கைப்பேசி எண் : 8681 99 8888
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு எட்டில் இருக்கும் சுக்கிரனால் தூர இடங்களில் இருந்து நல்ல தகவல்கள் வருகின்ற வாரம் இது. அறிவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும், பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற தகவல்தொடர்பு துறைகளில் வேலை செய்பவர்களுக்கும் முன்னேற்றங்கள் இருக்கும். சூரியன், செவ்வாய் இருவரும் குருவின் பார்வையில் வலுவாக இருப்பதால் வாரம் முழுவதும் நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு நீச்சத் திரவம் எனப்படும் பெட்ரோல், ஆசிட், மதுபானம் சம்பந்தப்பட்ட தொழில் தொடர்புகள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.
பொது இடங்களில் மற்றவர்களால்
மதிக்கப்படுவீர்கள். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் இந்த வாரம் முடிவுக்கு
வரும். இரண்டாமிடம் வலுப்பெறுவதால் திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு நல்ல செய்திகள்
இருக்கும். இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை
தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும்
ஒரு சிலருக்கு வீட்டுப்பொருள் சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
உதவிகரமாக இருப்பீர்கள்.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் ஏழில்
இருப்பதால், ரிஷபத்திற்கு ஒரு குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு
இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும்.
தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து
பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும்.
கலைஞர்கள் வளம் பெறுவார்கள். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு.
ஐந்தில் கேது இருப்பதால், பிள்ளைகளின்
மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள்.
நீங்கள் சொல்வது ஒன்று. பிள்ளைகள் செய்வது ஒன்றுமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுத்த கடன்
சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். இந்த வாரம் முதல் எதிர்ப்புகள் விலகும். கடன்கள்
கட்டுக்குள் இருக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்டவர்கள், திரவப்பொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல பணவரவினை
அடைவார்கள். கணவன்- மனைவி உறவு உரசல்கள் இன்றி சந்தோஷமாகவே இருக்கும்.
மிதுனம்:
ராசிநாதன் புதன் குருவின்
பார்வையில் இருப்பதாலும், யோகாதிபதி சனி ஆட்சி
வலுவாக இருப்பதாலும், அனைத்திலும் தெளிவான மனதுடன் நீங்கள் முடிவெடுக்கும் வாரம்
இது. சுக்கிரன் ஆறில் இருப்பதால் சிலருக்கு மட்டும் பெண்கள் விஷயத்தில் நல்லதும்
கெடுதலுமான இரட்டை பலன்கள் இருக்கும். கொடுத்துக் கெடுக்கும் சில சம்பவங்கள் இந்த
வாரம் உண்டு. அக்கா, தங்கை, அம்மா, மகள் போன்ற பெண் உறவுகள் விஷயத்தில் செலவுகளும், வீண் மனஸ்தாபங்களும் இருக்கும். பனிரெண்டாமிடம் வலுப்
பெறுவதால் சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள்.
உயர் பதவிகளில்
இருப்பவர்களுக்கு இருந்து வந்த சாதகமற்ற நிலை மாற்றம் அடைந்து நன்மைகள் நடக்கும்
நிலை ஆரம்பிக்கிறது. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை
வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும். மனைவியின் உறவினர் விஷயத்தில் மூக்கை
நீட்ட வேண்டாம். அதனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. ரியல்
எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற
துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள்.
கடகம்:
ராசிநாதன் சந்திரன், தேய்பிறை நிலையில்
கேதுவுடன் இணைவதால். இந்த வார சிறப்பு பலனாக பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம்
இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். அலுவலக பிரச்னைகளை சுமுகமாக பேசி தீர்த்துக்
கொள்வது நல்லது. பிடிவாதம் பிடித்து வளர்க்காதீர்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு
லாபம் உண்டு. கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.
சிலர் ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள். அறிமுகம் இல்லாத நபர்களிடம்
கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை.
கடக ராசி இளைஞர்கள், மாணவர்களின் எதிர்கால நல்வாழ்வில் அவர்களது
பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு
எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்ச்சிகள் இப்போது இருக்கும். வாரம் முழுவதும்
பணவரவிற்கு ஏற்ற நாட்கள்தான். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள்
சிறப்பு பெறுவார்கள். திறமையை மட்டும் வைத்துத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம்
அடைவீர்கள்.
சிம்மம்:
இந்த வாரத்தின் குறிப்பிட்ட
பலனாக ஏழில் உள்ள சனி, சுக்கிரனை பார்ப்பதால், வாழ்க்கைத் துணை விஷயத்தில்
எரிச்சல் படுவீர்கள். கோபமும் அடிக்கடி தலைகாட்டும். அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும் என்றாலும் முயற்சிக்குப் பின்பு எதையும் வெற்றிகரமாக
முடிக்க முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு நோக்கிய பயணம் இருக்கும். கலைஞர்களுக்கும்
பெண்களுக்கும் சிறப்புக்கள் சேரும். வார ஆரம்பத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மூவரும் குருவின்
பார்வையில் இருப்பதால், தாய்வழி உறவில் சந்தோசம், அம்மாவால் ஆதாயம் உண்டு.
அந்தஸ்து கௌரவத்திற்கு எந்தவித
குறைவும் வராது. பணவரவுக்கும் பஞ்சமிருக்காது. அரசுஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும், தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் நன்மைகள் நடக்கும்.
உழைப்பாளிகளுக்கு வேலைப்பளு குறைவாக இருக்கும். சிம்ம ராசியினர் சாதிக்கும் வாரம்
இது. நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த காரியம் எண்ணம் போல் நிறைவேறும். தெய்வ
அருள் உண்டு. பிள்ளைகளால் பெருமை வரும்.
கன்னி:
எட்டில் குரு அமர்ந்து, விரயத்தில் வலுவாக உள்ள சந்திரனை பார்க்கும் சுகபோக
வாரம் இது. கன்னியினர் இந்த வாரம் சுகத்திற்காகவும், சந்தோஷத்திற்காகவும் செலவுகள் செய்வீர்கள். நான்காம்
இடம்,
ராசிநாதன்
இருப்பு, குருவின் பார்வை என வலுப் பெறுவதால் உங்களில் சிலர் பழைய வாகனத்தை விற்று
விட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சிலருக்கு சொந்த வீடு
சம்பந்தமான ஆரம்பங்கள் இருக்கும். சிறு கலைஞர்கள் பிரபலமாவதற்குரிய வாய்ப்புகள்
இருக்கின்றன. பெண்களுக்கு அலுவலகங்களில் வேலைப்பளு குறையும்.
ஆறாமிடத்தில் ஆட்சி நிலையில் உள்ள
சனியால் எதிர்ப்பவர்களை வெற்றி கொள்வீர்கள். உங்களை தவறாக நினைத்துக்
கொண்டிருந்தவர்கள் உங்களை புரிந்து கொண்டு நெருக்கமாகும் வாரம் இது. அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு
நல்ல பலன்களையும் நிம்மதியையும் தரக்கூடிய அமைப்பு இருப்பதால் இது ஆனந்த வாரமாக
இருக்கும். இளைய பருவத்தினருக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள்
நடக்கும். சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். ராசிநாதன் வலுப் பெறுவதால்
எதையும் சமாளிப்பீர்கள்.
துலாம்:
முயற்சிகளைக் குறிக்கும்
மூன்றாம் இடத்தில் பாபர்கள் சூரியன், செவ்வாய் இணைந்து, அந்த வீட்டை குருவும் பார்த்து, சுபத்துவப்
படுத்துவதால் துலாத்திற்கு அனைத்தும் நன்றாக நடக்கும் வாரம் இது. ஆறில் ராகு, ஏழில்
குரு யோக அமைப்பில் இருப்பதால் உங்களில்
ராகு, குரு புக்தி நடப்பவர்களுக்கு நல்லபலன்கள் இருக்கும். பெண்கள் விஷயத்தில்
செலவுகள் உண்டு. மீடியா துறையினருக்கு அலைச்சல்கள் உண்டு. அலுவலகங்களில் சுமுகமான நிலை இருக்கும்.
தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள்.
இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை
கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இது சிறந்த
வாரம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். பெண்களுக்கும் இது நல்ல வாரமே.
மாமியாரை உங்கள் பேச்சைக் கேட்க வைப்பீர்கள். வாரம் முழுதுமே எல்லா விஷயங்களும்
நன்மையில் முடியும். துலாமிற்கு இப்போது வளர்பிறை காலம். சோம்பலின்றி செயலாற்றினால்
அனைத்தையும் ஜெயிக்கலாம் என்பது உறுதி.
விருச்சிகம்:
வார ஆரம்பத்திலேயே தர்ம,
கர்மாதிபதிகள் சூரியனும், சந்திரனும் குருவின் பார்வையில் இருக்க, ராசிநாதனும், இரண்டாம் இடத்தில் பரிவர்த்தனை
நிலையில் இருப்பது, விருச்சிக ராசிக்காரர்களுக்கு
வேலை,தொழில் மூலம் நன்மைகளும், குடும்பத்திற்காக
செலவுகள் செய்வதையும் காட்டுகிறது. இளைய பருவத்தினருக்கு வடக்குத் திசையில் வேலை
அமைப்புகள் உருவாகி, இருக்கும் இடத்தை விட்டு
வெளியிடங்களுக்கு மாறுதல் ஆவீர்கள். எந்த ஒரு செயலும் வெற்றியாக முடியும்.
சந்திரன் வாரம் முழுவதும் வலுவாக இருப்பதால் தாமதித்து வந்த தொழில் வாய்ப்புக்கள்
நல்லபடியாக கிடைக்கும்.
ராசிநாதன் வலுவாக இருப்பதால் இந்த
வாரம் கெடுதல்கள் இல்லை. இளைய பருவத்தினருக்கு படிப்படியாக நன்மைகள் மட்டுமே நடக்கும்.
சிலருக்கு கிணற்றில் போட்ட கல்லாக அசையாமலேயே இருந்த அனைத்து விஷயங்களும் இனி
சாதகமாகும். பதவி உயர்வு வரும். வருடத்தின் ஆரம்பமே சுபமாக இருப்பதால் விருச்சிகத்திற்கு
துயரங்கள் சொல்ல எதுவும் இல்லை. நன்மைகள் மெதுவாக நடக்கும். குடும்பத்தில் சுப
காரியங்களுக்கு இருந்து வந்த தடை விலகும்.
தனுசு:
தனுசு ராசி இளைஞர்களின்
நியாயமான குறைகள் தீரும் வாரம் இது. எல்லா கஷ்டங்களும் முடிந்து விட்டது. கடந்த நான்கு
அல்லது ஐந்து வருடங்களாகவே சனியின் சாதகமற்ற போக்கால் பெரும்பாலான தனுசு ராசி
இளைஞர்களுக்கு எவ்வித நற்பலனும் நடக்கவில்லை. உங்களில் சிலர் தொழில் அமைப்புகளில்
சரிவர எதுவும் நடக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அனைத்தும் நல்லபடியாக
தீர ஆரம்பிக்கும் வாரம் இது. என்ன கஷ்டம் இருந்தாலும் தகுந்த நேரத்திற்கு பணம்
வந்து அனைத்தையும் சமாளிப்பீர்கள். கடன் தொல்லை எல்லை மீறாது.
ஒருவருடைய வாழ்க்கையில் ஏழரைச்
சனி நடக்கும்போது நல்லவர் யார், கெட்டவர் யார், நல்லது எது, கெட்டது எது என்ற அனுபவத்தை தரும், இளைஞர்களுக்கு கடந்த வருடங்களில் கிடைத்த சில
அனுபவங்கள் கசப்பாக இருந்தாலும் அது உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்ல உரம் போடுவதாக
அமையும். உங்களில் சிலருக்கு பணத்தின் அருமையை சனி புரிய வைத்தார் என்பதை மறந்து
விடாதீர்கள். உங்களின் சந்தோஷ வாழ்க்கை கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது.
மகரம்:
வாரத்தின் முதல் நாளே
சந்திராஷ்டம நாளாக அமைவதால் மகரத்திற்கு இந்த வாரத்தின் முதல் பகுதி மட்டும்
குழப்பங்களைத் தரும் நாட்களாக இருக்கும். சிலருக்கு எதிலும் ஒரு தெளிவற்ற நிலையும், பிறர் உங்களை எரிச்சல்படுத்தி பார்ப்பதும் உண்டு.
தயக்கத்துடனும், நிதானத்துடனும் எல்லா
விஷயங்களையும் எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் நடப்பவைகள் ஏறுக்குமாறாக இருக்கும், அதேநேரத்தில் சூரியன் வலுவாவதால் தொழிலில் வருமானம்
இருக்கும். சிலருக்கு ஏதேனும் ஒரு வகையில் திடீர் பண வரவு உண்டு.
ராஜ யோகாதிபதி சுக்கிரனும்,
புதனும் நல்ல நிலையில் இருப்பதால் எதுவுமே எல்லை மீறாது. சிலருக்கு மட்டும் பெண்கள்
விஷயத்தில் வீண் பிரச்சினைகளும், அபவாதங்களும், பெயர் கெடுதல்களும்
இருக்கும். 5,6 ஆகிய
நாட்களில் பணம் வரும். 31 -ம்தேதி
அதிகாலை
5.42 மணி முதல் 2-ம்தேதி மாலை 6.34
மணி வரை சந்திராஷ்டம
நாட்கள் என்பதால் வெகுதூர பிரயாணங்களோ புதியமுயற்சிகளோ செய்ய வேண்டாம். இந்த
நாட்களில் எதையும் செய்யும் முன் ஒன்று இரண்டாக யோசிப்பது நல்லது.
கும்பம்:
வார ஆரம்பத்தில் கும்ப ராசிக்கு
அனைத்து நன்மைகளும் நடக்கின்ற வாரம் இது. வாரத்தின் நடுப்பகுதி சந்திராஷ்டம
நாட்களாக இருப்பதால் எதிலும் முடிவெடுக்க சற்று தயங்குவீர்கள். இருந்தாலும் ராசிநாதன்
வலுவுடன் இருப்பதால் கெடுபலன்கள் எதுவும் நடக்காது. சிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த
ஒரு விஷயம் இப்போது கூடி வரும். குறிப்பாக புத்திர பாக்கியம் கிடைக்கும். அந்தஸ்து
கௌரவம் சிறப்பாக இருக்கும். பண வரவிற்கும் குறைகள் இருக்காது. முயற்சிகள்
வெற்றியடையும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும்.
கும்பத்தினருக்கு இந்த வாரம் முதல்
காரிய வெற்றி நிச்சயம் உண்டு. தொழில் மேம்படும். வேலை செய்யும் இடத்தில் சந்தோசம்
இருக்கும். வருமானம் நன்றாக வரும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு
சந்தோஷமான விஷயங்கள் உண்டு. உடல்நலம், மனநலம் சிறப்பாக இருக்கும். 6,7 ஆகிய நாட்களில் பணம் வரும் 2-ந்தேதி மாலை 6.28 மணி முதல் 5-ந்தேதி காலை 6.46 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட
தூர பிரயாணங்களோ புதிய முயற்சிகளோ செய்ய வேண்டாம்.
மீனம்:
ஜீவன ஸ்தானமான பத்தாம்
இடத்தில் சூரியன், செவ்வாய் இணைந்து குருவின் பார்வையில் இருப்பதாலும், குறிப்பாக
9, 10 க்குடையவர்கள் பரிவர்த்தனை நிலையில் இருப்பதாலும். மீனத்திற்கு கஷ்டங்கள் கொடுக்காமல் இஷ்டங்கள்
நிறைவேறும் வாரம் இது. குரு இரண்டாமிடத்தில் இருப்பதால் இதுவரை தள்ளிப் போயிருந்த
வேலைவாய்ப்பு நடப்பதும், அப்பாய்ன்மெண்ட் ஆர்டர்
கையில் கிடைப்பதும் இருக்கும். உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. மீனத்திற்கு எந்தப்
பிரச்சனையும் இந்த வாரம் இல்லை.
வார ஆரம்பத்தில் உற்சாகத்துடன்
செயல்படுவீர்கள். 12ல் சனி, ராசியில் ராகு இருப்பதால், எல்லா விஷயங்களும் கொஞ்சம்
இழுபறியாக இருந்தாலும் வார இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடந்தே தீரும். அதேநேரம்
விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். 2 ,3 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ம்தேதி காலை 6.46 மணி முதல் 7-ந்தேதி
மாலை
4.01 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும்
நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.

No comments :
Post a Comment