Showing posts with label ரிஷபம்: 2022 பிப்ரவரி மாத ராசி பலன்கள். Show all posts
Showing posts with label ரிஷபம்: 2022 பிப்ரவரி மாத ராசி பலன்கள். Show all posts

Tuesday, February 1, 2022

ரிஷபம்: 2022 பிப்ரவரி மாத ராசி பலன்கள்

 

#adityaguruji
#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

ரிஷபம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் கோபக் காரகனான செவ்வாயுடன் இணைந்து எட்டில் இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கோபத்தையும், எரிச்சலையும்  உருவாக்கக் கூடிய நிகழ்வுகள் நடக்கும். எவ்வளவு நிதானமானவராக இருந்தாலும் கூட பொறுமையைக் கைவிடச் செய்யும் அளவிற்கு வம்புக்கு இழுக்கும் சம்பவங்களை சுற்றி இருப்பவர்கள் செய்வார்கள் என்பதால் ரிஷபத்தினர் பேச்சிலும், செயலிலும் நிதானனமாக இருக்க வேண்டிய மாதம் இது. இது தவிர்த்து வேலை, தொழிலில் வேறு எந்தவித தொந்தரவுகளும் இருக்காது. மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் குருவின் வீட்டில் இருப்பது யோகம் எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரிஷபத்தினர் அனைத்தையும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.