ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
கும்பம்:
அக்டோபர் மாதம் முழுவதும் ராசிநாதன் சனி சுபத்துவமாக பனிரெண்டாமிடத்தில் விரையம் தரும் நிலையில் இருக்கிறார். அதேநேரம் யோகாதிபதி புதன் எட்டில் மறைந்து உச்சமாக இருக்கிறார். சுக்கிரன் பத்தில் இருந்தாலும் கேதுவுடன் இணைந்திருக்கிறார். கும்பத்திற்கு இந்த மாதம் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. அதேநேரத்தில் எந்த ஒரு காரியமும் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும். மாத பிற்பகுதியில் சூரியன் பத்தாமிடத்தில் வலுவாவதும் நல்ல அமைப்பு என்பதால் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு உங்களுக்கு எதிலும் வெற்றி கிடைக்கும்.
