ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்:
ராசிநாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்தாலும், மற்ற கிரகங்கள் நன்றாக இருக்கும் காரணத்தால், அதாவது இரண்டில் குரு, ஆறில் கேது, 11 ல் சனி எனும் யோக அமைப்புகள் உள்ள காரணத்தால் மேஷத்திற்கு நல்லவை நடக்கும் வாரம் இது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிக்கும் வாரம் இது. வேலையில் சிக்கல்கள் இருந்தவர்களுக்கு அது சரியாகும். சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும்.
இதுவரை பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு இனி அவர்கள் மூலம்
நல்லவைகளை எதிர்பார்க்கலாம். பிள்ளைகளால் தொந்தரவுகள் இருக்காது. 27,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 30 -ம்தேதி காலை
6.03 முதல் 2-ம் தேதி மதியம் 3.45 வரை
சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.
மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில்
யாருடனும் வாக்குவாதம் செய்யாதீர்கள்.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் எட்டில் மறைந்தாலும் இந்த வாரம் ரிஷபத்திற்கு
குறைகள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. அதே நேரம் சளைக்காத உழைப்பாளிகளான உங்களுக்கு
நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும்
என்பதால் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது.
வேலை விஷயமாகவோ சிறுகருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள்.
கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும்.
எட்டில் சுக்கிரன் பரிவர்த்தனை அமைப்பில் இருப்பதால், வேலைப்பளு சற்று
அதிகமாக இருக்கும். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள்
திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு
இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். செலவுகளில் சிக்கனமாக
இருங்கள். அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் அனைத்தையும் செலவு செய்துவிடாமல்
ஓரளவாவது சேமிப்பது நல்லது.
மிதுனம்:
மிதுனத்திற்கு குறிப்பிட்ட பலனாக நண்பர்களால் பண விரையம் ஏற்படும் வாரம்
இது. சிறுவயது முதல் நண்பர்களாக இருப்பவர்களுக்கு உதவி செய்வதால் சிக்கல்கள் வரும்.
எதிலும் நிதானமாக இருங்கள். சுருக்கமாக
சொல்லப் போனால் உதவி செய்யப் போய் உபத்திரவத்தை வர வைத்துக் கொள்ளும் வாரம் இது.
பெண்கள் விஷயத்தில் செலவு இருக்கும். ராசிக்கு எதிரியான செவ்வாய். இன்னும் சில
மாதங்களுக்கு. இரண்டாம் இடத்தில் நீச்சம் அல்லது. ராசியில் இருப்பது போன்ற நிலை
பெறுவதால் உங்களில் சிலருக்கு. வருமான குறைவுகள் இருக்கும்.
சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மிதுன ராசிகாரர்கள் இப்போது கடன்
வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர
விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும்
சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க
வேண்டியது அவசியம். வேலை, தொழில், வியாபாரம்
போன்றவைகளில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சில நன்மைகள்
இருக்கும்.
கடகம்:
இன்பம் வந்தாலும் துன்பம் என்றாலும் ஒன்று போலவே நினைப்பது கடகத்தின்
குணம் என்பதால், அஷ்டமச் சனியின்
ஆதிக்க நிலையோடு, ராசிநாதன் சந்திரன் அமாவாசையை நெருங்கும் இந்த வாரத்தை சுலபமாக
உங்களால் சமாளிக்க முடியும். கடகம் என்றுமே கலங்காது என்பதை நீங்கள் நிரூபிக்கும்
வாரம் இது. அதே நேரம் இந்த வாரம் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருக்கும் கடக
ராசிக்காரர்களுக்கு சகோதர லாபம், பூமிலாபம், சிவப்பு நிறப் பொருட்கள் மூலம் நன்மை போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.
வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறந்த
வாரம். வியாபாரிகளுக்கு சில விரயங்கள் ஏற்படும். வருமானம் குறைவதற்கு வாய்ப்பு
இல்லை. வேலை, தொழில், வியாபாரம்
போன்றவைகள் சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள்
தற்பொழுது அது நீங்குவதற்கான ஆரம்பங்கள் நடப்பதை உணர ஆரம்பிப்பீர்கள். மூன்றாமிடம்
வலுப் பெறுவதால் உதவிகள் உங்களை தேடிவரும்.
சிம்மம்:
ராசிநாதன் சூரியன் குருவின் பார்வையால் சுபத்துவம் பெறுவதால் இது சிம்மத்திற்கு
அனைத்து நன்மைகளையும் அளிக்கும் வாரமாக இருக்கும். குறிப்பாக இதுவரை ஆரோக்கியம்
இல்லாமல் இருந்தவர்கள் உடல் நலம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லைகளால் தலையை
பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு கடனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய
ஆரம்பிக்கும். சிலருக்கோ கடன்கள் இந்த வாரத்தில் அடைபடும். குடும்பப்பிரச்னைகளை
சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம்.
தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியான
நேரம் என்பதால் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தந்தை வழியில்
சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். யோகாதிபதி குரு பத்தில் வலுவாக இருப்பதால்
பிரச்னைகளை சமாளிக்கும் தைரியம் உங்களுக்கு உண்டாகும். அறிவால் எதையும்
சாதிப்பீர்கள். தொந்தரவு கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமானவர் அந்த
இடத்திற்கு வருவார். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். மொத்தத்தில் சிம்மம்
சாதிக்கும் வாரம் இது.
கன்னி:
வாரம் முழுவதும் ராசிநாதன் புதன் மற்றும் ராசி குருவின் பார்வையில்.
இருப்பது கன்னி ராசிக்கு மேன்மையான அமைப்பு என்பதால் இது கெடுபலன்கள் எதுவுமின்றி
நற்பலன்கள் மட்டுமே நடைபெறும் வாரமாக இருக்கும். உடல்நலம்,
மனநலம் கெட்டிருந்தவர்கள் நல்ல நிலைக்கு
வருவீர்கள். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில்
சுபகாரியங்கள் நடக்கும். விரும்பிய இடங்களுக்கு போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு
படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள்
சிலருக்கு ஆன்மீக ஈடுபாட்டோடு சிவபக்தி மேலோங்குதல் உண்டு. எதிர்பாராத
பணவரவுகளும், அதிர்ஷ்டம்
கை கொடுத்தலும் இந்த வாரம் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு.
திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம் உறுதியாகும். உங்களில் உத்திரம்
நட்சத்திரக்காரர்கள் சின்ன விஷயத்திற்கு கூட எரிச்சல் அடைவதற்கோ, தேவையற்ற
விஷயங்களில் தலையிட்டு பெயரைக் கெடுத்துக் கொள்வதற்கோ வாய்ப்பு இருப்பதால் எதிலும்
நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் மூன்றில் மறைந்து,. எட்டாமிடத்தோடு பரிவர்த்தனை
அடைவதால் வார ஆரம்பத்தில் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு
மந்த நிலை இருக்கும். செயல்திறன் குறைவுபடும். ராசிநாதனின் மறைவால் இனம் தெரியாத
மனக் கலக்கங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வார இறுதியில் நிலைமை மாறுவதால்
வீண்பழி சுமத்தி வேலை மாற்றும் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு
திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும்
விலகுவார்கள்.
உங்களில் சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.
சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள்
போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகள் அனைத்தும் நல்ல விதமாக செயல்பட்டு உங்களுக்கு நன்மைகளை தரும்.
குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்த வாரம் மேன்மைகளை தரும்.நடுத்தர வயதுக்காரர்கள்
உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.
விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் நீச்ச நிலையில் இருந்தாலும், ராசி குருவின் பார்வையில்
சுபத்துவமாகவும், வலிமையாகவும் இருப்பதால் சோதனைகள் எதுவும் இல்லாத வாரம் இது. பண
விவகாரங்களில் கவனமாக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால்
முன்னாலேயே நம்பி பணம் தர வேண்டாம். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்
அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்து
விடுவீர்கள். அடங்கி இருந்த கடன் பிரச்னைகள் சிலருக்கு தலைகுனிவை தரலாம்.
நான்கில் சனி இருப்பதால் பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும்
இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் மனக்கஷ்டங்கள்
இருக்கும். தந்தையின் அன்பையும், ஆதரவையும் பெற முடியும். மாணவர்களுக்கு ஜாலியான அனுபவங்கள் இருக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். ராசி வலுவாக இருப்பதால் மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து
நன்றாக இருக்கும்.
தனுசு:
ராசினாதன் குரு பரிவர்த்தனை நிலையிலும், யோகாதிபதி சூர்யன்
சுபத்துவமாகவும் இருப்பது யோகநிலை என்பதால், எத்தகைய எதிர்ப்புகளும் உங்கள் முன் அடிபணியும்
வாரமாக இது இருக்கும். பிறந்த ஜாதக அமைப்பில் நல்ல தசா புக்தி நடப்பவர்களுக்கு
வாழ்க்கையில் மறக்கமுடியாத நல்ல வாரம் இது. பத்தாம் இடத்தில் உள்ள கேதுவுக்கு
குருவின் பார்வையால் கிடைக்கும் சுபத்துவத்தால் வேலைக்காரர்கள் உதவுவார்கள்.
அவர்களால் நன்மைகள் உண்டு. கலைத் துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
சிலர் புகழ் அடையும் படியான சம்பவங்கள் நடக்கும்.
குடும்பத்தில் மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி
கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை போன்றவைகள் ஏற்பட்டிருந்தவர்கள் இந்த வாரம்
சங்கடங்களை மறந்து வேற்றுமைகளைத் துறந்து ஒன்று கூடுவதற்கு வழி பிறக்கும்.
சிலருக்கு நண்பர்களால் ஆதாயமும், பங்குதாரர்களின் மூலம் இணக்கமான நிகழ்வுகளும் உண்டு. எல்லாவகையிலும்
சாதகமான கிரக அமைப்புகள் மட்டுமே இருப்பதால் இது கெடுதல்கள் இல்லாத நிம்மதிகளைத்
தருகின்ற வாரமாக இருக்கும்.
மகரம்:
மகரத்திற்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம் இது. கிரக நிலைகள் சாதகமாக
இருப்பதால் இதுவரை இருந்து வந்த அவஸ்தைகளும், சிக்கல்களும் தீரத் தொடங்கி நல்லபடியாக
பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை
அடைக்க வழி பிறக்கும். குடும்பத்தில் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி
பிறக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது
இனிமேல் போலிஸ், கோர்ட்
என்று போகாமல் சமரசம் ஆவீர்கள்.
தொழில் அமைப்புகளில் இருந்து வந்த இடர்பாடுகள் நீங்கும். தொழில் துறையினருக்கு
தடைகள் நீங்கி, தொழில்
முன்னேற்ற பாதையில் செல்லும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. பெண்கள்
சிலருக்கு நகை சேரும் யோகம் இருக்கிறது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக
இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.
அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு சோதனைகள் இல்லாத வாரம் இது. சற்று நிம்மதியாக
உணர்வீர்கள். உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விலகப் போகிறது. இனிமேல் கஷ்டங்கள்
இருக்காது என்பதை நீங்களும் உணர்கின்ற வாரம் இது. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். புத்திர விஷயத்தில் நல்ல
செய்திகள் இருக்கும். தெய்வதரிசனம் கிடைக்கும். புனிதத்தலங்களை தரிசிக்கும்
வாய்ப்பு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். முக்கியமான துறைகளில், அதிகார
அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்லமாற்றங்கள் உண்டு.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி கிடைக்க இருக்கிறது.
சுக்கிரன், குரு பரிவர்த்தனை அடைவதால் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் நன்மைகள் இருக்கும்.
புதிய வீடு வாங்க முடியும். 30,1 ஆகிய நாட்களில் பணம் வரும். 25 -ம் தேதி காலை
5.02 முதல் 27 -ம் தேதி மாலை 6.07 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த
நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம்
ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள் என்பதால் எதிலும்
கவனமுடன் இருக்க வேண்டும்.
மீனம்:
மீன ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இருக்கும் வாரம் இது. குறிப்பாக தொழில் சிக்கல்கள் தீரத் துவங்கும்
வாரம் இது. குடும்பத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள்
கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது
குணம் அடைவார்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உங்கள்
சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும்
சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும்.
அரசு ஊழியர்கள், தனியார் துறையினர், நெருப்பு சம்மந்தப்பட்ட தொழில் புரிவோர், பொது வாழ்க்கையில் இருப்போர் போன்றவருக்கு
பணவரவும், அந்தஸ்து, கௌரவமும்
கிடைக்கும். நிலுவையில் இருந்த சொத்து கிடைக்கும். 25,26 ஆகிய நாட்களில் பணம்
வரும். 27 -ம் தேதி மாலை 6.07 மணி முதல் 30 -ம் தேதி காலை 6.03 வரை சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம்.
இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் சிக்கல்கள் வரும் என்பதால் கவனமாக
இருப்பது நல்லது.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
No comments :
Post a Comment