கைப்பேசி : +91 8286 99 8888
விருச்சிகம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் உச்ச நிலையில் இருப்பது விருச்சிக ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. அதைவிட மேலாக வேலை மற்றும் தொழிலுக்கு அதிபதியான சூரியன், குருவின் இணைவால் சுபத்துவமாக இருப்பதால் இதுவரை வேலை,தொழிலிடங்களில் சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கின்ற மாதம் இது. குறிப்பாக விருப்பமில்லாத பணியில் அனைத்தையும் சகித்துக் கொண்டு வேலை செய்யும் இளைஞர்களுக்கு இப்போது மாற்றங்கள் வரும்.ராசிநாதன் செவ்வாய் சுக்கிரனோடு இணைந்திருப்பது
பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பதைக் காட்டுகிறது.
குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும்
பங்குதாரர்கள் வழியில் லாபங்கள் உண்டு. குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால்
உங்களின் தேவைகள் நிறைவேறும். உச்ச செவ்வாய் பணியிடங்களில் உங்களை ஆத்திரமூட்டி
பார்ப்பார் என்பதால் எந்தவிதமான கோபத்திற்கும் ஆளாகாமல் பணிவாக இருப்பது நல்லது.
அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வவாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள்
மூலம் சந்தோஷமான விஷயங்கள் இருக்கும். கொடுக்கும் வாக்குறுதியைக்
காப்பாற்றுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி
புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.
மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள்
நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.
ராசி வலுப்பெறுவதால் கருத்து வேறுபாடுகள்
ஏற்பட்டு பிரிந்திருந்தவர்கள் மீண்டும் சேருவீர்கள். தொழில் சிக்கல்கள் சரியாகும்.
சிலருக்கு அதிகமுயற்சி இல்லாமலே சில காரியங்கள் நடந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு வாழ்க்கை
லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. வேலை
தேடும் இளைய பருவத்தினருக்கு
விருப்பமில்லாத அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில்
இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment