கைப்பேசி : +91 9768 99 8888
மீனம்:
ராசிநாதன் குருபகவான் ராசியிலேயே ஆட்சியான அமைப்பில் இருப்பது மீனத்திற்கு நன்மையான ஒரு நிலை. அதேபோல ராஜயோகாதிபதி செவ்வாயும் ஆட்சி நிலை பெற்று இருக்கிறார். செவ்வாயும் ராகுவும் இரண்டாம் இடத்தில் இணைந்திருப்பது பண வரவில் குறைகளை செய்யும் நிலை என்றாலும் கூட தனாதிபதி நல்ல நிலையில் இருப்பதால் பெரிய பணப் பற்றாக்குறை எதுவும் இந்த மாதம் மீன ராசிக்கு வந்து விடப் போவது இல்லை. ஜூலை மாத பிற்பகுதியில் ஆறாமதிபதி சூரியனும் குருவின் பார்வையில் இருப்பதால் ஜூலை நன்மைகளைத் தரும் மாதம்தான்.
இந்த மாதம் பன்னிரெண்டாம் தேதி முதல் சனி மீண்டும் பதினோராம் இடத்திற்கு செல்வதால் ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்லபலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற ஆரம்பங்கள் உண்டு. வயதானவர்களுக்கு பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும்.மீனத்திற்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் மாதம் இது. தந்தை வழி உறவினருடன் உரசல்கள், கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இனிமேல் நல்லவை நடக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சகாய ஸ்தானாதிபதி சுக்கிரன் சூரியனுடன் இருப்பதால் சிலருக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைக்கும்.
என்ன பிரச்னை என்றாலும் கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டில் ஆகி லாபம் வரும். சிலருக்கு வெளிநாடு தொடர்பான காண்ட்ராக்ட் விஷயங்கள், இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பெட்ரோல் போன்ற விஷயங்கள் குறிப்பாக அரபு நாடுகள் தொடர்பான விஷயங்களில் வெற்றிகளும், லாபங்களும் இருக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்தும் கிடைக்காத சில விஷயங்கள் இப்போது சுலபமாக கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைக் கண்டாலே ஒளிந்து ஓடுவார்கள்.
4,8,9,12,14,18,21,22,26,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 08-ம்தேதி காலை 12.22 மணி முதல் 10-ந்தேதி காலை 4.21 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்துடனும் நிதானத்துடனும் செயல்படுவது நன்மையை தரும்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :
Post a Comment