கைப்பேசி : +91 9768 99 8888
சிம்மம்:
மாதத்தின் முற்பகுதியில் யோகத்தை தரக்கூடிய பத்தாம் இடத்தில் ராசிநாதன் சூரியன் இருக்கிறார் பிற்பகுதியில் அவர் லாபஸ்தானமான 11ம் இடத்தில் குருவின் பார்வையோடு இருக்கிறார். ஆகவே பதினைந்தாம் தேதிக்கு பிறகு சிம்மத்தினர் அனைவருக்குமே நினைத்தது நடக்கும். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு இனிமேல் முன்னேற்றமான நிலைமைகள் இருக்கும். மாத பிற்பகுதியில் ஆறாம் இடம் சனியின் இருப்பால் பலம் பெற்று அமைவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் இனி சிறப்பாக நடைபெறும். அரசுப் பணியாளர்கள், மருத்துவம், விளையாட்டு, காவல்துறையினர், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள்.
குறிப்பிட்ட பலனாக யோகாதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து பாபத்துவமாக இருப்பதால் எங்கும் எதிலும் மறைமுகமான எதிர்ப்புகள் இருக்கும். போலியாக சிரித்துப் பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். ஜீவனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் பணவரவு உண்டு. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். கணவன், மனைவி உறவும், வாழ்க்கைத்துணை வழியில் உதவிகளும் சுமாராகவே இருக்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளும், கோர்ட் கேஸ் போன்றவைகள் இருப்பவர்கள் வழக்கை முடிக்குமாறு அவசரப்பட வேண்டாம்.
ஐந்துக்குடைய குரு எட்டில் மறைவதால் வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. மனம் எப்போதும் ஒருவித குழப்பத்துடன் இருக்கும். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். பங்குச் சந்தை வேண்டவே வேண்டாம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் எடுப்பவர்களுக்கு விசா போன்றவைகள் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு கை கொடுக்கும்.
4,6,7,8,12,14,15,24,26,29 ஆகிய நாட்களில் பணம் வரும். 18-ம்தேதி காலை 6.34 மணி முதல் 20-ம்தேதி மதியம் 12.50 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எவருடனும் வீண் பேச்சுக்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இந்த நாட்களில் கோபமும், எரிச்சலும் கலந்த உணர்வுகளில் இருப்பீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment