநாதனை பார்ப்பதாலும் மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் நல்ல மாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.