கைப்பேசி : +91 8286 99 8888
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் மாத பிற்பகுதியில் உச்சம் பெறுவது உங்களுக்கு அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்ககூடிய வகையில் இந்த மாதத்தை அமைத்து தரும். சுக்கிரவலுவால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்ல பலன்கள்தான். முப்பது வயதுகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் உங்களுக்கு எப்போதுமே உண்டு.
இளையவர்களுக்கு
அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல
எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் அமையும். செலவுகளும்
அதற்கேற்ற வருமானமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உறவினர் வருகையும்
இருக்கும் என்பதால் வீடு கலகலப்பும், சிரிப்புமாக
இருக்கும். பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வீட்டிலும்
அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே அதிகம் இருப்பார்கள்.
வியாபாரிகளுக்கும், சுயதொழில் செய்பவர்களுக்கும் வருமானம் வரும்
ஆனால் சேமிக்கத்தான் முடியாது. அரசியல்வாதிகளுக்கும், காவல்
துறையினருக்கும் ஏற்றம் தரும் மாதம் இது.
கணவன் மனைவி உறவு
சுமுகமாக இருக்கும். குடும்பத்தாரோடு சேர்ந்து வெளியூர் பயணம் செல்வீர்கள். சில
புதிய அறிமுகங்கள் இப்போது உண்டு. இளைய பருவத்தினருக்கு பொருளாதார நிலைமை
மேம்படும். எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட
நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். சிலருக்கு
ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு
போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும்
முதல் திருமணம் கசப்பில் முடிந்து விவாகரத்து ஆனவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான
சம்பவங்கள் இருக்கும். குலதெய்வ வழிபாட்டை தள்ளிப் போட்டு வந்தவர்கள் உடனடியாக
அதைச் செய்வது நல்லது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தும் குலதெய்வமே
நம்மைக் காப்பாற்றும்.
1,2,3,4,12,13,14,16,18,19
ஆகிய நாட்களில் பணம் வரும். 4-ந்தேதி இரவு 9.01 மணி முதல் 7-ந்தேதி காலை 9.09 மணி வரை
சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே
நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
.jpg)
No comments :
Post a Comment