Saturday, September 3, 2022

மீனம்: 2022-செப்டம்பர் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

மீனம்:

செப்டம்பர் மாதம் முழுவதும் முக்கிய பலனாக ராசிநாதன் குரு ராசியிலேயே ஆட்சியாக இருக்க, ஏழாமிடத்தில் அமர்ந்து உச்ச புதன் ராசியைப் பார்க்கின்ற, வாழ்க்கைத்துணை வழியில் சிறப்புக்கள் கிடைக்கின்ற யோக மாதமிது. இதுவரை கணவர் அல்லது மனைவி பேரில் இருந்து வந்த மன அழுத்தங்கள், வருத்தங்கள் மீன ராசிக்காரர்களுக்கு விலகப் போகின்றன. வாழ்க்கைத்துணை உங்களுடைய பேச்சைக் கேட்கின்ற மாதமாக இது இருக்கும். விவாகரத்து வழக்குகளில் நல்ல தீர்ப்புகள் கிடைக்கும். உங்களில் சிலர் சமரசமாகி வாழ்க்கையில் மீண்டும் இணைவீர்கள். முதல் திருமணம் தோல்வியுற்று இரண்டாவது திருமணமாவது நல்ல விதமாக அமையுமா என்பது போன்ற கலக்கத்தில் இருப்பவர்களுக்கு நல்ல அறிமுகங்கள் கிடைக்கக்கூடிய மாதம் இது.  

மாத முற்பகுதியில் ஆறுக்குடைய சூரியன் ஆறிலேயே வலுவாக இருந்தாலும், சுக்கிரனின் இணைவால் சுபத்துவமாக இருப்பதால், வீடு, வாகனம், நிலம் போன்றவைகளுக்கு கடனை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடன்கள் கிடைக்கும். சுப கடன்கள் உண்டு. தொழில் முதலீட்டிற்காக பணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பணம் கிடைக்கும். மற்றவர்கள் உதவுவார்கள். வளர்ச்சிக்கான ஆரம்பங்கள் இப்போது நடக்கப் போகின்றன. பாக்கியதிபதி செவ்வாய் மூன்றில் அமர்ந்து தன்னுடைய வீட்டை பார்ப்பதால் இதுவரை சொத்து பிரச்சனையில் இருந்து வந்த சாதகமற்ற போக்கு விலகப் போகிறது. சகோதரர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும். மூன்றாவது மனிதர் ஒருவரின் தலையீட்டினால் பங்காளி தகராறு விலகும். விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை இப்போது மீன ராசிக்காரர்களுக்கு அதிகரிக்கும்.  

சமரசமாகிப் போவதால் ஒன்றும் கெடுதல் நடக்காது என்பதை உணர்ந்து சிலவற்றில் விட்டுக் கொடுத்து உங்களுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அக்காள், தங்கைகள் உறவு மேம்படும். இதுவரை கைகொடுக்காத பெண் வழி சொந்தங்கள் கை கொடுப்பார்கள். குடும்பத் தலைவிகளுக்கு இது நல்ல மாதம். மாமனார், மாமியாரிடம் நற்பெயர் எடுப்பீர்கள். மகளிருக்கு அலுவலகங்களில் இருந்து வந்த தொல்லைகள் விலகும். எல்லா நிலைமைகளும் சீராகும். இதுவரை வராத தைரியம் வந்து ஒரு தெளிவான முடிவை வாழ்க்கையிலும், தொழில் அமைப்பிலும் எடுப்பீர்கள். ராசி வலுவாக இருப்பதால் உங்கள் சிந்தனை, செயல்திறன், ஆக்கம், ஊக்கம் அனைத்தும் சிறப்பான நிலையில் இருக்கும். சாதனைகள் புரிய முடியும். பொதுவாக மீன ராசிக்காரர்களுக்கு இது உற்சாகத்தை தரும் மாதம்தான். கஷ்டங்கள் எதுவும் கண்டிப்பாக இருக்காது.

1,4,5,6,7,8,20,21,22,28,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ந்தேதி மாலை 6.18 மணி முதல் 29-ந்தேதி இரவு 11.24 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல் எதுவும் நடக்காது. இருந்தாலும் நீண்ட தூர பிரயாணங்கள் புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எதுவும் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

 அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

2 comments :

  1. Pandit Bhairav a Famous Indian Astrologer in California who has been practicing astrology for more than 25 years.
    Best Astrologer in Florida

    ReplyDelete
  2. Sairam, Top, Best & Famous Indian astrologer has proved his expertise as best, famous & Top Indian astrologer in USA.
    astrologer in usa

    ReplyDelete