Monday, August 1, 2022

மேஷம்: 2022 ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

மேஷம்:

மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் ராகுவிடம் இருந்து விலகி சுபத்துவத்தை அடைவதால் மேஷ ராசிக்கு இந்த மாத பிற்பகுதியில் இருந்து நல்லவைகள் நடக்கப்  பெறும். கேட்ட இடங்களில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய சிந்தனை செயல்திறன், தைரியம் சிறப்பாக செயல்படும். பத்தில் சனி இருப்பதால் கீழே வேலை செய்பவர்களை முழுக்க நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். பணவரவு இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று கூடுவீர்கள். நீண்ட நாள் பார்க்காத நண்பர்கள் உறவினர்களை இந்த மாதம் பார்த்து உரையாடலாம். விருந்து கொடுக்கலாம். புதிய வீடு வாங்கலாம். இருக்கும் வீட்டை மேம்படுத்தலாம். நல்ல வாகனம் அமையும். வசதிக் குறைவான வீட்டில் இருப்பவர்கள் வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

வழக்குகள் உங்கள் பக்கம் தீர்ப்பாகும். மாத பிற்பகுதியில் இருந்து பிரச்சினைகள் எதுவும் வராது. எதிலும் வெற்றி கிடைக்கும். அறிமுகம் இல்லாதவர்களும் உதவுவார்கள். சூதாட்டம் பங்குச்சந்தை கை கொடுக்கும். பெண்கள் தொடர்பான நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல காலம்தான். இதுவரை இருந்துவந்த நஷ்டங்களும் விரயங்களும் இனிமேல் இருக்காது படிப்படியாக வியாபாரம் முன்னேற்றத்தை நோக்கி போகும் அடுத்த வருட ஆரம்பத்தில் சனிபகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்திற்கு வருவதால் மேஷராசி வியாபாரிகள் அனைவருக்குமே இனிமேல் வியாபாரம் மிகச் சிறப்பாக இருக்கப் போகிறது

அரசு ஊழியருக்கு இது நல்ல மாதம்தான். சுக்கிரனின் நான்காமிட மாற்றத்தால் சனி பார்வையில் சுக்கிரன் வருவதால் வேலை செய்யும் இடத்தில் உங்களில் சிலருக்கு பெண்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் வரும் என்பதால் அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பது நல்லது. குறிப்பாக பெண்களின் கீழே வேலை செய்பவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். மாத பிற்பகுதியில் ஆறாமிடம் வலுப்பெறுவதால் எதிர்ப்புகள் வரும். யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். செவ்வாய் ராகு இணைவு விலகுவதால் இனிமேல் சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இனிமேல்  நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள்.

1,2,3,7,8,9,18,19,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 6-ம் தேதி மதியம் 12.06 மணி முதல் 8-ம் தேதி பகல் 2.37 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள், முதலீடுகள், ஆரம்பங்கள் எதையும் தவிர்ப்பது நல்லது. எவரிடமும் வாக்குவாதமோ, வீண் பிரச்சனைகளையோ செய்ய வேண்டாம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment