Thursday, December 1, 2022

கடகம்: 2022 டிசம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

கடகம்:

ஒன்பதாம் இடத்தில் இருந்து ராசியை பார்க்கும் குருவும், லாப ஸ்தானத்தில் உள்ள ராஜ யோகாதிபதி செவ்வாயும் இந்த மாதம் முழுவதும் கடக ராசிக்காரர்களை காப்பாற்றும் நிலையில் இருப்பதால் பெரிய பிரச்சனை இல்லாத மாதமாக டிசம்பர் இருக்கும். வேலையைக் குறிக்கும் ஆறாம் இடத்தில் சுக்கிரனும் புதனும் நல்ல நிலையில் உள்ளதால் கடக்த்தினரின் வேலை தொழில் வியாபார அமைப்புகளில் பின்னடைவுகள் எதுவும் இருக்காது. நல்ல வருமானம் இருக்கும்.  குடும்பத்தில் அமைதி உண்டு. கணவன் மனைவி புரிந்துணர்வுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளால் தொல்லை எதுவும் இல்லை. கடன், நோய் போன்றவைகளும் கட்டுக்குள் இருக்கும். பொதுவில் நல்ல மாதம் தான் இது.

உங்களில் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால் அடுத்த மாதம் முதல் எதிலும் அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள் நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார். வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். முதலீடு செய்து தொழில் எதுவும் ஆரம்பிக்க வேண்டாம். கடன் வாங்கவே வாங்காதீர்கள். ஆனாலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் இருக்கும். கடன்காரர்களுக்கு சொல்லும் தேதியில் பணம் தர முடியாமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது.

ஆயிலியம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கேது சுபத்துவமாக இருப்பதால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நன்மைகள் உண்டு. இரும்பை கையில் கொண்டு தொழில் செய்யும் டெயிலர்கள், மெக்கானிக்குகள் ஆலைத் தொழிலாளிகள் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். கெடுதல்கள் எதுவும் இல்லாத மாதம் இது.

1,2,3,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம் தேதி அதிகாலை 3.30 முதல் 29-ம் தேதி அதிகாலை 5.55 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான எதையும் எடுக்காமல் இருப்பது நல்லது. இந்த நாட்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டை சச்சரவோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment