Friday, July 1, 2022

தனுசு: 2022 ஜூலை மாத ராசி பலன்கள் #astrologeradityagurujimonthlyrasipalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888 

தனுசு:

கோட்சாரக் கிரக நிலைகள் ஓரளவு சாதகமாக இருந்தாலும், பெரும்பாலான தனுசு  ராசிக்காரர்கள் நல்லவைகளை அனுபவிக்க முடியாமல் சிக்கல்களில் இருக்கிறீர்கள். ஏழரைச்சனியின் தாக்கத்தினாலும் ராசிநாதன் நல்ல பாவகங்களில் கடந்த இரண்டு வருடங்களாக இல்லாத காரணத்தினாலும் தனுசு  ராசிக்கார இளைய பருவத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். அவர்களுக்கு கூட ஓரளவாவது நன்மைகளைத் தரும் மாதமாக ஜூலை இருக்கும். நல்லவை எதுவும் நடக்காமல் கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை இருப்பவர்களுக்கு ஆகஸ்டு மாதத்திற்கு மேல் மேன்மைகள் உண்டு. ராசிநாதன் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு குறை இருக்காது. எதையும் சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும். 

பத்தாமிடம் குருவின் பார்வையா பலம் பெற்று அமைவதால் இந்த மாதம் உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடைபெறும். குறிப்பாக அரசுப்பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது திருப்பமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். ஒருசிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

உங்களில் சிலருக்கு தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் எதுவும் வராது. வீட்டிலும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் நிம்மதி இருக்கும். குருவின் வலுவால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்..செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை நல்ல விதமாக செலவு செய்வது புத்திசாலித்தனம். எனவே  வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் இந்த மாதம் உண்டு.. பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும்.

1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ம்தேதி மதியம்  12.22 முதல் 30 -ம் தேதி மதியம் 12.12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment