கைப்பேசி : +91 9768 99 8888
துலாம்:
துலாம்நாதன், சுக்கிரன் மாதம் முழுவதும் கேந்திர வலிமை பெற்று பத்தாம் இடத்தில் உள்ளதாலும், ராசிக்கு குருபார்வை இருப்பதாலும், இது உங்களுக்கு நல்ல திருப்பங்களையும் சாதகமான பலன்களையும் தருகின்ற மாதமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்து, கௌரவம் ஓங்கி நிற்கும் காலம் இது. ராசிநாதன் வலுப் பெற்றதால் உங்கள் எண்ணங்கள் செயலாகி நினைத்தது நடக்கும். சொன்னது பலிக்கும். ஒன்பதாம் அதிபதி புதனும் 11 இல் வலுவாக இருப்பதால் பணவரவும் சிறப்பாக இருக்கும். குரு சாதகமான நிலையில் இருப்பதால் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி எதிர்கால நல்வாழ்க்கைக்கான அடிப்படைகளை இப்போது அமைத்துக் கொள்ளுங்கள்.
அரசு, தனியார்துறை ஊழியர், மற்றும்
வியாபாரிகளுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
சுக்கிரன் வலுப்பெறுவதால் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். நீண்ட
நாட்களாக தடைபட்டு வரும் சுபகாரியங்கள் சட்டென்று முடிவாகி ‘ஜாம்ஜாம்’ என்று நடைபெறும். இன்பச்சுற்றுலா செல்லுவீர்கள். சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். வீட்டுக்கு
தேவையான வாஷிங்மிஷின்,
குளிர்சாதன பெட்டி, ஏசி போன்றவைகளை வாங்கி குடும்பத்தினரை
மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து
வந்த காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல நிறைவேறும். கலைஞர்களுக்கு சிறந்த
மாதம் என்பதில் சந்தேகம் இல்லை.
சூரியன், செவ்வாய் பன்னிரண்டாம் இடத்தில்
இணைவதால் சிலருக்கு தேவையற்ற வழிகளில் வீண் செலவு இருக்கும். கிடைக்கும் பணத்தை
சேமிப்பது நல்லது. பெண்கள் வகையில் நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகள் உங்களின்
சொல்பேச்சை கேட்டு நடப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் முட்டல், மோதல் இருந்தாலும் ஒரு வழியாக சமாளித்து
விடுவீர்கள். எழுத்துத்துறையினர்,
ஊடகத்தினர், கணக்கு, சாப்ட்வேர்,
தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் போன்றவர்களுக்கு நல்ல
வருமானம் இருக்கும். தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ‘அன்னை மீனாட்சியை’ ஒருமுறை
தரிசிப்பது அனைத்து வளங்களையும் தரும்.
7,8,9,10,11,15,16,17,25,26 ஆகிய
நாட்களில் பணம் வரும். 5-ந்தேதி மதியம் 3:00 மணி முதல் 7 -ந்தேதி இரவு 11.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால்
இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள்
அவசரமான மாற்றங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment