ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
நவம்பர் மாதம் முதல் இரண்டு வாரங்களும் யோகாதிபதிகள் சூரியனையும் செவ்வாயையும் குரு பார்க்கின்ற நிலையில், அதனையடுத்த பிற்பகுதியில் யோகர்கள் வலுப் பெற்று இருக்கும் நல்லவை நடக்கும் மாதமிது. நவம்பர் கடகத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதம். அஷ்டமச் சனியால் பாதிக்கப்பட்ட இளைய பருவத்தினருக்கு இனிமேல் முன்னேற்றங்கள் இருக்கும். கேதுவின் நிலையால் மதிப்புக் கூடும்படியான நிகழ்வுகளும், சந்தோஷம் தரக்கூடிய சம்பவங்களும் உண்டு. அனைத்தும் கிடைக்கும் மாதம் இது. குறிப்பாக வெளிநாட்டில் இருக்கும் கடகத்தினருக்கு திருப்புமுனையான சம்பவங்கள் உண்டு. இன்னும் சில மாதங்களில் அஷ்டமச் சனி என்னும் கெடுபலன் அமைப்பு மாறப் போவது மிகப்பெரிய நிம்மதியை உங்களுக்குத் தரும்.
சுக்கிரன்
மூன்றில் கேதுவுடன் இருப்பதால் வாழ்க்கைத் துணை, நண்பர்கள், பங்குதாரர்கள் விஷயத்தில்
லாபங்களும், நன்மைகளும் இருக்கும். அதேநேரம் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள்
வரும். மனைவியின் பேச்சை கேட்பதனால் ஒன்றும் குறைந்து விடாது என்பதால் முக்கியமான விஷயங்களில்
தம்பதிகள் இருவரும் கருத்தொற்றுமையோடு முடிவெடுப்பது நல்லது. மாத முற்பகுதியில் சூரியன்
நீச்சமாவதால் தந்தை வழி உறவினர்களிடம் சற்றுத் தள்ளி இருங்கள். அப்பாவின் ஆதரவு கிடைப்பது
கஷ்டம். மனதில் நினைப்பதை பெரியவர்களிடம் சரியாக வெளிப்படுத்த முடியாமல் அவர்கள் தவறாக
புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதுவரை
தொழில் நிலைமை சரி இல்லாமல் இருந்தவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல்
பிரச்னைகள் இல்லாமல் அனைத்தும் நல்லபடியாக நடைபெறும். புதன் வலுப்பெற்று இருப்பதால்
குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். நீண்டநாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு
இருந்த விஷயங்கள் முடிவுக்கு வரும். அஷ்டமச் சனி நடப்பதால் சிலருக்கு வேலைமாற்றம்,
தொழில் மாற்றம், வீடுமாற்றம் என மாற்றங்கள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில்
நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
அந்நிய இன,மத,மொழிக்காரர்கள் உதவுவார்கள். நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள்
உண்டு.
1,2,3,8,9,11,12,14
ஆகிய நாட்களில் பணம் வரும். 20 -ம் தேதி காலை 10.07 முதல் 22 -ம் தேதி மதியம்
12.58 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய
வேண்டாம். இந்த நாட்களில் அறிமுகம் ஆகும் நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பார்கள்
என்பதால் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும்.
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :
Post a Comment