ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் எட்டில் இருக்கும் நிலையில் நவம்பர் மாதம் பிறக்கிறது. அதைவிட மேலாக மாத இறுதியில் தனாதிபதி புதன் ராசியைப் பார்க்கிறார். ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சினைகள் தீரும் மாதம் இது. குறிப்பிட்ட பலனாக ஆறில் செவ்வாய் இருப்பதால் கடன் தொல்லைகளில் அவதிப்பட்டவர்களுக்கு இனி விடிவுகாலம் பிறக்கும். உங்களின் எதிர்ப்புகளும் எதிரிகளும் கடன்களும் பலம் இழக்கும் மாதம் இது. அலுவலகங்களில் நிம்மதியை இழந்தவர்களுக்கு அதிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் இனி தோன்றவும், செயல்படவும் ஆரம்பிக்கும்.