கைப்பேசி : +91 9768 99 8888
சிம்மம்:
நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நிலையாக இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் கிடைக்கும். அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள். காவல்துறையினருக்கு இது நல்ல மாதமாக அமையும். கலைத்துறையினர், விவசாயிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் இந்த மாதம் லாபம் தரும். இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங், ரெக்கவரி வெரிபிகேஷன் போன்ற துறையில் இருப்பவர்களுக்கு நல்லவை நடக்கும். இந்த மாதம் முப்பதாம் தேதி நடக்க இருக்கும், ராகுகேது பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நன்மைகளைச் செய்ய காத்திருப்பவரான குரு பகவான் கிரகண தோஷம் நீங்கப் பெறுகிறார். அடுத்த ஏப்ரல் வரை குருவால் இனிமேல் உங்களுக்கு நல்ல நன்மைகள் இருக்கும்.
வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவருக்கும் இது நல்ல நேரம். அடுத்த மாதம் முதல் புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். கிளைகள் ஆரம்பிக்கலாம். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவி கிடைக்கும். எந்த ஒரு செயலும் தற்போது வெற்றியாக முடியும். மாத பிற்பகுதியில் பதினைந்தாம் தேதிக்குப் பிறகு பணவரவுகளும், சந்தோஷமான நிகழ்ச்சிகளும் உண்டு. மாதம் முழுவதும் மன மகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரிய துன்பங்கள் எதுவுமே வரப் போவது இல்லை. பத்தாம் வீட்டோன் வலுப் பெறுவதால் போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். அலுவலகங்களில் தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயங்கள் இருக்கும். மனதிற்குள் சோகத்தை கொண்டிருந்தவர்கள் இனி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவீர்கள்.
3,5,7,10,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 26 -ம்தேதி அதிகாலை 5:57 மணி முதல் 28-ம் தேதி காலை 7:31 மணி வரை சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலை பாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment