Thursday, December 1, 2022

கன்னி: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கன்னி:

கன்னிக்கு யோக மாதமிது. ஏழாம் இடத்திலிருந்து குரு ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதேபோல ஆட்சி பெற்ற குருவின் வீட்டில் ராசிநாதன் புதனும், சுக்கிரனும் இணைந்திருக்கிறார்கள். மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் சுக்கிரனின் இணைவில், குருவின் வீட்டில் இருப்பதால் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறக்கூடிய மாதமாக டிசம்பர் அமையும். சென்ற காலங்களில் எந்த விஷயத்தில் உங்களுக்கு வருத்தம் இருந்ததோ அது இப்பொழுது தீரும். கன்னி ராசிக்காரர்களின் வயதிற்கு ஏற்ற வகையில் வேலை, தொழில், சொந்த வாழ்க்கை போன்றவைகளில் சிக்கல்கள் தீரும். நல்ல மாற்றங்கள் இப்போது உண்டு.

அடுத்த வருடம் முதல் கன்னிக்கு நல்ல அமைப்புகள் ஆரம்பிக்க இருப்பதால் இந்த மாதத்திலிருந்து சிலருக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உங்களில் சிலருக்கு யாருடன் எந்த திசையில் பயணிப்பது போன்ற தெளிவுகள் இருக்கும்.  எதை லட்சியமாக கொண்டிருக்கிறீர்களோ அதை நோக்கி பயணிப்பீர்கள்.  கல்வி வேலை போன்றவைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்களில் சிலருக்கு இந்த மாதம் புதிய அறிமுகங்கள் இருக்கும். சிலர் காதலிக்க ஆரம்பிப்பீர்கள்.  ஏற்கனவே உள்ள காதல் சிலருக்கு திருமணம் வரை செல்லும்.  

மாதம் முழுவதும் எட்டுக்குடையவனான செவ்வாய் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தந்தையால் மருத்துவச் செலவுகள் இருக்கும். தந்தையால் விரையம், தந்தையே விரையம் என்ற கிரகநிலை உள்ளது. கவனம். புனித யாத்திரை செல்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை அடைவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாதம் முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள் லாபம் கிடைக்கப் பெறுவார்கள். வயதானவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும்.

3,6,8,11,12,13,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ம் தேதி காலை 6.16 முதல் 6-ம் தேதி மதியம் 3.03 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள், ஆரம்பங்கள் எதையும் மேற்கண்ட நாட்களில் செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment