ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
ராசிநாதன் புதன் மாத ஆரம்பத்தில் சூரியனுடன் இணைந்து நீச்ச நிலையில் இருப்பதால் சிலவிஷயங்கள் உங்கள் கையை மீறி நடக்கும். ஆனாலும் யோகாதிபதி சுக்கிரன் ஒன்பதில் பலம் பெறுவதால் அனைத்து நல்ல விஷயங்களும் உங்களுக்கு உண்டு. மிதுனத்திற்கு இது தொல்லைகள் இல்லாத மாதம்தான். சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. சுக்கிர, குரு சேர்க்கையால் ஏதேனும் ஒரு விஷயத்தில் பதற்றப்பட்டு முடிவெடுத்து அது தவறாகி போவதற்கு வாய்ப்பு இருப்பதால் எங்கும், எதிலும் நிதானத்துடன் இருங்கள். நீங்களே ஏதாவது தவறாக முடிவெடுத்து வாய்ப்புகளை நழுவ விடுவீர்கள்.
மாதத்தின்
முற்பகுதியில் பிள்ளைகளால் செலவுகளும், பிற்பகுதியில் அவர்கள்
மூலம் நன்மைகளும் இருக்கும். கலைத்துறையினருக்கு சற்று சுணக்கமான மாதம்தான்
என்றாலும்,
உங்களுடைய
கடின உழைப்பு என்றுமே வீண் போகாது. அரசுத் துறையினர் இந்த மாதம் நல்ல திருப்புமுனைகளைச்
சந்திப்பீர்கள். அஷ்டமச்சனி நடப்பதால் அதிர்ஷ்டத் தடைகளும், வரவேண்டிய
தொகை வராமல் இழுப்பதும், பிள்ளைகள் வழியில் மனச்சங்கடங்களும் இருக்கும்.
சுக்கிர வலுவால் எதையும் சமாளிப்பீர்கள்.
இளைஞர்களுக்கு இது வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கும் காலம் என்பதால் எதிலும்
அகலக்கால் வைக்காமலும் அவசரப்படாமலும் இருப்பது நல்லது. அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு
மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முதுகுக்குப் பின்னால் குழி பறிக்கும் வேலைகள்
நடக்கும் என்பதால் எதிலும் உஷாராக இருங்கள். முறைகேடான பணம் வரும் நிலையில் அதிக
கவனம் தேவைப்படும். பழகிய ஒருவர் எதிரியாக மாறுவார்.
கணவன் மனைவி இடையே
கருத்து வேற்றுமைகளையும், குடும்பத்தில் சில தேவையற்ற பிரச்னைகளையும் சனி
செய்து கொண்டு இருக்கிறார். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போங்கள். மனைவி
பேச்சைக் கேட்பதால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது. உங்கள் கௌரவமும் பாழாகாது.
அஷ்டமச் சனி நடப்பதால் பத்தொன்பது மிளகை முடிச்சாக கட்டி அந்த முடிச்சை புது மண்
அகல்விளக்கில் இட்டு நல்லெண்ணெய் ஊற்றி காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் ஏற்றுவதும்
சிரமங்களை குறைக்கும்.
3,4,5,8,9,17,18,19,25,26
ஆகிய நாட்களில் பணம் வரும். 23-ந்தேதி அதிகாலை 1.52 மணி முதல் 25-ந்தேதி காலை 5.29
மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் புதிய முதலீடுகளோ, முயற்சிகளோ
செய்வதை தள்ளி வைப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் யாரிடமும்
சண்டையோ,
வீண்
வாக்கு வாதமோ செய்ய வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
.jpg)
No comments :
Post a Comment