கைப்பேசி எண் : 8681 99 8888
#adityaguruji
மேஷம்:
ராசிநாதன் செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில், குருவின் பார்வையோடு, குருவோடு பரிவர்த்தனையாகவும் இருக்கக்கூடிய சுபத்துவ நல்ல வாரம் இது. மேஷத்திற்கு இன்னும் சில காலத்திற்கு தொட்டது துலங்கும். எதையும் செய்யலாம். அனைத்தும் வெற்றியாகும். மேஷத்தின் பெருமை மற்றவர்களுக்குத் தெரிய வரும். வீண் செலவுகள் இருக்காது. கடந்த கால பிரச்சினைகளை தீர்க்கின்ற மனோதைரியமும், சந்தர்ப்பங்களும் இப்போது. கிடைக்கும். சிலருக்கு தூர பிரயாணங்கள் உண்டு. அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள்.
கடந்த காலத்தில் எவை, எவை உங்களுக்கு கிடைக்காமல் போனதோ, அது முழுவதுமாக
கிடைக்கக் கூடிய அமைப்புகள் இப்போது உருவாகின்றன. மேஷத்தினரின் வயதிற்கு
ஏற்றார்போல நற்பலன்கள் நடக்கக் கூடிய நல்ல வாரம் இது. உங்கள் அனைத்து முயற்சிகளும்
நிறைவேறும். ராசிநாதன் வலுவாக இருப்பதோடு, ஜீவனாதிபதியும் வலுவாக இருப்பது சாதகமற்ற பலன்களை தடுத்து
நிறுத்தும் ஒரு அமைப்பு. பெண்கள் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள்
சிறப்படைவார்கள். வெளிநாட்டில் இருப்பவருக்கு நல்ல செய்திகள் உண்டு. பெண்களை இந்த
வாரம் நம்பலாம்.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரனும், யோகாதிபதி, புதனும் எட்டில் மறைந்திருந்தாலும், இருவரும், குருவின்
பார்வையில் இருக்கிறார்கள். அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய ஐந்தாம் அதிபதி புதன் அந்த
வீட்டிற்கு கேந்திர நிலையில் இருப்பதால் இப்போது ரிஷபத்திற்கு தொல்லைகள் எதுவும் இல்லை.
உங்களுக்கு இந்த வாரம் குறைகள் எதுவும் சொல்லுவதற்கு இல்லை. லாப ஸ்தானத்தில்
இருக்கும் ராகுவின் தயவால் 2024 ஆம் வருடம் நன்றாக இருக்குமென்பதால், ரிஷபத்திற்கு
இந்த வாரம் தொல்லைகள் எதுவும் இல்லை.
குரு பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் இப்போது சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம்
உண்டு. தொழில், வியாபாரம்
போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக
இருக்கும். சகோதர உதவி உண்டு. குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள்
உடனடியாக அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே
நம்மைக் காப்பாற்றும். சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க
வேண்டிய சூழ்நிலை இருக்கும்.
மிதுனம்:
ராசிநாதன் புதன் சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் சுபத்துவமாக
இருப்பதோடு, ஏழாம் இடத்தில் அமர்ந்து. ராசியை பார்க்கும் நிலையிலும் இருப்பதால்,
உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும்
மிகச்சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகள்
சாதகமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்னைகளை சந்தித்தவர்கள் அது நீங்குவதை
உணர ஆரம்பிப்பீர்கள். நீண்டகால பகை தீர்ந்து சமரசம் ஆவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.
தன்னம்பிக்கையோடு எதையும் சாதிக்கும் வாரம் இது.
மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்துவந்த கஷ்டங்கள் இனிமேல்
எந்த காலத்திலும் திரும்ப வராது என்பதுதான் உண்மை. ஒரு மனிதனின் கோட்சார நிலையில்
அஷ்டமச்சனியே கடுமையான துன்பங்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதி. அப்படிப்பட்ட
அஷ்டமச்சனியையே தற்போது தாண்டி விட்டீர்கள். இனிமேல் உங்களுக்கு தொல்லைகள் எதுவும்
வராது. லாபங்கள் வருகின்ற வாரம் இது. பிள்ளைகள் விஷயத்தில் மனக்கவலைகள், விரயங்கள், சங்கடங்கள் இருந்தவர்களுக்கு
இனி நல்லவைகளை எதிர்பார்க்கலாம்.
கடகம்:
உங்களில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இப்போது கடன் வாங்கக்கூடிய
சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு
தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக்
கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம்.
நான்காம் அதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் செலவுகளும், விரயங்களும் இருக்கும். உங்களில் சிலருக்கு பெண்களால்
அல்லது பெண்கள் சார்ந்த விஷயங்களில் குழப்பங்கள் வரும்.
இதுவரை நல்ல இடத்தில் குருவின் பார்வையில் இருந்து வந்த தனாதிபதி சூரியன்
இன்னும் ஒரு மாத காலத்திற்கு பலவீனமான நிலையை அடைய போவதால் உங்களில் சிலருக்கு
இப்பொழுது தேவையற்ற மாற்றங்கள் இருக்கும் எட்டில் இருக்கும் சனி, இருக்கும் இடத்தை
விட்டு நகர்த்துவார் என்பதால் உங்களில் சிலர் பிறந்த ஜாதக அமைப்பின்படி வேலை
மாற்றம், வீடு, தொழில் மாற்றம், செக்சன் மாறுதல் போன்றவைகளை சந்திப்பீர்கள்.
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று கடகத்தினர் உணருகின்ற வாரம் இது.
சிம்மம்:
சிம்ம ராசி இளைஞர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். இந்த மாதம் ராசிநாதன்
சூரியன், ஆறாம் இடத்தில் அமர்வதால், விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். சிறிய
விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். வேலை செய்யும் இடத்தில்
பாராட்டு கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள்.
இதுவரை தந்தையிடமிருந்து ஆதரவு இல்லாத நிலைமையும்
இனிமேல் சீர்படும். தேவையற்ற வழிகளில் வீண் செலவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிர்காலத் தேவைக்கு கிடைக்கும் பணத்தை சேமிப்பது நல்லது.
பிள்ளைகள் விஷயத்தில் நல்லபலன்கள் உண்டு. சிலருக்கு புத்திரர்கள் மூலம் பணவரவு
வந்து அதன் மூலம் ஏதேனும் வீடோ மனையோ வாங்கும் அமைப்பு உள்ளது. பெண்கள் வகையில் நல்ல விஷயங்கள் நடக்கும். 16 -ம் தேதி அதிகாலை 12.37 முதல் 18-ம் தேதி அதிகாலை 3.33 வரை சந்திராஷ்டமம் என்பதால்
இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில்
அறிமுகமாகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள்
என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.
கன்னி:
கன்னிக்கு இது நல்ல வாரமே. வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு வெற்றி
கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா
உண்டு. கடன் தொல்லைகள் எல்லை மீறாது. அதே நேரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பணம் இழுத்தடித்துத்தான்
வரும். ஏதேனும் சச்சரவு வரலாம் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். எதிலும்
நிதானம் தேவை. சிலருக்கு இதுவரை இருந்து வந்த சாதகமற்ற நிலை மாறும். முயற்சி
எடுத்தும் பயன் இல்லாமல் போன விஷயங்கள் இந்த வாரம் பலனளிக்கும்.
புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை
வாங்குவீர்கள். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக
முடிவுக்கு வரும். 16,17 ஆகிய
நாட்களில் பணம் வரும். 18 -ம் தேதி அதிகாலை 3.33
மணி முதல் 20 -ம் தேதி காலை 8.52 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில்
அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின்நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் அனைத்திலும்
கவனமாக இருப்பது நல்லது.
துலாம்:
ராசியை குரு பார்த்துக் கொண்டிருக்க, யோகத்தை தரும் சனியும், புதனும் நல்ல
நிலைகளில் இருக்கின்ற வாரம் இது. இதுவரை ஆரோக்கியம் இல்லாமல் இருந்த துலாம் ராசிக்காரர்கள் அந்த நிலை நீங்கி உடல்நலம் திரும்ப
கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதை
தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு கடன்கள் இந்த வாரத்தில்
அடைபடும். கிரக அமைப்புகள் சாதகமான நிலையில் இருப்பதால் இனிமேல் உங்களுக்கு
சோதனைகள் எதுவும் இல்லை.
இளையபருவத்தினர் சிலர் எதிர்மறை பலன்களால் தன்னம்பிக்கை இன்றி இருப்பீர்கள்.
அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது போல நல்ல நிகழ்ச்சிகள் இந்த வாரம் உண்டு.
சிலருக்கு இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகளும் பொருளாதார சிக்கல்களும் மாறும். 18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம் தேதி காலை 8.52 முதல் 22-ம் தேதி மாலை 4.22 வரை சந்திராஷ்டமம் என்பதால்
முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டாம். இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது
என்பதால் வீண்வாக்குவாதமோ,
சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.
விருச்சிகம்:
ராசிநாதன் செவ்வாய் இரண்டாம் வீட்டில் குருவின் பார்வையில் பரிவர்த்தனை
அமைப்பிலும் இருப்பதால் விருச்சிக ராசியினருக்கு நல்ல வாரம் இது. இளைய
பருவத்தினருக்கு நல்ல வேலை கிடைக்கும். எல்லாத் துறையினருக்கும் இப்போது நல்ல பலன்கள்
நடைபெறும். இளைஞர்களுக்கு இதுவரை உயர்படிப்பு படிக்கவோ, அரசுத்தேர்வு எழுதவோ இருந்த தடைகள் விலகி விட்டன. இளைஞர்கள் இனிமேல் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு. வெளிநாட்டில்
இருக்கும் குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகள் வரும்.
வேலை விஷயமாகவோ கருத்து வேறுபாட்டாலோ, பிரிந்திருந்தவர்கள் குடும்பத்துடன் சேர்வீர்கள். குழந்தைகள் உங்களின் சொல்பேச்சை கேட்டு நடப்பார்கள். உதவிகள் தேடிவரும்.
நீங்களும் அடுத்தவர்களுக்கு உதவுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். தொந்தரவு
கொடுத்த மேலதிகாரி மாறுதலாகி சாதகமானவர் அந்த இடத்திற்கு வருவார். பிள்ளைகளால்
பெருமைப்படுவீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு தாராள பணவரவு உண்டு. எழுத்துத்துறையினர், ஊடகத்தினர், கணக்கு, சாப்ட்வேர் போன்றவர்களுக்கு வருமானம் இருக்கும்.
தனுசு:
ராசிநாதன் குருவும், யோகாதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்திருக்கும்
நிலையில், ராசியில் சுபரான சுக்கிரனும் அமர்ந்திருப்பதால், இது தனுசுக்கு நல்ல
வாரமே. இந்த வாரம் எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். யோக கிரகங்கள்
வலுவாக இருப்பதால், உங்களுக்கு இது திருப்பம் தரும் வாரம்தான்.
மருத்துவத்துறையினர், அதிகாரம் செய்யும்
அமைப்பில் இருப்பவர்கள் கட்டிடம் கட்டும் தொழில் சம்மந்தப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு
இந்த வாரம் பணவரவு இருக்கும். கூட்டுத்
தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மைகள் இருக்கும்.
உங்களில் முப்பது வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இனிமேல் மாறுதல்கள்
இருக்கும். சுக்கிரன் ராசியில் இருப்பதால் சிலருக்கு பெண் வழி ஏமாற்றங்கள்
இருக்கும். வேலை வாங்கித் தருவதாக எவராவது சொன்னால் முன்னாலேயே நம்பி பணம் தர
வேண்டாம். ஏமாறுவீர்கள். இளைஞர்கள் இருக்கும் வேலையில் இருந்து மாறுவதற்கு முன்
ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். முன் யோசனை இன்றி எதுவும் செய்தால், இப்போது அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடும்.
மகரம்:
மகரத்திற்கு யோக வாரம் இது. இந்த வாரம் பொருளாதார மேன்மையும், வேலை, தொழில், வியாபாரம் அமைப்புகளில் நன்மையும் இருக்கும். உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். கடன்
பிரச்னைகள் தீரும். இதுவரை சகுனி வேலை பார்த்தவர்களை அடையாளம் கண்டு
துரத்துவீர்கள். எதிர்ப்புகள் பலவீனமாகும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில்
லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். செலவுகளில் சிக்கனமாக இருங்கள்.
அதிக வருமானம் வரும் நேரம் என்பதால் ஓரளவாவது சேமிப்பது நல்லது.
ராசிநாதனின் வலுவால் மதிப்பு, மரியாதை, கௌரவம் அந்தஸ்து நன்றாக இருக்கும். சிலர் எதிர்காலத்தில்
சாதிக்க போகும் துறையினை தேர்ந்தெடுப்பதும், இன்னும் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான
நபர்களை சந்திப்பதும் இந்த வாரம் நடக்கும். பெண்களால் சாதகமான பலன்கள் நடக்கும்.
சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் தீரும். சிலருக்கு
எதிர்பாராத அதிர்ஷ்டங்களும் உண்டு. சிலர் மலையும் மலை சார்ந்த இடங்களுக்கும் பயணம்
செய்வீர்கள். அது ஆன்மிகப் பயணமாக இருக்கலாம்.
கும்பம்:
கும்ப ராசியில் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பிரச்னைகள் முடிவுக்கு
வந்து கொண்டிருக்கிறது. உடல்நலம், மனநலம்
கெட்டிருந்தவர்கள் அனைத்தும் சீர் பெற்று நல்ல நிலைக்கு வருவீர்கள். ஜென்மச் சனியின்
தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னை இருப்பவர்களுக்கு நிம்மதி
கிடைக்கத் துவங்கும் வாரம் இது. மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி
கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை
போன்றவைகள் ஏற்பட்டிருந்தவர்கள் வேற்றுமைகளைத் துறந்து ஒன்று கூடுவீர்கள்.
துன்பங்கள் தீரப் போகும் வாரம் இது.
அனைவருக்கும் இது கெடுதல்கள் இல்லாத வாரமாக இருக்கும். பணிபுரியும் இடங்களில்
சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் அலுவலகங்களில் உங்களுக்கு சாதகமான நிலைமை உண்டாகும்.
உங்களை பிடிக்காதவர்களின் கை தாழ்ந்து இனி நீங்கள் மேலே வருவீர்கள். ஏழரைச் சனி
நடப்பதால் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும்.
அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். குடும்பத்தில் முட்டல், மோதல் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள்.
மீனம்:
உங்களின் மனோபலம் அதிகமாகும் வாரம் இது. தடைப்பட்டிருந்த அதிர்ஷ்ட நிகழ்வுகள் இனி
செயல்படத் துவங்கும். அலுவலகங்களில் நிம்மதியான சூழல் இருக்கும் என்றாலும் எந்த
புற்றில் எந்த பாம்பு இருக்கிறதோ என்று நினைத்து தேவையில்லாமல் பயந்து
கொண்டிருப்பீர்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றைக்குமே மதிப்பு உண்டு என்பதை
உணர்ந்து கொண்டீர்களானால் பயம் தேவையே இல்லை. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து
வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மீனத்தினருக்கு யார் நல்லவர் யார் கெட்டவர்
என்று அடையாளம் தெரியும் வாரம் இது.
அடுத்த வருடம் முதல் உங்களுக்கு ஜென்ம சனி ஆரம்பிக்க இருக்கிறது. இப்போதே
அகலக்கால் எதிலும் வைத்துவிட வேண்டாம். இளையபருவத்தினர் சோம்பலை ஒழியுங்கள். அதிகாலையில் எழுந்து வேலை பார்த்து
விட்டாலே பாதிவேலை முடிந்து விட்டதாக அர்த்தம். சுறுசுறுப்பாக ஆக்டிவாக இருங்கள்.
சிலருக்கு ஒரு குறிப்பிட்ட பலனாக வார ஆரம்பத்தில் அப்பா விஷயத்தில் நன்மைகளோ, தந்தையிடமிருந்து பணம் கிடைப்பது அல்லது நீண்டநாட்களாக
சம்மதிக்காத ஒரு விஷயத்திற்கு அப்பா சம்மதிப்பது போன்ற பலன் இருக்கும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :
Post a Comment