ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது இப்போது துலாத்திற்குப் பொருந்தும். சில வாரங்களாகவே துலாத்தினர் நன்றாகத்தான் இருக்கிறீர்கள். இந்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் அது இன்னும் நீடிக்கும். சூரியனின் நீசபங்க வலுவால் தாமதித்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய நல்ல தகவல்கள் வந்து சேரும். பணியில் இருப்போருக்கு சிக்கல்கள் தீர தொடங்கும். இளையவர்களுக்கு வேலை மாற்றம் நடந்து மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையை காட்ட முடியும்.