ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 8286 99 8888
மிதுனம்:
அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் துவண்டு போயிருக்கும் மிதுன ராசியினருக்கு பிப்ரவரி மாத முன்பகுதியில் சுணக்கமான பலன்கள் இருந்தாலும், குருவும், சுக்கிரனும் ராசியை பார்ப்பதால் மாத பிற்பகுதியில் நீங்கள் சுறுசுறுப்பாகி அனைத்தையும் சாதிக்கின்ற மாதமாக இது இருக்கும். சிலருக்கு 15-ம் தேதிக்கு மேல் நல்ல மாற்றங்களும் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நடப்பதும் இருக்கும். எதிர்ப்புகளைக் குறிக்கும் கிரக அமைப்புகள் வலுவிழப்பதால் உங்களுடைய உடல், மனம் இரண்டும் புத்துணர்ச்சியுடன் உற்சாகத்துடன் இருக்கும். பணிபுரியும் இடங்களில் பிரச்சனைகள் எதுவும் வராது.
தொழில், வியாபாரம், வேலை செய்யுமிடங்களில் இருந்து
வந்த அதிருப்தி, ஏமாற்றம் ஆகியவை விலகி
மனம் போல காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக குழந்தை பிறக்காதவர்களுக்கு
இன்னும் ஆறு மாதத்திற்குள் குழந்தை உருவாகும். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும்
இருக்கும். சிலருக்கு கையில் இருந்த சேமிப்பு கரையும். அதேநேரத்தில் வாழ்க்கைக்குத்
தேவையான விஷயங்களில்தான் செலவுகள் இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான
அடிப்படைக் கட்டமைப்புக்கள் இந்தமாதம் உண்டு. வேறு இன மொழி மதக்காரர்கள் உதவியாக
இருப்பார்கள்.
வாக்கு ஸ்தானம் வலுவாக
இருப்பதாலும், ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தை சுபத்துவ செவ்வாய் பார்ப்பதாலும் எவ்வித
சிக்கல்களும் வராமல் அனைத்தையும் ஜெயிப்பீர்கள். கலக்கங்கள் எதுவும் இன்றி நீங்கள்
கலக்கும் மாதம்தான் இது. அஷ்டமச் சனியினால் கடன் தொல்லைகளையும், வருமானக் குறைவையும், தொழில் சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அது நிவர்த்திக்கப்
படும். இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும்,
உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும்
இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும்.
மாணவர்களுக்கு ஓரளவாவது படிப்பில் அக்கறை இருக்கும். கலைஞர்களுக்கு இந்த மாதம் சிறந்த
மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888
No comments :
Post a Comment