Monday, May 2, 2022

சிம்மம்: 2022 மே மாத ராசி பலன்கள்

 

#adityagurujimonthlyrasipalan

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888 

சிம்மம்:

மே மாத பிற்பகுதி முதல் சிம்மத்தின் குறைகள் தீரும். கடந்த சில வாரங்களில் தொழில், வேலை போன்றவைகளை வழக்கம்போல செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தவர்களின் வேதனைகள் தீரும் மாதமிது. மாத பிற்பகுதியில்  ராசிநாதன் சூரியன் பகைவரான ராகுவிடம் இருந்து விலகி தனியே இருக்கும் நிலை பெறுவதால், 15-ஆம் தேதிக்கு பிறகு உங்களில் சிலர் வயது, தகுதி, இருப்பிடத்திற்கு ஏற்றார்போல தொழில், குடும்பம் போன்றவற்றில் நன்மைகளை அனுபவிப்பீர்கள். சிம்மத்திற்கு நன்மைகளைத் தரும் மாதம் இது

ராசிநாதன் சூரியனுக்கு ராகுவின் இருள் தொடர்பு விலக உள்ளதால் இன்னும் இரண்டு வாரங்களில் உற்சாக நிலையை அடைவீர்கள். உங்களில் சிலருக்கு வேலை செய்யும் இடங்களிலும் தொழில் அமைப்புகளிலும்  மறைமுகமான எதிரிகள் உருவானாலும் அவர்களது முயற்சி பலிக்காது. சிம்மத்திற்கு இனிமேல் எதிலும் தோல்வி இல்லை. அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன்  மேலோங்கிய நிலையில் இருக்கும். குடும்ப ஸ்தானம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். துணைவர் விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் விலகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்களால் குடும்ப ஆண்கள், குடும்பத் தலைவிகளான பெண்கள் எத்தனை பொறுப்பானவர்கள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விஷயத்தில் கவனம் சிதறும். இளைய பருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். சுக்கிரன் வலுப்பெறுவதால் பெண்கள் விஷயத்தில் லாபம் இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. உங்களில் சிலருக்கு இந்த மாதம் எதிர்பாராத இடத்திலிருந்து கிடைக்கும் உதவியால் நல்ல திருப்பங்களும் வரவுகளும் இருக்கும். சிலருக்கு இனி வரப் போகும் நன்மைகளுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இப்போது தெரியும். பொருளாதார பாதிப்பில் இருந்து நீங்கள் வெளியே வரும் மாதம் இது.

1,2,3,5,6,15,19,20,26,28,30 ஆகிய நாட்களில் பணம் வரும். 24 ம் தேதி மாலை 4.27  முதல் 27 ம் தேதி அதிகாலை 12.38 மணி வரை  சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகளோ நீண்ட தூரப் பிரயாணங்களோ வேண்டாம். யாருடனும் வாக்குவாதமோ சண்டையோ செய்யாதீர்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.    

No comments :

Post a Comment